Wednesday, July 01, 2009
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
தேடிச் சோறுநிதந் தின்று -
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -
மனம் வாடித் துன்பமிக உழன்று -
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -
பல வேடிக்கை மனிதரைப் போலே -
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதுங் கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
-மகாகவிஞன்.
Labels:
கவிதை,
கவிதைகள்,
படித்ததில் பிடித்தது
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நல்ல வரம் தானே ்கேக்கறீங்க்!
அதுக்கு ஏன் தலயில கை வைச்சுக்கணும் சாமி!
சாமிகிட்ட சிரிச்சுகிட்டே கேட்கணும்!
:))))))
மீட்டல் நன்று
என் மேஜையில் வைத்துள்ள கவிதை!!
nalla choice...
enakku ippadiyoru kavithai iruppathu driecter bala aanantha vikadanil yezhuthiya thodar la thaan theriyum..
vaazhthukal nila!
அட! என் வலைப்பூவில் இந்தக் கவிதைதான் தலைப்பில்!
நல்ல கவிதை !
பகிர்வுக்கு நன்றி
//நல்ல வரம் தானே ்கேக்கறீங்க்!
அதுக்கு ஏன் தலயில கை வைச்சுக்கணும் சாமி!
சாமிகிட்ட சிரிச்சுகிட்டே கேட்கணும்!
:))))))//
தலையில கைய வைக்கிற அளவுக்கு ஏதோ நடந்திருக்கணும் அதனாலதான் :)
//nalla choice...
enakku ippadiyoru kavithai iruppathu driecter bala aanantha vikadanil yezhuthiya thodar la thaan theriyum..
vaazhthukal nila!//
என்ன கொடுமை பாலா(பாரதி) :)
//அட! என் வலைப்பூவில் இந்தக் கவிதைதான் தலைப்பில்!
//
உங்கள் வலைப்பூவிற்கு அடிக்கடி நான் வருகின்ற காரணங்களுள் இதுவும் ஒன்று :)
தடம்பதித்தவர்களுக்கு நன்றிகள்.
ithil yenna kodumai...(smily laam poda mudiyaathu)
yenakku athai therinthu kollum santharppam appothaan kidaiththathu..(bala thayavaala/aanantha vigadan thayavaala)
athu ngabagam vanthuduchi.. sonnen!
"kaani nilam vendum"-ngira kavithaiyai ippadikkooda paarkkanumngira visham,ippo konja naal munaadithaan theriyum..
athai.. kavikko abdul rahmaan thannoda "kaakaich choru" ngira bookla sollerukkaaru..
oru velai.. neenga athai(kani nilathai) post seithirunthaal naan
intha incident i thaan pakirnthiruppen..
appo neenga..
yenna kodumai abdul rahman nu solleeruppingalo!!!!
m.. vaazhththukkal nila:)
Post a Comment