Friday, May 08, 2009
இரு கவிதைகள்
அவர்கள்
என் அறைக்குள்ளிருந்து
வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்கள்.
தலைகுனிந்து தள்ளாடி
நடக்கின்ற அவர்களின்
நிழலிலும் தோல்வியின்
காயங்கள் மின்னி மறைகின்றன.
வெற்றிக்களிப்பில் சத்தமிட்டு
சிரிக்க ஆரம்பிக்கிறேன்.
பல்லிடுக்கில் வழிகின்ற
கருமைநிற ரத்தம்
தோற்றுச்சென்றவர்களை
சாத்தான்கள் என்றபோது
எனக்குள்ளிருந்த கடவுள்
காணாமல் போயிருந்தான்.
இறக்க முடியாத சிலுவை
எல்லோரும் அமர்ந்திருக்கும்
அந்தக்கூட்டத்தில்
என்னை மட்டும்
பார்த்துக்கொண்டிருந்தன
அந்த இருவிழிகள்.
தனக்கான பார்வையை
என்னிடமிருந்து
எதிர்பார்த்து காத்திருந்த
அந்த விழிகளை
கடைசிவரை பார்க்காமல்
வெகு இயல்பாய்
தவிர்த்தேன்.
எல்லோரும் கலைந்து
சென்றனர்.
வருடங்கள் பல
கழிந்தபின்னரும்
இமைமூடி பார்த்துக்கொண்டே
இருக்கிறேன் அன்று
தவிர்த்த அந்தவிழிகளை.
நன்றி: அதிகாலை.காம்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
Nila Raseegan.....
Kavithai rendumae superb.....
//பல்லிடுக்கில் வழிகின்ற
கருமைநிற ரத்தம்
தோற்றுச்சென்றவர்களை
சாத்தான்கள் என்றபோது
எனக்குள்ளிருந்த கடவுள்
காணாமல் போயிருந்தான்.//
Really Nice...
//தனக்கான பார்வையை
என்னிடமிருந்து
எதிர்பார்த்து காத்திருந்த
அந்த விழிகளை
கடைசிவரை பார்க்காமல்
வெகு இயல்பாய்
தவிர்த்தேன்.//
robava iyalba azhaga iruku unga kavithai varigal.....
Nandri.
Kalaivani.
அழகான கவிதைகள்
-ப்ரியமுடன்
சேரல்
Migavum alagu...
Chandra
//தனக்கான பார்வையை
என்னிடமிருந்து
எதிர்பார்த்து காத்திருந்த
அந்த விழிகளை
கடைசிவரை பார்க்காமல்
வெகு இயல்பாய்
தவிர்த்தேன்.//
அழகான வரிகள் நிலா...............
அன்புடன்
பூர்ணா
தோற்றுச்சென்றவர்களை
சாத்தான்கள் என்றபோது
எனக்குள்ளிருந்த கடவுள்
காணாமல் போயிருந்தான்
வருடங்கள் பல
கழிந்தபின்னரும்
இமைமூடி பார்த்துக்கொண்டே
இருக்கிறேன் அன்று
தவிர்த்த அந்தவிழிகளை
அருமையான கவிதைகள்
நல்லாருக்குங்க
Pasu kandrinai naavaal varuduvathaipola , Thai maganai thalai kodhuvathai- rombavum IDHAM and KUZHUMAI.
Naanum enakaana parvaiyai avalidamirundhu edhirpaarthu eamandhavan.
ThuliThuliyaai parugi anubhavitthu irasithaen.
எல்லோரும் அமர்ந்திருக்கும்
அந்தக்கூட்டத்தில்
என்னை மட்டும்
பார்த்துக்கொண்டிருந்தன
அந்த இருவிழிகள்.
normal line
தனக்கான பார்வையை
என்னிடமிருந்து
எதிர்பார்த்து காத்திருந்த
அந்த விழிகளை
கடைசிவரை பார்க்காமல்
வெகு இயல்பாய்
தவிர்த்தேன்.
some thing more
எல்லோரும் கலைந்து
சென்றனர்.
வருடங்கள் பல
கழிந்தபின்னரும்
இமைமூடி பார்த்துக்கொண்டே
இருக்கிறேன் அன்று
தவிர்த்த அந்தவிழிகளை.
wonder full
so i read a wonderfull poem.
thank u
arivukku virunthaanathu muthal kavithai..
rasanaikku virunthaanathu 2vathu..
"vegu iyalbaai thavirthen"-athu pidiththathu.
//எனக்குள்ளிருந்த கடவுள்
காணாமல் போயிருந்தான்.//
இது நல்லாருந்தது...
Post a Comment