Wednesday, February 04, 2009

மனசை பற்றிய சில குறிப்புகளும்,கேள்விகளும்...


1.குரங்கின் பரிணாமம் மனிதனாக மாறியது.மனசை தவிர.
2.மனதிற்கு காயங்களை தந்துவிட்டு கண்ணீரை மட்டும் சிந்துகிறது விழிகள்.
3.உடலில் எங்கிருக்கிறது இந்த வெட்கம் கெட்ட மனசு?
4.ரசனைகளை நசுக்கும் கால்களின் பாதைகளிலும் பூக்கள் மலரவே வாழ்த்துகிற மனசை என்னசொல்லி திட்டுவது?
5.தவிர்த்தலை பரிசளிக்கும் இதயங்களை மறக்கும் மனசு எங்கே கிடைக்கும்?
6.ஊனத்தை முன்நிறுத்தி நிராகரித்த வலி மறக்க தேவை மனமா,பணமா?
7.உடைந்த கண்ணாடியில் ஓராயிரம் பிம்பங்கள். உடைந்த மனசில் ஒரே ஒரு பிம்பம்.

14 comments:

said...

குரங்கின் பரிணாமம் மனிதனாக மாறியது.மனசை தவிர.
- Unmaiyoo unmai

உடலில் எங்கிருக்கிறது இந்த வெட்கம் கெட்ட மனசு?
- pala peruku Nakkil mattum

ஊனத்தை முன்நிறுத்தி நிராகரித்த வலி மறக்க தேவை மனமா,பணமா?
- Irandum; Manam oonathinai marakka
panam nijathil vazhala

said...

Awesome.....

Anonymous said...

Awesome......

said...

துயரம் நிரம்பி வழியும் வார்த்தைகள்..நியாயமான கேள்விகள்.. நல்ல பதிவு..

said...

நல்ல பதிவு !!! உங்கள் பதிவு என்னுள் ஏற்படுத்திய விளைவு கிழே:

பாம்பின் விசத்திற்கு முறிவு பாம்பின் விஷமே!!!

காயங்களை ஏற்படுத்துவதும், அதற்க்கு மருந்திடுவதும் மனமே !!

மனம் என்ற ஒன்று இல்லாவிடில் இங்கே கவிஞன் இல்லை; காதல் இல்லை; காவியம் இல்லை; நீங்கள் இல்லை; நான் இல்லை.

தொட்டிலையும் கிள்ளிவிட்டு ; பிள்ளையையும் ஆட்டிவிடுவதே மனம்.

மனம் என் காதலி; காயபடுத்துவதும் அவளே!! சந்தோஷ படுத்துவதும் அவளே !!

எங்கும் நிறைந்திருந்தும் கண்ணால் காணமுடியாத கடவுளை போல;
என் உடல் எங்கும் நிறைந்திருந்து, கண்ணால் காண முடியாத மனமே!!

நீயும் கடவுள்தான் !!

said...

உங்கள் கேள்விகள் எனக்குள்ளும் கேள்விகளை எழுப்பி விட்டுச் செல்கிறது

said...

குரங்கின் பரிணாமம் மனிதனாக மாறியது.மனசை தவிர.

உண்மை.

மனதிற்கு காயங்களை தந்துவிட்டு கண்ணீரை மட்டும் சிந்துகிறது விழிகள்

காயங்களுக்கு காரணமும் மனதுதானே .

உடலில் எங்கிருக்கிறது இந்த வெட்கம் கெட்ட மனசு?

தெரிஞ்சா சொல்லுங்களேன்...

ரசனைகளை நசுக்கும் கால்களின் பாதைகளிலும் பூக்கள் மலரவே வாழ்த்துகிற மனசை என்னசொல்லி திட்டுவது?

நல்ல மனிதர்களின் மனது அப்படித்தான் இருக்கும்.

தவிர்த்தலை பரிசளிக்கும் இதயங்களை மறக்கும் மனசு எங்கே கிடைக்கும்.

கிடைச்சா எனக்கும் ஒன்னு...

உடைந்த கண்ணாடியில்
ஓராயிரம் பிம்பங்கள்
உடைந்த மனசில்
ஒரே ஒரு பிம்பம்
அவள் ....
எப்படி இருக்கு கவிதை ...

said...

மன்னிச்சிடுங்க விடுபட்டுப்போச்சி.

ஊனத்தை முன்நிறுத்தி நிராகரித்த
வலி மறக்க தேவை மனமா,பணமா?

மற்றவர்களுக்கு பணம்.

ஊனப்பட்டவர்களுக்கு மனமே.

said...

வாழ்த்திய அன்பர்களுக்கு என் நன்றிகள்.
நிலாவன்,
உங்களது கவிதையும் அருமை :)

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by the author.
said...

Nalla kelvigal nilarasigare....

said...

yenakku unga 5-vathu kelvi pidiththathu..