Monday, September 10, 2007
நிராகரிப்பின் வலி....
1. கண்ணுக்குள் விழுந்துவிட்ட
தூசி நீ.
உன் உறுத்தலும் கூட
உரிமை என்றே எண்ணித்தவிக்கிறது
என் இதயம்.
2.பூக்கள் பறிக்கும்
சிறுமி என்ற மகிழ்வுடன்
உன் கைகளில் விழுந்து
துடிக்கிறது
என் இதயப்பூ.
3.தவிர்த்தலுக்கென்றே ஒரு
பார்வை வைத்திருக்கிறாய்
நீ.
தவிப்பதற்கென்றே ஒரு
இதயம் வைத்திருக்கிறேன்
நான்.
4. நிராகரிப்பின் வலி
உணரவேண்டுமா?
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்.
பதிலேதும் பேசாத மெளனத்தால்
உணர்த்துகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சத்தியமான வலிகளை
வார்த்தைகளாய் மொழிபெயர்த்து
கவிதையாய் பதிவு செய்யும்
இந்த பணி அழகானது
நிலா ரசிகன்!
"Niragarippin vali" kavithai varigal konjam aazhamagavae bathithu vittathu yennai.....
snegamudan,
Nirandhari
coimbatore.
ஈரம் காய்வதற்குள் தங்கள் பின்னூட்டம் கண்டு அகமகிழ்ந்தேன்..
மிக்க நன்றி நித்யா,Nirdanhari.
மின்அஞ்சல் வழியாக உங்களுடைய் கவிதைகளை நிறைய படித்திருக்கிறேன். இப்பொழுதுதான் உங்களுடைய இணையதள முகவரி கிடைத்தது.......ஒரு நல்ல புத்தகம் கிடைத்த திருப்தி
"நிராகரிப்பின் வலி
உணரவேண்டுமா?
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்.
பதிலேதும் பேசாத மெளனத்தால்
உணர்த்துகிறேன்."
இந்த கவிதையில் வெளிப்படும் மெளனம் நிராகரிப்பின் வலியை அழுத்தமாய், அதே சமயம் ஆழமாய் உணர்த்துகிறது.அருமை...
நிலவின் நினைவில்,
சாஸ்வதா.
வலிகளை இவ்வளவு மென்மையாக உணர்த்தமுடியுமா? அனைத்து கவிதையிலும் காதலும் அதன் வலியும் மிக அழகாக பதித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
Post a Comment