Monday, September 07, 2009
பூக்கள் தேடியலைதல்
நேற்று சந்தித்த வினோத்
தன் மரத்தில் பூக்கள் பூத்திருப்பதாக
சொன்னதிலிருந்து உறங்கவில்லை
கண்கள்.
எனக்குள் வளர்ந்திருக்கும் மரங்களில்
இலைகள் மட்டுமே இருந்தன.
இன்று காலை செளமியாவை
சந்தித்தேன்,
அவளது மரத்தில்
பூத்த ஒவ்வொரு பூவும்
சிறுகுழந்தையின் முகத்தை கொண்டிருப்பதாக
சொன்னபோது கண்கள் பனித்தது.
என் மரத்தில் எதனால் பூக்களில்லை
என்று யாருக்கும் தெரியவில்லை.
அழுது ஓய்ந்துவிட்ட விழிகளுடன்
திரிந்துகொண்டிருந்தேன்.
அழுதால் பூக்கள் மலர்வதில்லை
என்பது கடைசிவரை
சொல்லப்படவேயில்லை என்னிடம்.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
Very good lines. nalla kavidhaigal.
மலர்களின் இயல்பு மலருக்கு தெரியவில்லையா?
நன்று
அழுதால் பூக்கள் மலர்வதில்லை
என்பது கடைசிவரை
சொல்லப்படவேயில்லை என்னிடம்
அருமையான வரிகள் அண்ணா
//அழுதால் பூக்கள் மலர்வதில்லை
என்பது கடைசிவரை
சொல்லப்படவேயில்லை என்னிடம்.//
very nice lines nila, ur's lot of kavithaigal end with ?,!,:),:(.... ur kavithaigal are good mirror to show all the emotions of human...very interesting also..
நன்றி நண்பர்களே.
இம்மலரின் மனம் அம்மலர் அறியாததேனோ?
//அழுதால் பூக்கள் மலர்வதில்லை
என்பது கடைசிவரை
சொல்லப்படவேயில்லை என்னிடம்.//
Very Nice Nila Raseegan....
remba pidichchirukku kadaisi varikal....nila!!
yenakku correction solleeruntheenga...:)
magizhchi!!
nantri nila!!
நல்ல வரிகள்.
ரிப்பீட் "அழுதால் பூக்கள் மலர்வதில்லை..."
நன்றி இரசிகை :)
அழுதால் பூக்கள் மலர்வதில்லை
என்பது கடைசிவரை
சொல்லப்படவேயில்லை என்னிடம்.
Azhagana varigal....
Indha lines ellavatrirkume Porunthum...
mika mika azhagana Varikal :)
மிக மிக அழகான வரிகள் . நன்றி
kadaisi naanku varigal ovvoruvarukum solla pada vendiya varigal.miga arumai.
ungal kavithai arumai...
Post a Comment