Sunday, November 30, 2008

மழை ரசித்தவர்கள்

மழை பிடிக்கும் என்றீர்கள்
மழையுடன் தேநீர் அருந்துவது
சொர்க்கம் என்றுரைத்தீர்கள்
மழைக்கென கவிதைகள்
ஆயிரம்எழுதிக் கிழித்தீர்கள்.
வெள்ள நீரில் மிதக்கும்
குடிசைகளை உங்களது
இறுக மூடிய பங்களாக்களிலிருந்து
பார்த்தபடி
மற்றோர் கவிதை எழுத துவங்குகிறீர்கள்.
உங்கள் கவிதைபோலவே
ஆயிற்று மனிதமும்.

14 comments:

said...

ஆம். பன்னீர் தூவுவது போல சாரல் அடித்தால், அதைப் பாராட்டிப் பாடுவதும், அதுவே பாதைகளை மூழ்கடிக்கும்போது, பாய்ந்து ஏசுவதும் பழக்கமாகி விட்டது என்பது தான் உங்களது ஆதங்கம் என்றால்...மிகச் சரியாக சொல்லி விட்டீர்கள்! நனைந்து விட்டேன். நன்றி.

தமிழன் வேணு

said...

அருமை

Anonymous said...

excellent

said...

Beautiful

Anonymous said...

Beautiful Kavithai Sir.

said...

உங்கள் கவிதைபோலவே
ஆயிற்று மனிதமும்.

அருமை....

Anonymous said...

Excellent one, as usual

said...

சுள்ளென பட்டுத் தெறிக்கும் வெயில் போன்ற வரிகள்.

said...

அறைகிறது கவிதை.
இது கவிதை.

said...

வாழ்த்திய அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

said...

சுரீர் எனத் தைக்கும் கவிதை.

பாராட்டுக்கள்.

Anonymous said...

Very nice Nila....

Anonymous said...

Ungalai polave ungaladhu kavidhaiyum azhagu..


Urugi nirkiren... adithadhu pol irundhadhu ungal arumayana varigal..

Nandri nila

said...

உண்மைதான்.மழை கூட இனிமேல் சுடும் என்று நினைக்கிறேன்.:(