Thursday, May 21, 2009
ஒரு கிருமியின் கதை - [சிறுகதை போட்டிக்காக]
1.
வருடம்: 1929
பாரதியின் அறைக்குள் சோகம் அப்பிய முகத்துடன் நுழைந்தான் இளங்கோ.ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் பாரதியை எழுப்ப மனமில்லாமல் அருகிலிருந்த நாற்காலியில் சோர்வுடன் விழுந்தான். கண்களிலிருந்து நிற்காமல் வழிந்துகொண்டிருந்தது கண்ணீர்.பாரதியிடம் தான் அழுகின்ற காரணத்தை சொன்னால் எப்படி தாங்குவான் என்று நினைக்க நினைக்க மெளனக்கண்ணீர் பெரும் விசும்பலாய் உருவெடுத்தது. உறக்கம் கலைந்த பாரதி தன் அறையில் அழுதுகொண்டிருக்கும் இளங்கோவை ஆச்சர்யத்துடனும் கேள்விக்குறியுடன் பார்த்தான்.
"இளங்கோ,என்னுயிர்த் தோழனே ஏனிந்த கண்ணீர்?"
"பாரதி,செவ்வாயில் இருந்து வந்திருக்கும் இந்த செய்தியை பார்" கையடக்க கணிப்பொறியில் சிகப்பு நிற எழுத்தில் மின்னிக்கொண்டிருந்த வரிகளை படிக்க ஆரம்பித்தான் பாரதி.
"இன்னும் எண்பது ஆண்டுகளில் எம்.ஆர்.வி எனும் படுபயங்கர கிருமியால் பூமி பேரழிவை சந்திக்கும்.முடிந்தால் அதை தடுத்து நிறுத்துங்கள்"
பாரதியின் மீசை துடிதுடித்தது.கண்கள் கோபத்தில் ரத்தச்சிவப்பாக மாறியது.
"இளங்கோ,இந்தக்கிருமியை எப்படி அழிப்பது? இந்தக் கிருமியின் நதிமூலம் என்னவென்று உடனே கண்டுபிடிக்க வேண்டும்,செவ்வாய்க்கு போய் வரலாமா?"
"உன் கோவம் எனக்கு புரிகிறது பாரதி.இந்தக் கிருமியை தயாரிக்கப்போகும் நபர்களை நாம் கண்டுபிடித்துவிட்டால் முடிந்தது வேலை.செவ்வாய்க்கு போவதற்கு என் இயந்திரத்தில் எரிபொருள் இல்லை.நேற்றுதானே நாம் ஜூப்பிட்டரிலிருந்து வந்தோம்? இப்பொழுதெல்லாம் எரிபொருளின் விலையை நினைத்தாலே தலைசுற்றுகிறது. உன்னிடம் பணம் இருக்கிறதா?"
"உனக்குத்தான் என்னைப் பற்றி தெரியுமே கிடைக்கின்ற பணத்திலெல்லாம் மின்புத்தகம் வாங்கிவிடுவேன்.நேற்று இருபது புத்தகங்கள் வாங்கிவிட்டேன்.பணம் ஒரு பெரியவிஷயமல்ல கடன் வாங்கியாவது எரிபொருள் வாங்கிவிட முடியும்.ஆனால் அந்தக்கிருமியை தயாரிப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது இளங்?"
"வா இணையத்தில் தேடுவோம்" இருவரும் கணிப்பொறி முன் அமர்ந்தார்கள். சற்று தூரத்தில் கடற்கரையில் சிறுவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கும் சத்தம் ஜன்னல் வழியே கேட்டது.
2.
கடற்கரை மணலில் கால்கள் புதைய நடப்பது சமராவிற்கு மிகவும் பிடிக்கும். அதுவும் ஆல்வினுடைய தோள்களில் சாய்ந்து கொண்டே கடல் ரசிப்பதில் தன்னை மறந்துபோவாள் சமரா. விரல்கோர்த்து நடந்தபடியே மெதுவாய் சமராவிடம் பேச ஆரம்பித்தான் ஆல்வின்.
"சமரா,உன்னை போன்ற அற்புதமான மனைவியும் அதோ மணலில் விளையாடும் நம்மிரு குழந்தைகளும்தான் என் உலகம்"
"இப்போது இப்படி சொல்வீர்கள் வீட்டை விட்டு வெளியே போய்விட்டால் என் தேசம் என் மக்கள் என்று பேச ஆரம்பித்துவிடுவீர்கள்" செல்லமாக கோபித்தாள்.
"சரி அதைவிடு. இப்போது உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் சொல் கண்மணி" காதலுடன் கேட்டான் ஆல்வின்.
"எப்போதும் என்னை காதலித்துக்கொண்டே இருங்கள் அதுபோதும்" அலையென சிரித்தாள் சமரா.
"உனக்கு காதல்பரிசை இன்றிரவு தருகிறேன்" கண்ணடித்தான் ஆல்வின்.வெட்கத்தில் சிவந்தார்கள் சமராவும் அந்திவானமும்.
3.
இரவு இரண்டு மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டது. அழைப்புமணியை அழுத்தாமல் கதவை தட்டினால் அது பாரதியாக மட்டும்தான் இருக்குமென்று இளங்கோவிற்கு தெரியும். ஓடிச்சென்று கதவை திறந்தான்.
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இடியென சிரித்தான் பாரதி. இளங்கோவை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டான்.
"என்ன பாரதி இந்த நேரத்தில்? என்ன விஷயம்? ஏனிந்த சந்தோஷம்?"
"இளங்கோ இருபது நாட்கள் கடுமையாக உழைத்த நமக்கு இன்று நல்ல பலன் கிடைத்திருக்கிறது.அந்த கிருமியை உற்பத்தி செய்யும் நபர்களை கண்டுபிடித்துவிட்டேன்.வா உடனே புறப்படுவோம்"
"எப்படி கண்டுபிடித்தாய் பாரதி? நேற்று இரவுகூட நம்மால் கண்டுபிடிக்க இயலவில்லையே?"
"அதற்கும் ஒரு நிரலை ஈகிள் தேடலில் கண்டுகொண்டேன்.அதாவது பேரழிவை உருவாக்கும் சக்திகளை கண்டுபிடிப்பதற்கான நிரல்.எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் பார்த்தாயா இளங்கோ? இந்த விஞ்ஞான நூற்றாண்டில் பிறந்ததற்காக பெருமை கொள் நண்பா"
"கண்டிப்பாக பெருமை கொள்கிறேன் பாரதி.இந்த விஞ்ஞான யுகத்திலும் பிறமொழி கலப்பில்லாமல் கற்றுத்தருகின்ற நம் கல்விமுறையும்..இயந்திர மனிதர்கள் நம்மீது காண்பிக்கும் அன்பும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது"
"சரி இளங்கோ விஷயத்திற்கு வருவோம். நம் நாட்டிற்கு தெற்கே வசித்துவருகிறார்கள் அந்தக்கிருமியை உருவாக்க இருப்பவர்கள்.அதாவது அவர்களின் மூளைக்குள் இன்னும் 16 ஆண்டு கழித்துதான் அந்த குரூர திட்டம் உருவாகும். உன் காலயந்திரத்தை உடனே தயார் செய். நாம் நாளை 1945ம் ஆண்டிற்குள் நுழையப்போகிறோம்"
"அப்படியெனில் ஏன் இன்னும் எண்பது ஆண்டுகள் கழித்து அந்தக்கிருமியை பரவ விடவேண்டும்? எனக்கு புரியவில்லையே பாரதி. செவ்வாயிலிருந்து வந்த செய்தி80 ஆண்டுகள் கழித்துதானே உலகம் பேரழிவை சந்திக்க போகிறது என்றது?" குழப்பத்துடன் கேட்டான் இளங்கோ.
"சில கிருமிகள் உடனே பரவ ஆரம்பித்துவிடாது நண்பா.சில காலம் எடுக்கும்.கொஞ்சம் கொஞ்சமாய் பரவி பின்னரே அதன் உக்கிரம் உலகை உலுக்கும்,நாம் முந்திக்கொள்ள வேண்டும்.மற்றவை நாளை பேசலாம்.நிம்மதியாய் உறங்கு" கடகடவென்று பேசிவிட்டு போய்விட்டான் பாரதி. தூரத்தில் கூகையொன்றின் கொடூர சப்தம் கேட்டது.
4.
அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய ஆல்வினை ஓடிவந்து கட்டிக்கொண்டாள் சமரா.
"என்ன சமரா என்ன விஷயம் ஏனிந்த ஆனந்தக்களிப்பு?" ஆர்வமுடன் கேட்டான் ஆல்வின்.
"நீங்கள் மூன்றாவது முறையாக அப்பாவாக போகிறீர்கள்"
"கண்மணி! நல்லதொரு விஷயத்தை பகிர்ந்தாய்"
இருவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்போது வீட்டுக் கண்ணாடி ஜன்னலில் இரு கண்கள் அசையாமல்
இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தது.
"சமரா இந்த நல்ல செய்தியை நாம் கொண்டாட வேண்டும்.பிறக்கபோகும் நம்பிள்ளைக்கு என்ன பெயர் வைக்கலாம்"
"உங்கள் காதில்தான் அந்த பெயரை சொல்வேன்" காதலோடு அவன் செவிகளில் உச்சரிக்கும்போதுதான் ஜன்னலில் யாரோ நிற்பது தெரிந்து அலறி மயங்கி விழுந்தாள்.
அவள் அலறல் சத்தம் கேட்டு ஆல்வின் வீட்டு காவலாளிகள் ஓடிவந்தனர்.ஜன்னலை நோக்கி கைகாட்டிவிட்டு சமராவை எழுப்ப முயற்சித்தான் ஆல்வின்.
5.
இளங்கோவிற்கு இடது காலில் பலத்த அடி. நொண்டிக்கொண்டே காலயந்திரம் வந்துசேர்ந்தான்.பாரதிக்கு புரிந்துவிட்டது.இளங்கோவை யந்திரத்தின் ரகசிய அறையில் ஓய்வெடுக்க செய்துவிட்டு சினத்துடன் வெளியேறினான்.விறுவிறுவென்று அந்த மாளிகையை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.
கடற்கரையோர அந்த பெரும் மாளிகையை விட்டு பாரதி வெளியேறும்போது அந்த இடமே மயான அமைதி கொண்டிருந்தது.காலயந்திரத்தில் அரைமயக்க நிலையிலிருந்தான் இளங்கோ. பாரதியைக்கண்டவுடன் சந்தோஷத்தில் மெல்லியதாய் கேட்டான் "முடிந்ததா பாரதி?"
"எமனை சந்தித்திருப்பார்கள் இந்நேரம்" சொல்லிவிட்டு சத்தமிட்டு சிரித்தான் பாரதி.காலயந்திரம் அவர்களது காலத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தது.
6.
சமராவிற்கு மயக்கம் தெளிந்தபோது கையிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அருகே காவலாளிகளின் பிணக்குவியல். சற்று தூரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தான் ஆல்வின். மெல்ல தவழ்ந்து அவனருகே சென்றாள். அவன் நெஞ்சில் விழுந்து அழுதாள். அவன் இதயம் துடிக்கும் சப்தம் கேட்டு வியந்து அவனை உலுப்பினாள். முனகலுடன் கண்களைத் திறந்தான் ஆல்வின்.
7.
பத்து மாதம் கழித்து,
தொட்டிலில் கால்களை ஆட்டிக்கொண்டு படுத்திருந்தது அந்தக்குழந்தை.
ஆல்வினும்,சமராவும் குழந்தையின் செவியில் ஒருசேர அந்தப்பெயரை உச்சரித்தார்கள்
"மஹிந்தா ராஜபக்ஷே"
-முற்றும்-
[உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]
- நிலாரசிகன்.
Labels:
அறிவியல் புனைக்கதை,
சிறுகதை,
போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
66 comments:
கனவு மெய்ப்ப(ட்டிருக்கப்ப)ட வேண்டும்...
Miga Arumai... Aam andha kodiya kirumi azhikkum sakthi innum kannil padavillai... padum enraavadhu padum...
Vaazhthukkal
இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல!
ஒரு பத்து வருஷம் பின்னாடி போய் கிருமிய நசுக்கிட்டு வந்துரலாம்!
வாழ்த்துக்கள்! வெற்றி பெற
வந்து வாசித்து வாழ்த்திய அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்த வயதில்லை, பாராட்ட மனதிருக்கிறது. கதையும் எழுதிய விதமும் மெய்சிலிர்க்க வைக்கிறது அண்ணா. தாங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அசத்தல்!
நன்றி தங்கை
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சென்ஷி
>"எமனை சந்தித்திருப்பார்கள் இந்நேரம்" சொல்லிவிட்டு சத்தமிட்டு சிரித்தான் பாரதி.காலயந்திரம் அவர்களது காலத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தது
எமனை யாரும் சந்தித்ததாக தெரியவில்லையே
இதே சிங்கள மொழியில சிறுகதை போட்டியா இருந்தா கடைசி வரி "பிரபாகரன்" னு இருக்குமா? ;)
//எமனை யாரும் சந்தித்ததாக தெரியவில்லையே//
என்ன செய்வது நண்பரே எமனின் வெறியாட்டம்தான் இன்னும்
தொடர்கிறதே :(
மிக நல்ல முயற்சி ... என்ன தான் கதை கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் ... முடிவுல தெளிய வெச்சுட்டீங்க
நன்றி சதீஷ்.
வாவ்..வாழ்த்துக்கள் மச்சி. மாற்றங்களுடன் முழுமை பெறுகின்றது நில..
வெற்றி பெற வாழ்த்துக்கள்..
நன்றி விழி. நண்பா :)
முடிவு இப்பொழுது ஏகப் பொருத்தமாயிருக்கிறது. அப்படிக் கொல்லப் பட்டிருப்பின் அது எவ்வளவு நன்றாக இருக்கும்?!
வெற்றிப் பெற பிராத்திக்கிறேன்.. வாழ்த்துகள்!
அவன் இறக்கவில்லை என்றால் பாரதி மற்றும் இளங்கோவனுக்கு தெரிந்திருக்கும் அல்லவா?
ஆதாவது அந்த கிருமி தாக்குதலை பற்றிய செய்திகள் வரும் பொழுது கண்டிப்பாக அவர்கள் தங்களது வேலை இன்னும் முடியவில்லை என தெரிந்திருக்க கூடும் இல்லையா?
ஒரு வேளை , விதியை வெல்ல முடியாதோ ?
கதை அருமை.
வாழ்த்துகள்.
நன்றி ஒளி,பரமேஸ்வரி,ரகசிய சினேகிதி.
வாழ்த்துக்ககள், கதை நல்லா வந்திருக்கு.
pull arikkuthu anna
அருமையான பதிவு. அருமையான கற்பனை. அந்தக் கிருமியை அழிக்காமல் போனது விதியின் எழுத்து..
தனி ஒருவனௌக்கு உணவிலையெனில் ஜகத்தை அழிக்க நினைத்தான் பாரதி.
இப்போயது ஒரு பாதி ஜகம் தானாகவே அழியுமாறு அந்தக் கிருமி ஏற்பாடு செய்துவிட்டது.((((
vazhthukaL nila.
Nalla Fictional Story feel Nila
Kadhaila unga Tamil Arvam nalla theriyudhu ;)
hollywood range la tamil la oru kutti trailer patha sandhosham
unga vidhyasamana muyarchiku Paaraattukal.
Keep Writing ...
Unga Future Endeavoursuku ennoda wishes.
Andha Sirikadhai Potila Vetri Pera Vazhthukal...
arumai
Vetri pera vaazhthukkal :-)
Nalla iruku.. keep it up Nanba
மஹிந்தா ராஜபக்ஷே" Puriyalai enaku... Vilakkam please
Story super... excellant imagination... I didn't expect such an end... its too good...u have gotta very good presence of mind...
Wish u best of luck to win...
engo oru moolayil irunthu kondu kathai padikkum namakke adi vayiru kalangugirathu endraal, nitham gundu mazhayil uyir thurakkum namathu udan pirapugal mana nilaiyai karpanai seiya kooda mudiyavillai.. kaalamum kadavullum thaan bathil solla vendum.
அன்று அழிக்க முடியாதபடி மிக உறுதியாக இருந்த அந்த(ராஜபக்ஷே)
கிருமிக்கு வயசு 79ஆ.. 80ஆ..!
நல்ல(கதை)கற்பனை..!
பாராட்டுக்கள் நிலா!
very good.
Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks
kaalam nerinki vittadhu antha kirumi aliya...
best of luck for your story...
//அன்று அழிக்க முடியாதபடி மிக உறுதியாக இருந்த அந்த(ராஜபக்ஷே)
கிருமிக்கு வயசு 79ஆ.. 80ஆ..!/
பாரதியும் இளங்கோவும் வசிக்கும் வருடம் 1929.
அதன்பிறகு எண்பது ஆண்டுகள் எனில் 2009.
இன்னும் 16 ஆண்டுகள் கழித்துதான் அந்தக்கிருமி உருவாகும் என்று பாரதி
சொல்கிறான்.அதாவது 1945ல்தான் உருவாகும்.
இப்போ வயசை நீங்களே சொல்லுங்க பார்க்கலாம் :)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
//மஹிந்தா ராஜபக்ஷே" Puriyalai enaku... Vilakkam please//
காயத்ரி,
எது புரியவில்லை கதையா இல்லை மஹிந்தா ராஜபக்ஷேவா?
கதை புரியவில்லை எனில் புரியவைத்துவிடுகிறேன்.
மஹிந்தா யாரென்று கேட்பீர்கள் எனில்...... :((
வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மூளைக்கும் ரசனைக்கும் தீனி போடும் கதை இது. Brilliant Stuff.
Thanks Mr.Critic.
Really very good..
Very Good story. i like the way you mixed both science fiction and the reality.
Thanks for the comment NagareegaKomaali.
கதை அருமை அண்ணா
கதையை முடித்திருக்கும் விதம் அருமை
வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Best story! You will get the prize for sure. The way you presented the story was remarkable. My vote is for you only!
அருமையான கதை...
நிஜத்தில் நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்ற ஏக்கம் வருகிறது
நடை மிக அருமை.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
போட்டியில் நானும் கலந்து கொள்வதால் இப்போது கருத்து சொல்ல விருப்பமில்லை ... ரிசல்ட் எப்படி இருந்தாலும் முடிவு வந்த பிறகு என் கருத்தை சொல்கிறேன் ...
//போட்டியில் நானும் கலந்து கொள்வதால் இப்போது கருத்து சொல்ல விருப்பமில்லை ... ரிசல்ட் எப்படி இருந்தாலும் முடிவு வந்த பிறகு என் கருத்தை சொல்கிறேன் ..//
ரொம்ப பயமுறுத்தறீங்களே :(
ஐயோ ... பயமுறுத்தும் நோக்கமெல்லம் இல்லை ... தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்
அருமையான சிந்தனை வித்யாசமான கதை
சரி ... போட்டி ஒரு புறம் இருக்கட்டும் ... உங்கள் கதை பற்றிய என் கருத்தைச் சொல்லிவிடுகிறேன் - கதையின் கடைசி வரி மட்டும் எனக்குப் பிடிக்கவில்லை ... மை லிட்டில் ஏலியன் பிரண்ட் - நூல்விமர்சனம் - கதையை மட்டும் நீங்கள் போட்டிக்கான கதையாக அறிவித்திருந்தால் உங்களுக்குத் தான் என் முதல் ஓட்டு ... :)
போட்டிக் கதைகளில் ஒரு பத்திக்கு மேல் என்னை கட்டாயமாகப் படிக்கத் தூண்டிய வெகு சில கதைகளுள் இதுவும் ஒன்று ... :)
நந்தா உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.எல்லோருக்கும் பிடித்தமான முடிவுகள் எப்போதும் இருப்பதில்லை.
மை லிட்டில் ஏலியன் கதை இந்த சிறுகதை போட்டி அறிவிப்பு வருவதற்கு முன்பே எழுதி என் வலைப்பூவில் வெளியிட்டு விட்டேன். போட்டி விதிகள் படி அதனை சேர்க்க இயலாது :)
@அமிர்தவர்ஷினி அம்மா,
மிக்க நன்றி.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நிலாரசிகன் ;)
kathai miikavum arumaiyaka erunthathu...siriya kathai aanal mikavum thelivana kathai. soliya vitham miikavum alagu nanba.
கதை அருமை அண்ணா...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
கற்பணை கடலொன்று கடல் கடந்து தனியே நின்று பொழியும் சிந்தனை மழை அருமை, விரைவில் நலமாக தாயகம் திரும்ப வாழ்த்துக்கள்.
அன்புடன்
அனுஷாதாசன்.
Nila avargale
Miga arumai.
Potiyil vetri pera en prarthanaigal.
Idhanai IL nanbargalum suvaika vendum.
Thulasi
நிலாரசிகன் மிக அருமையாக கதை எழுதி இருக்கீங்க. அறிவியல் புனைவோடு. நல்ல கரு. ரொம்ப நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துகள்
ஒரு கிருமியின் கதை / நிலாரசிகன்
அறிவியல் கதையில் கொஞ்சம் ஆங்கில வார்த்தைகள் கலந்திருந்தால் நேட்டிவிட்டி டச் கிடைத்திருக்கும்...சைன்ஸ் பிக்ஷனிலும் பணம், கடன், கூகை, பகிர்தல் என்று எளிமைப்படுத்தியது நன்று...கதையின் முடிவு யாரும் எதிர்பாராதது...
என்னுடைய மதிப்பெண் 60 / 100
அருமையான கதை... நடப்புச் சம்பவத்தோடு சம்மந்தப்பட்டிருப்பதால் கூடுதல் சுவை.
கௌபாய்மது
வித்தியாசமாக எழுதப்பட்ட, அதீத கற்பனையில் நிதர்சனத்தைச் சொல்ல முன்வந்த கதை.
செவ்வாய் தோஷம், வியாழ தோஷம் என கிரகங்களைத் தொட்டது அருமை.
பாரதி, இளங்கோ என இருபெரும் காவியத் தமிழர்களைத் தொட்டது அருமை.
சம்பந்தமேயில்லாமல் வருகிறதே என வந்த ஆல்வின் சமரா காட்சிகளுக்கு சாட்சியாய் மஹிந்தா!
கிருமிகளை அழித்துவிடலாம், ஆனால் விஷமிகளை அழித்துவிடமுடியாது எனச் சொல்லாமல் சொல்லிச் செல்லும் அழகிய கதை.
மிக்க நன்றி.
நீங்கதான் கலக்கியிருக்கீங்களே!
வாழ்த்துக்கள்!
நல்லா கதை சொல்லியிருக்கீங்க!
வாசித்து வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க. நல்லாருக்கு. வாழ்த்துக்கள்.
நன்றி விக்னேஸ்வரி
Naam ingae ippadi sollikittu irukkom. Angae innum nammudaiya sahodhara sahodharihal kasta padurangale. Adha ninaikkum podhu manasu romba kanama irukkudhu..... By Saravanakumar
Post a Comment