நிலம்பார்த்து தலைகவிழ்வதே
வெட்கம் என்று எண்ணியிருந்த
எனக்கு
விதவிதமாய் வெட்கப்பட
சொல்லிக்கொடுத்தவன்
நீ.
அஞ்சனம் சிறிதெடுத்து
என் கன்னத்திலிட்டு
நம் காதலுக்கு இது
திருஷ்டிபொட்டு என்றுசொல்லி
மெதுவாய் என் கன்னம்தட்டி
சிலிர்க்கவைத்தவன்
நீ..
இலைகளில் தங்கியிருக்கும்
பனித்துளிகள் சேகரித்து
என் முகம்துடைத்து
"பனித்துளியில் குளித்த
பூ இவள்" என்று காதோரம்
கவிதைமொழிந்து
ஆனந்தக்கண்ணீர் சிந்தவைத்தவன்
நீ..
உனக்கே நானென்ற
எண்ணத்தில் தீ எறிந்து
சென்ற உறவுகளால்
உன்னைவிட்டு பிரிக்கப்பட்டு
திருமணம்முடிக்கப்பட்டு
ஜன்னல்கம்பிகள் வழியே
மழைக்குள் உன்னைத்
தேடுகின்றேன் நான்.
-நிலாரசிகன்.
Wednesday, August 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
vitham vithamai rasithu, kaadhalithu pin perinthu ponaal eapadi irukkumo antha oru valiyai unarnthen intha kavithai padikkum manithulieil.
Kattaya paduthaamal vanthu vidukerathu un ninaivu,
Mazhai thuliyai rasikkum pothu...
Kavithaigaludan,
Nila.
kadhal murinthan manadu valikiradu
adai kavithaiyai padikum podhu...
manadhodu udalum valikiradu
kavidhai rasigan
"jannal kambigal vazhiyae,mazhai thulikkul unnai thaedukirane" yendra variyil unarnthu kondane antha pirivin vazhiyinai !!...
snegamudan,
Nirandhari.
Nesithathu mazhaiaium, kaadalanaium. Tholaintha kaadalanai mazhaikkul thedum vitham arumai...
அழகான கவிதை நிலாரசிகன்.
பிடித்த வரிகள் இவை:
//ஜன்னல்கம்பிகள் வழியே
மழைக்குள் உன்னைத்
தேடுகின்றேன் நான்.//
பாராட்டுகள்.
Post a Comment