Saturday, June 20, 2009

செந்தழல் ரவி - விமர்சனங்கள் மற்றும் தமிழ்மணம்

உரையாடல் சமூக இலக்கிய அமைப்பு நடத்தும் வலைப்பதிர்வர்களுக்கான சிறுகதை போட்டிக்கு வந்திருக்கும் சிறுகதைகளை மிக அற்புதமாக சகபதிவர் செந்தழல் ரவி விமர்சனம் செய்திருக்கிறார்.

அனைத்து கதைகளையும் படிக்க விரும்பாத "சுறுசுறுப்பு திலகங்கள்" :)
இவரது விமர்சனத்தை படித்துவிட்டு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து படித்துக்கொள்ளலாம்.

சுட்டி:

http://imsai.blogspot.com/2009/06/blog-post_2979.html


செந்தழலுக்கும் போட்டிச்சிறுகதையாளர்களுக்கும் என் வாழ்த்துகள்.

---------------------
தமிழ்மணத்தில் என் பதிவுகள் திரட்டுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. விளக்கம் கேட்டு மடலிட்டிருந்தேன்.

இந்த பதில் வந்தது:

//வணக்கம்,

தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்தியோடையும் தற்சமயம் உபயோகத்தில் இருக்கும் செய்தியோடையும் வெவ்வேறாக இருப்பின் இச்சிக்கல் எழும். எனவே சமீபத்தில் உங்களது செய்தியோடையை மாற்றியிருப்பின் அதனைச் சரி செய்வதின் மூலம் இதனைச் சரி செய்யலாம்.
//

செய்தியோடையை நான் மாற்றவில்லை. இந்த சிக்கலை தீர்ப்பது எப்படி? பதிவுலக பிரம்மாக்கள் தீர்த்துவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

7 comments:

said...

நன்றி நிலா ரசிகன்...வெற்றிபெற வாழ்த்துக்கள்....

said...

சுறுசுறுப்பு திலகங்களுக்கு மட்டுமின்றி நேரமற்ற திலகங்களுக்கும் அவர் விமர்சனங்கள் பெரிதும் உதவும்:)!

said...

//சுறுசுறுப்பு திலகங்களுக்கு மட்டுமின்றி நேரமற்ற திலகங்களுக்கும் அவர் விமர்சனங்கள் பெரிதும் உதவும்:)//

:) நிஜம்தான். நட்சத்திர பதிவராக திரட்டி.காமில் இந்த வாரம் நானிருக்கிறேன்.

நிறைய எழுதவேண்டும் என்று வார துவக்கத்தில் நினைத்தேன் ஆனால் பணிச்சுமையால் எழுத இயலவில்லை.

நட்பு பற்றிய ஒரு பதிவு இன்றாவது எழுத வேண்டும்.பார்க்கலாம்...

said...

நல்லது, பதிவிலேயே பிரச்சனையைப் பகிர்ந்திட்டதற்கு. பிரம்மாக்கள் நிச்சயம் உதவுவார்கள்!

//நட்சத்திர பதிவராக திரட்டி.காமில் இந்த வாரம் நானிருக்கிறேன்.//

தெரியும். வாழ்த்துக்கள்! எல்லோரது வலைப்பூ முகப்பிலும் உள்ள திரட்டி லோகோவுடன் உங்கள் படமும் இருந்தது இருதினங்கள்:)!

said...

//தமிழ்மணத்தில் என் பதிவுகள் திரட்டுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. //
இப்போது திரட்டபடுவது தெரிகிறதே ...எனக்கும் இதே பிரச்சினை உள்ளதால் இதை எப்படி சரி செய்தீர்கள் எனத் தெரியப்படுத்துங்களேன் .

said...

//இப்போது திரட்டபடுவது தெரிகிறதே ...எனக்கும் இதே பிரச்சினை உள்ளதால் இதை எப்படி சரி செய்தீர்கள் எனத் தெரியப்படுத்துங்களேன்
//

தமிழ்மணத்தில் என் வலைப்பூவை நீக்கிவிட்டு சேர்க்க சொன்னேன். சரியாயிற்று.

said...

நன்றி நிலாரசிகன்!