துப்பாக்கியின் கடைசி
தோட்டா எப்போது
தீருமோ என்று ஒருபோதும்
கலங்கியதில்லை.....
குண்டடிபட்டு விழுந்த
தோழனை தோளில்
சுமந்து சென்றபோது
எதிர்தாக்குதலில் மடிவேனோ
என்று ஒருபொழுதும
எண்ணியதில்லை...
வெற்றி ஒன்றே குறியாய்,
குறிக்கோளாய் முன்னேறுகையில்
தோல்வி குறித்த செய்தி
செவிகளில் விழுந்தபோதும்
மீண்டெழுவோமா என்று
ஒரு பொழுதும்
நினைத்ததில்லை...
முட்களுக்கு நடுவே
வாழ்கின்ற இவ்வாழ்க்கையில்
"உன் குரல்கேட்பேனா" என்று
உயிர்தொட்டு நீ எழுதிய கடிதம் களத்தில்
தொலைந்துவிட்டதை எண்ணித்தான்
கலங்கிநிற்கிறேன் கண்மணி!
Monday, September 03, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தோட்டாக்களுக்கு மத்தியில் தான் வாழ்க்கை என்ற போதும் தன்னவளுக்காய் ஏங்கும் இதயத்தின் வலி சொல்ல வார்த்தைகள் இல்லை. என் மனம் கனத்துப் போனது, படித்த நிமிடத்தில்...
கவிதைகளுடன்,
நிலா.
" Uyir thottu aval yezhuthiya kaditham kaanamal avan kalangi nirkkaiyil nanum kalangivittane"
Snegamudan,
Nirandhari
Coimbatore.
Post a Comment