Wednesday, December 31, 2008

நிலா விருதுகள் 2008

ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் நான் அதிகம்
எதிர்பார்ப்பது ஆனந்தவிகடனில் சுஜாதா அவர்களின்
விருதுகளைத்தான். இவ்வருடம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்
அந்த காந்த எழுத்தாளர். அவருக்கு அஞ்சலியுடன்
இந்தப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

[இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட Judgement]


விளையாட்டு :


சிறந்த கிரிக்கெட் அணிகள் : தென்னாப்ரிக்கா,இந்தியா

சிறந்த மட்டையாளர் : கெளதம் காம்பீர்

சிறந்த பந்துவீச்சாளர் : ஸ்டெயின்

சிறந்த பீல்டர் : ரிக்கி பாண்டிங்

சிறந்த கேப்டன் : தோனி

சிறந்த வர்ணனையாளர் : ரவி சாஸ்திரி

சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் : சச்சின் டெண்டுல்கர் 103* இங்கிலாந்துக்கு எதிராக, டும்னி 166 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.

சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் : சச்சின் டெண்டுல்கர் 117 முதல் பைனலில் - எதிரணி ஆஸ்திரேலியா

சிறந்த டி20 இன்னிங்ஸ் : கிறிஸ் கெயில் 67 ரன்கள் - எதிரணி நியுசிலாந்து

சிறந்த மைதான வாசகம்: ""Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord is watching." சிட்னி மைதானத்தில் டெண்டுல்கர் விளையாடியபோது காணப்பட்டது.

சிறந்த விக்கெட் : ரிக்கி பாண்டிங்ஐ போல்ட் ஆக்கிய இசாந் சர்மாவின் பந்துவீச்சு

சிறந்த புதுமுகம்: அஜந்தா மெண்டீஸ் - இலங்கை.


சிறப்பு விருது : அபிநவ் பிந்ரா,விஸ்வனாதன் ஆனந்த் மற்றும் சீனாவிற்கு(தொடர்ந்து ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவை 2ஆம்
இடத்திற்கு தள்ளியதற்காக)

சொதப்பல் விருது: ஹர்பஜன் சிங்( ஸ்ரீசாந்தின் கன்னத்தை மைதானத்திலேயே பதம் பார்த்ததால்) மற்றும் BCCIக்கு -தொடர்ந்து
ICLஐ தடை செய்து வருவதற்கு.


இலக்கியம்:

சிறந்த கவிதை தொகுப்பு :கவிஞர்.இளங்கோ கிருஷ்ணனின் "காயசண்டிகை" [காலச்சுவடு வெளியீடு]

சிறந்த சிறுகதை தொகுப்பு: தவளைகள் குதிக்கும் வயிறு - வா.மு.கோமு

சிறந்த கட்டுரை தொடர் : தீதும் நன்றும் - நாஞ்சில் நாடன்,தீராநதியில் ஜெயமோகனின் அங்கத கட்டுரை

சிறந்த சிறுகதைகள் : "சாட்டை" - கண்மணி குணசேகரன்,"இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன" -எஸ்.ராமகிருஷ்ணன்

சிறந்த சிற்றிதழ் : மணல்வீடு

சிறந்த புதிய இதழ் : வார்த்தை

சிறந்த புதுமுக கவிஞர்கள் : சகாராதென்றல்,குட்டிசெல்வன்,அனுஜன்யா,லக்ஷ்மி சகாம்பரி,செல்வராஜ் ஜெகதீசன்,ரிசான் ஷெரீப்,பாஸ்கர்

சிறந்த புதுமுக சிறுகதையாளர்கள்: தமிழ்நதி,உமாஷக்தி,அருட்பெருங்கோ

சிறப்பு விருது : சிங்கையிலிருந்து வெளிவரும் நாம் சிற்றிதழுக்கும், இலங்கை இனப்படுகொலையை கண்டித்து
எழுந்த இலக்கிய உலக எதிர்குரலுக்கும்(உண்ணாவிரதம்,ஊர்வலம்)


வலையுலகம்:

சிறந்த நகைச்சுவை பதிவு: துப்பாக்கி தேவை - செல்வேந்திரன்

சிறந்த அறிவியல் புனைக்கதை : வலைப்பதிவர் வெண்பூ எழுதிய "இரண்டாவது மூளை"

சிறந்த சினிமா பதிவுகள் : முரளிக்கண்ணன்

சிறந்த இணைய இதழ்: உயிரோசை

சிறந்த புதுமுகங்கள் : யாழிசை ஒர் இலக்கிய பயணம் மற்றும் அதிஷாஆன்லைன்

சிறந்த யோசனையாளர் : தமிழ்மணம் கருவிப்பட்டை பிரச்சனைக்கு தீர்வு அளித்த வலைப்பதிவர் "யோசிப்பவர்"

சிறப்பு விருது: சிறில் அலெக்ஸ்(அறிவியல் புனைக்கதைகள் போட்டி நடத்தி பல வலைப்பதிவர்களின் கற்பனைக்குதிரைகளை
தட்டி விட்டதற்காக)

சொதப்பல் விருது: காணாமல் போன தேன்கூடுவிற்கு.

சினிமா:

சிறந்த திரைப்படம் : சுப்பிரமணியபுரம்

சிறந்த பிறமொழி திரைப்படம் : தாரே ஜமீன் பர்(ஹிந்தி)

சிறந்த பாடல்வரிகள் : அனல்மேல் பனித்துளி(வாரணம் ஆயிரம்)

சிறந்த பாடலாசிரியர் : தாமரை (வாரணம் ஆயிரம்,சுப்பிரமணியபுரம் திரைப்படங்களுக்காக)

சிறந்த இசையமைப்பாளர் : Harris ஜெயராஜ்(வா.ஆயிரம்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: கதிர்

சிறந்த இயக்குனர் : சசிக்குமார்,சசி

சிறந்த நடிகர்: சூர்யா(வாரணம் ஆயிரம்)

சிறந்த நடிகை: பார்வதி(பூ)

சிறந்த வில்லன்: பிரசன்னா - அஞ்சாதே
சிறப்பு விருது: அஞ்சாதே,தசாவதாரம்,சரோஜா மற்றும் பத்துவேடங்களில் அசத்திய கமலுக்கும்.

சொதப்பல் விருது: குசேலன்(தலைவா இனிமே இந்த மாதிரி ரோல்ல எல்லாம் நடிக்காத,எங்களுக்கு தேவை பாட்சாவும்,படையப்பாவும்தான்
தல - ஒரு பாமர ரசிகனின் வேண்டுகோள்!!)


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நினைத்தது நடந்தேறவும்,கனவுகளும்,லட்சியங்களும்
நிஜமாகவும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

19 comments:

said...

பதிவர்களின் சுட்டியிம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

said...

வலையுலகத்திற்கான விருதுகளில் அந்த பதிவு அல்லது வலைக்கான link கொடுத்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

said...

தற்சமயம் சொந்த ஊரில் இருக்கிறேன்.இங்கே இணைய வேகம் குறைவு என்பதால் சுட்டிகளை தேடி எடுக்க இயலவில்லை நண்பர்களே. நீங்கள் கூகிள் ஆண்டவரிடம் கேளுங்கள் தேடித்தருவார் :)

said...

நன்றி நிலா..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நிலா.

said...

Puthandu Vaazthukal Nilaraseegan!

said...

Hi Nila and All,

wish you a very happy and properous new year!

-Lakshmi B

said...

Vithiyasama Thogupu

Nalla irukku

Puthandu valthukkal

sugu

said...

வலை உலகம்- சிறந்த புதுமுகம் - யாழிசை ஒரு இலக்கிய பயணம்.

இவர் சிறந்த புதுமுகம் ஆனால் கூடிய விரைவிலேய எல்லாராலும் கவனிக்கப் படகூடியவர், படிக்க பட கூடியவர் என நம்புகிறேன்.

இவரின் பதிவுகள் அனைத்தும் மிக அருமை.

குப்பன்_yahoo

said...

நன்றி நிலா ரசிகன்.

இலக்கியம் பற்றி பேச நண்பர்கள் கிடைக்காமல், வலை உலகம் குறித்து எதுவும் தெரியாமல் எழுத துவங்கினேன்.வலைத்தளம் தொடங்கிய பின்பு கிடைத்த நட்புகள் அறிதானவை.இலக்கியம்,சினிமா,அரசியல் என அத்தனையும் குறித்த பொது பார்வையை அறிய முடிந்தது.

படித்து ரசித்த இலக்கியங்களை யாவரோடும் பகிர்ந்து கொண்டு,விவாதிக்கும் சந்தோஷ தருணங்கள் முன் போல எப்போதும் தொடர வேண்டும்.மீண்டும் நன்றி.


குப்பன் யாகூ மிக்க நன்றி,உங்களின் தொடர் ஊக்கத்திற்கும்,தோழமைக்கும்.

said...

அருமையான தொகுப்பு..... சுஜாதாவின் இடத்தை நிரப்புவது என்பது கொஞ்சம்(?) கடினம் தான் .... ஆனாலும் நல்ல முயற்சி... வாழ்த்துக்கள் நண்பரே...

Anonymous said...

The award selections are quite good.

Few people are keeping e-tamil alive and you are also part of it.

I like to write but because of time constarints and typing in tamil is bit hard(i felt, if u have any easy way please let me know).


Keep doing....
All the very best and Happy 2009,

by
Dinesh Vel
Singapore.....

said...

நல்ல முயற்சி.

சுஜாதாவைப் போலவே,
விருதிற்காக விஷயத்தை தேடிப்பிடிக்காமல் - விஷயத்திற்காக விருதுகளை தேடிப் பிடித்திருக்கிறீர்கள்.

விகடனோடு சில இடங்களில் பொருந்திப் போகிறது உங்களது தேர்வுகள்.

Anonymous said...

உங்களைச் சந்திக்க வேண்டும் என்று பல நாள்களாக எண்ணம். முடிந்தால் 9865073140 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.

அன்புடன்,
அருட்புதல்வன்.

என் வலைதளம் :www.aaraamnilam.blogspot.com

said...

சிறப்பான தொகுப்பு. நன்றி

said...

வந்தவர்களுக்கும்,கருத்துரைத்தவர்களுக்கும் நன்றி
:)

said...

நிலாரசிகன், தங்களது அன்பிற்கு நன்றி.

said...

சுஜாதா விருதை மிஸ் பண்ணினாலும் இனிமே உங்க விருதுக்கு பரிந்துரை செய்யலாம் போலிருக்கிறது.

அனைத்து தகுதி வாய்ந்ததே.

புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் சிறப்பு வாழ்த்துக்கள் நிலா விருது பெற்ற அனைவருக்கும்....

said...

// சிறந்த சிறுகதை தொகுப்பு: தவளைகள் குதிக்கும் வயிறு - வா.மு.கோமு
//

நல்ல புத்தகத்திற்கு ஓர் நல்ல விருது.
Thanks!! :)

said...

yenakkum analmele paniththuli.....ishtam:)

saharaththentral... remba pidikkum!!