Monday, March 23, 2009

கறுப்பு வெள்ளை கனவுகள் - மூன்று கவிதைகள்




1.உன் கரங்களுக்குள் வாழ்ந்து
பழகிய என்
கனவுகளின் விளிம்பில்
காத்திருக்கிறேன்.
காத்திருத்தலின் வலி தாளாமல்
கனவுக்குள் புதைகிறதென்
பாதங்கள்.
மெல்ல மெல்ல
என்னை சுற்றி உருக்கொள்கிறது
கல்லறையொன்று.
நீ மறைந்த திசைநோக்கி
என் சிறகுகள்
படபடக்க துவங்குகையில்
கால்களை கட்டிக்கொண்டு
அழுகிறது குழந்தை.

2.
இருள் மிகுந்த அடர்வனத்தில்
நுழைய முடியாமல்
தவித்துக்கொண்டிருந்தது
வெளிச்சம்.
மானொன்றின் கதறலில்
சிலிர்த்துக்கொண்டன
விருட்சங்களின் இலைகள்.
எதற்காகவோ அல்லது
யாருக்காகவோ
சத்தமிட்டுக்கொண்டே இருக்கின்றன
பூச்சிகள் சில.
சற்று முன் பெய்து
ஓய்ந்திருக்கிறது
மழை.

3.
நம்மிடையே உயர்ந்து
நிற்கிறது
கண்ணாடிச் சுவர்.
உடைக்கின்ற வலிமையற்ற
என் கரங்களில்
உடைக்கப்பட்ட வளையல்களின்
கீறல்கள்.
இசைக்க மறந்த
வெள்ளைக்குயிலின்
ராகத்திற்காக
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
உன் யாசகம்.
உதிர்ந்துகொண்டே இருக்கிறது
என் கண்ணீர்.

நன்றி: Youthful Vikatan

10 comments:

said...

Impressive !

said...

//நம்மிடையே உயர்ந்து
நிற்கிறது
கண்ணாடிச் சுவர்.//

unarvin arumaiyana veli padu. 3 kavithaiyum nalla vanthiruku Nila

Anonymous said...

Is the first poem abt the pain of a lover who is committed to someoneelse?

said...

நன்றி லஷ்மி,மின்னல்.


@A poet,

//Is the first poem abt the pain of a lover who is committed to someoneelse?//

No its the pain of a young Widow.
Infact all these three poems are about her.
Thanks for the comment.

Anonymous said...

நிலா ரசிகருக்கு வணக்கம்....

//நம்மிடையே உயர்ந்து
நிற்கிறது
கண்ணாடிச் சுவர்.
உடைக்கின்ற வலிமையற்ற
என் கரங்களில்
உடைக்கப்பட்ட வளையல்களின்
கீறல்கள்.
இசைக்க மறந்த
வெள்ளைக்குயிலின்
ராகத்திற்காக
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
உன் யாசகம்.
உதிர்ந்துகொண்டே இருக்கிறது
என் கண்ணீர்.//

அருமையான உணர்வுகளின் வெளிபாடு.......
இதை படித்த பின் என் கண்களிலும் கண்ணீர் உதிர்வதை தடுக்க முடியவில்லை......
மிக மிக அருமை........
வலிகளை உணர்வுபூர்வமாக் கொடுக்கும் உங்கள் கவிதைகள் மிக அழகு....

நன்றி...

said...

அருமையான கவிதைகள்
மூன்றுமே என்னை மிகவும்
ஈர்த்தது
யூத்விகடனில் வந்ததற்க்கு வாழ்த்துக்கள்

said...

"அருமையான சோக உணர்வுகளின் வெளிபாடு......."

Anonymous said...

Migavum alagana kavithaigal...

நம்மிடையே உயர்ந்து
நிற்கிறது
கண்ணாடிச் சுவர்...

Manathil varaintha chithiramaga pathinthu vittathu..
Kavithaigal alla anaithum Kavi pookkal...

Kaviye umakku emathu valthukkal.
chandra

said...

உன் கரங்களுக்குள் வாழ்ந்து
பழகிய என்
கனவுகளின் விளிம்பில்
காத்திருக்கிறேன்.
காத்திருத்தலின் வலி தாளாமல்
கனவுக்குள் புதைகிறதென்
பாதங்கள்.
மெல்ல மெல்ல
என்னை சுற்றி உருக்கொள்கிறது
கல்லறையொன்று.
நீ மறைந்த திசைநோக்கி
என் சிறகுகள்
படபடக்க துவங்குகையில்
கால்களை கட்டிக்கொண்டு
அழுகிறது குழந்தை.

நம்மிடையே உயர்ந்து
நிற்கிறது
கண்ணாடிச் சுவர்.
உடைக்கின்ற வலிமையற்ற
என் கரங்களில்
உடைக்கப்பட்ட வளையல்களின்
கீறல்கள்.
இசைக்க மறந்த
வெள்ளைக்குயிலின்
ராகத்திற்காக
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
உன் யாசகம்.
உதிர்ந்துகொண்டே இருக்கிறது
என் கண்ணீர்.

விதவை பெண்ணின் ஆழ்ந்த
சோகமாக உள்ளது உங்கள் கவிதை
என்னோட சிந்தனை சரி என்று நினைக்கிறேன் .

said...

நீங்கள் சொன்ன கருத்தை நான்
படிக்காமலே கூறிவிட்டேன் மன்னித்துவிடுங்கள்