Wednesday, May 13, 2009
அரூபவதனி
யாருமற்ற பின்னிரவில்
கசிகின்ற விழியுடன்
என்னிடம் சரணடைவாள்.
மடியில் முகம்புதைத்து
விசும்புகின்ற
அவளின்
கருங்கூந்தல் இருண்ட
முகிலை ஒத்திருக்கும்.
வெண்ணிறத்தில் மெல்லியதொரு
ஆடை
அவள் மேனியெங்கும்
நதியென தவழ்ந்தோடும்.
தளர்ந்த விரல்களால்
என் தலைகோதி,
தகிக்குமவள் முலைகளில்
எனை மூழ்கிடச் செய்திடுவாள்.
கண்ணீரின் காரணத்தை
கடைசிவரை சொல்லாமல்
காற்றோடு கரைந்து
மறைந்திடுவாள்.
விடியலில் மனமெங்கும்
வியாபித்திருப்பாள்
முகம்மட்டும் மறைத்தபடி.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அது கனவு தேவதையா? உங்கள் ஆழ்மன எண்ணங்களின் பிரதிபலிப்பா?
Ahagana Kavithai.... Kadaici varai yar endru theriyalaie??? I dont know how to tpe in Tamil,
கனவு தேவதை
கவிதை அருமை
NICE KAVETHY
yaaraval?
துணையை ரசிக்கும் மனம்....தொடர்க
Post a Comment