Tuesday, January 08, 2008
பூக்களில் உறங்கும் மெளனங்கள்...
உன்னிடம் மென்மை
எதிர்பார்த்து ஏமார்ந்து
முள்ளில் விழுந்த பூவென
நான் துடிக்கும் தருணங்களில்
தட்டானின் சிறகுகளை
பிய்த்தெறியும் ஒரு சிறுவனைப்போல்
எவ்வித குற்றவுணர்வுமின்றி
எனை ஆட்கொள்கிறாய் நீ.
ரசனைகளும் எதிர்பார்ப்புகளும்
நசுங்கியதில் வார்த்தைகளிருந்தும்
ஊமையாகிறது என் பெண்மை.
ஆயுதமற்ற போர்க்களத்தில்
தினம் தினம் பூக்கள் சுமந்து
வந்து சருகாகித் திரும்புகிறேன்.
கானல்நீரில் எதிர்நீச்சலடிக்க
இயலாமல் விடியலுக்காக
காயங்களுடன் காத்திருக்கிறேன்
பூக்களில் உறங்கும் மெளனமாக.
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
அருமை!
வாழ்த்துகள்!!
மிக்க நன்றி இப்னு :)
எதிர்பார்த்து ஏமார்ந்த ஒரு நெஞ்சத்தின் துடிப்பை அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.
//வார்த்தைகளிருந்தும்
ஊமை//
சொல்ல முடியாத பல விஷயங்கள் அடக்கம் இந்த வார்த்தைகளில்..
- சகாரா.
நல்லதொரு கவிதை - நன்றி
வாழ்த்துக்கு நன்றி சகாரா,சீனா.
really very fantastic poems
your poems may stimulated love even in rock hearts.
i like your poems a lot
plz keep up
//கானல்நீரில் எதிர்நீச்சலடிக்க
இயலாமல் விடியலுக்காக
காயங்களுடன் காத்திருக்கிறேன்
பூக்களில் உறங்கும் மெளனமாய்.//
ஆழமான வரிகள்....
வாழ்த்துக்கள்...!
//தட்டானின் சிறகுகளை
பிய்த்தெறியும் ஒரு சிறுவனைப்போல்
எவ்வித குற்றவுணர்வுமின்றி
எனை ஆட்கொள்கிறாய் நீ.//
அர்த்தமுள்ள ஆழமான வரிகள்...
நல்ல கவிதை
தினேஷ்
தோழருக்கு வணக்கம்.
என்னை நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை.
//ரசனைகளும் எதிர்பார்ப்புகளும்
நசுங்கியதில் வார்த்தைகளிருந்தும்
ஊமையாகிறது என் பெண்மை.
//
இது உங்கள் நடை! அழகு!
நல்ல கவிதை வழக்கம் போல்.
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
காயம் பட்ட பெண்ணின் மனசைப் பற்றி மென்மையா அழகா சொல்லியிருக்கீங்க....
நன்றி அனானி,சரவ்,தினேஷ்,நாணல்...
//தோழருக்கு வணக்கம்.
என்னை நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை.
//
வணக்கம் தோழா,
மன்னிக்கவும் எனக்கு ஞாபக மறதி அதிகம்.... :)
நாம் சந்தித்திருக்கிறோமா?
சந்தித்ததில்லை இதுவரை.
ஆனால் நம்பிக்கை குழுமத்தில் நானும் ஒரு உறுப்பினன்.:) தற்பொழுது என்னுடைய பங்களிப்பு ஏதுமில்லை எந்தக் குழுமத்திலும்!
"nice"
nirandhari shanmugam
nandru therivu seytha varthaykalil valiyin vedhanayai unargiren...valthukkal....valarattum kavithaygal
Post a Comment