Thursday, December 13, 2007
கருவறை யுத்தமடா என் காதல்!
1.தன்
கூடு சுமந்து
நகரும் நத்தைபோல்
உன்
காதல் சுமந்து
நகரும் தத்தை
நான்.
2. உன் காதல்
பருகி உயிர்வாழும்
சக்கரவாகம்
நான்.
3.நீ முத்தமிட்டு
பரிசளித்த கொலுசுகள்,
இசைக்க மறந்து
சிணுக்கிவிடுமே
என்றுதான் சொல்லாமல்
வைத்திருக்கிறேன்
உன் பிரிவை.
4.நான் குள்ளம்
என்று கவலைப்படும்
அம்மாவிடம் என்ன
சொல்லி புரியவைப்பது
உன் நெஞ்சில்
இதழ் பதியும் உயரம்தான்
நான் விரும்புவதென்று!
5.வயிற்றில் சுமந்தபோது
அதிகம் மிதித்தேன்
என்று அம்மா அடிக்கடி
சொல்வாள்.
உன்னைச் சந்திக்க
கருவறையிலேயே துவங்கிவிட்டதோ
என் யுத்தம்?
6.விரைவில்
உன்னைச் சேர
ஆறு மாதங்களாய்
பிரகாரம் சுற்றுகிறேன்.
காதலுக்குத்தான் இரக்கமில்லை
கடவுளுக்குமா?
7. சுயம்வரமின்றி கவர்ந்து
சென்றுவிடு என்கிறேன்.
புரவி வாங்க பொருள்
சேர்க்கிறேன் என்று
மறைந்துவிட்டாய் நீ.
8. இளவரசியாய் வீட்டுச்சிறையில்
வசிப்பதை விட
இதழரசியாய் உன்னுடன்
இணைவதையே அதிகம்
விரும்புகிறது மனசு.
9. காதலை தந்துவிட்டு
உறக்கத்தை கொள்ளையிட்டுப்
போய்விட்டாய்.
கனவுகளுக்குகூட வழியில்லாமல்
கண்ணீராகிறது என்
இரவு.
10. பூவொன்றை கொய்வதுகூட
சாத்தியமற்றுப்போகலாம்
பூச்சூட நீ வருகின்ற
வரையில்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
சக்கரவாகம் ?
/சக்கரவாகம்/
மழையை அருந்தும் ஒரு பறவையின்
பெயர்.
//பூவொன்றை கொய்வதுகூட
சாத்தியமற்றுப்போகலாம்
பூச்சூட நீ வருகின்ற
வரையில்//
Nice...
நிலாரசிகன்,
உணர்வுகள் அருமையான கவிதைகளாக பதிக்கப்பட்டு இருக்கின்றன
வாழ்த்துக்கள்
தினேஷ்
naanum 6months kovil kovila suthinen, but i din get my guy..
he got married 2wks before..
And he is living with me in my dreams, as the one who loves me only. Pirinjutomnu naan feel panala, epovachum azha varumbodhu, i will hear him(when i close my i eyse, i see him thr) telling "I am wit u only, i love u only, don cry". I m talkin with him, and living wit him in my dreams
unga kavidhaigal, ipdi ennoda agavaazhkaya inga solla vechuducu..
grt job is urs!
//காதலுக்குத்தான் இரக்கமில்லை
கடவுளுக்குமா?
//
அது சரி! :)
//புரவி வாங்க பொருள்
சேர்க்கிறேன் என்று
மறைந்துவிட்டாய் நீ.
//
அழகான முரண்!
//கனவுகளுக்குகூட வழியில்லாமல்
கண்ணீராகிறது என்
இரவு.
//
உருக்கம்!
//பூவொன்றை கொய்வதுகூட
சாத்தியமற்றுப்போகலாம்
பூச்சூட நீ வருகின்ற
வரையில்.//
அழகு!
உணர்வுகளை அழகா காட்டியிருக்கீங்க. சில உணர்வுகளுக்கு வார்த்தை தேடி கிடைக்கமா , நான் விட்டதையும் நீங்க அழக எழுதியிருக்கீங்க. ஒரு ஆணா இருந்து ஒரு பெண்ணொட தவிப்பை கவிதைகள் ஆக்கியதற்கு மிக்க நன்றி.
:)
Post a Comment