ரயிலின் வருகையைப் பற்றி
கவலைப்படாமல் தண்டவாளத்தில்
ஊறுகின்றன சில எறும்புகள் .
நெருங்குகின்ற ரயிலை
நிறுத்துவதெப்படி
என்று எண்ணித்
தோற்கிறேன்.
இரைச்சலோடு
கடந்து செல்கிறது
அந்த நீள ரயில்.
அப்போது எதிர்பாராமல்
பெய்த மழையில்
எறும்புகளுக்கு என்னவாயிற்று
என்கிற கவலை
மறந்து மழைக்கு
ஒதுங்க இடம் தேடி
அலைகிறது மனம்.
Saturday, May 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Beautiful!
Hello..
ur posts are all interesting and realli beautiful.
however i am having lotsa difficulty trying to read the tamil .. not cos i dnt knw hw to read them bt i guess its the font..
anyways, gd werk :)
எதார்த்தத்தின் அழகிய வெளிப்பாடு..
ஏனோ "அவரவர் வாழ்க்கை"... என்பதை விட "எதார்த்தம்
' என்ற தலைப்பு சரியென படுகிறது.
மனிதன் சுயநலமாய் இல்லாமல் .. எறும்பை காப்பாற்ற யோசித்துள்ளான். .. ரயில் கடந்து சென்ற பின் .. எறும்பின் இறப்பின் படிப்பினையாக தன்னை மழையில் இருந்து காத்துக்கொள்கிறான்.
Post a Comment