சாய்வு நாற்காலியில்
மருகிக்கிடக்கிறது
உடல்.
அசைகின்ற தென்னங்கீற்றின்
சங்கீதத்தில் சங்கமிக்கிறது
மனம்.
வாசற்கதவு திறக்கும் சத்தம்கேட்டு
எழ எத்தனித்து முடியாமல்
தளர்கிறது உடல்.
யாராக இருக்கக்கூடும் என்கிற
எண்ணம் வளர்ந்து பெருகி
யாரென்று அறியும்வரை
அடங்காமல் தவிக்கிறது
மனம்.
உடலுக்கும் மனதிற்குமான
இடைவெளி அதிகமானதை
செவிகளில்
உணர்த்துகிறது இதயத்துடிப்பின்
சத்தம்.
முதுமையிலும் தளராமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது
உள்ளுக்குள் ஒரு ஜீவநதி.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வயதான மனங்களின் எண்ணத்துடிப்பைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
//உடலுக்கும் மனதிற்குமான
இடைவெளி அதிகமானதை
செவிகளில்
உணர்த்துகிறது இதயத்துடிப்பின்
சத்தம்.//
உணர வைத்திருக்கிறீர்கள் இந்த வரிகளில், அந்த வலியை.
//முதுமையிலும் தளராமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது
உள்ளுக்குள் ஒரு ஜீவநதி.//
மொத்தத்தில், முதுமையின் தனிமையை உணர்த்தியிருக்கிறீர்கள்.
- சகாரா.
ovvoru manithanudaiya muthumaiyum ippadithan yendru kan munnae niruthiyamikku nanri... azhagana padaippu...
snegamudan,
Nirandhari.
உணர்வுகளின் வரி(லி)களின் படைப்பு இது.
Post a Comment