Monday, May 25, 2009
உன் மெளனங்கள்
காயப்படுத்துவதற்கென்றே
மெளனங்கள் சிலவற்றை
உருவாக்குகிறாய்.
பூப்பறித்தலின் ஆனந்தத்தை
அவை உனக்களிக்கலாம்.
அல்லது
அப்பழுக்கற்ற குழந்தைமையின்
குதூகலத்தை உணர்வுகளில்
தெளிக்கலாம்.
இடுகாட்டில் எரிகின்ற உன்
சுயத்தின் கருகியவாடையை
என்னை நோக்கி சுமந்து
வருகின்றன
அந்த மெளனங்கள்.
வலி நிறைந்த
புன்னகையுடன்
இருகரம் விரித்து வரவேற்கிறேன்.
எங்கோ
உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றன
என் கல்லறைக்கான
செங்கல்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
மௌனமா வார்த்தைகள் படித்ததும்
மௌனமாக்குகின்றது.
அருமையான கவிதை.
சரியா புரியல...
இருந்தாலும் நல்லாருக்கு ;)
அழகாக உள்ளது...
பூப்பறித்தலின் ஆனந்தத்தை
அவை உனக்களிக்கலாம். பூ பறிப்பவர்க்கு ஆனந்தம், பூ விற்கோ வலி... அழகான வரிகள்.
வணக்கம் நிலாரசிகன்
\\இடுகாட்டில் எரிகின்ற உன்
சுயத்தின் கருகியவாடையை
என்னை நோக்கி சுமந்து
வருகின்றன
அந்த மெளனங்கள்.\\
முயங்கி உண்டாக்கப்படும் உடல்களின் அதிர்வுகள் தெளிவாக காட்டியுள்ளீர்கள்
இராஜராஜன்
// வலி நிறைந்த
புன்னகையுடன்
இருகரம் விரித்து வரவேற்கிறேன்.
எங்கோ
உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றன
என் கல்லறைக்கான
செங்கல்கள். //
வலி நிறைந்த வார்த்தைகள்!
வாழ்த்துக்கள் நிலா!
பூப்பறித்தலின் ஆனந்தத்தை
அவை உனக்களிக்கலாம்.
அல்லது
அப்பழுக்கற்ற குழந்தைமையின்
குதூகலத்தை உணர்வுகளில்
தெளிக்கலாம்
அருமையான வரிகள்
அருமையான கவிதை
உள்ளொலியின் தீவிரத்தைத் தாங்குவது கடினமானது தான். எனக்கு இந்தக் கவிதை பிடித்திருக்கிறது.
Superb.........
I LOVE YOUR LINES
very nice poem nila.
kaayap paduththuvatharkkaaka alla intha movnangal..
ungal puthiya kavithaikku oru viththaaka allava amainthullaathu.
காயத்தினால் உருவானதே இந்த வித்து.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அன்பர்களே.
சமீபத்தில் தான் உங்கள் பக்கங்களைப் பார்த்தேன். வார்த்தையிலும் படித்திருக்கிறேன்.
உங்கள் கவிதையின் பற்றி என் `மேய்ந்ததில் பிடித்ததில்` எழுதியிருக்கிறேன்.(http://beyondwords.typepad.com/beyond-words/2009/06/poetry_links_1.html)
நன்றி.
பாரம் சுமந்த மௌனங்கள்
இடுகாட்டில் எரிகின்ற உன்
சுயத்தின் கருகியவாடையை
என்னை நோக்கி சுமந்து
வருகின்றன
அந்த மெளனங்கள்
ரொம்பவும் வலிமையான வரிகள்
மெளனம் வாழ்க்கையின் பல அர்த்தங்கள் சொல்லக்கூடியது ...மெளனம் அழகானது....
மெளனம் வாழ்க்கையின் பல அர்த்தங்கள் சொல்லக்கூடியது ...மெளனம் அழகானது....
Post a Comment