Monday, September 14, 2009

இரு கவிதைகள்




மின்னல் தாண்டவம்


இருளின் கற்பை மின்னலொன்று
இரு துண்டுகளாய் வெட்டி எறிய
முயன்று கொண்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரும் துளி
அலையின்றி மெளனித்துக் கிடக்கிறது.
சுவாசம் தொலைந்த காற்று
வீதியெங்கும் புலம்பித் திரிகிறது.
முறிந்து விழுகின்றன விருட்சங்கள்.
அங்குமிங்கும் பரிதவித்த
இருள்
யாருமற்ற மணல்வெளியில்
பொத்தென்று விழுந்தபிறகு
ஒளிக்கண்களை தீரத்துடன்
திறந்தேன்.

நட்சத்திராவின் பொம்மைகள்


கருமை நிற சிறகும்
அடர்வன இருளும்
தன்னுடலில் கொண்டிருந்த
பறவைபொம்மையிடம் அதன்
பெயரை கேட்டுக்கொண்டிருந்தாள்
நட்சத்திரா.
பதிலேதும் பேசாத பொம்மை
கண்களை மட்டும் சிமிட்டியது.
பதிலுக்கு இவளும்
கண்களை சிமிட்டினாள்.
அலகு திறந்து காகா என்றது
பொம்மை.
அதன் ஒரு காலை
உடைத்தவள் இப்போ உன்
பெயர் "கா" தானே என்கிறாள்.

8 comments:

said...

கவிதை முழுதும் ரசித்தேன்

க்ளாஸிக்

said...

//அலையின்றி மெளனித்துக் கிடக்கிறது.
சுவாசம் தொலைந்த காற்று
வீதியெங்கும் புலம்பித் திரிகிறது.
முறிந்து விழுகின்றன விருட்சங்கள்//
அருமையான வரிகள்

இரு கவிதைகளும் நன்று :)

said...

Superb poems Nila :-)

//சுவாசம் தொலைந்த காற்று//

//உலகின் மிகப்பெரும் துளி//

//அதன் ஒரு காலை
உடைத்தவள் இப்போ உன்
பெயர் "கா" தானே என்கிறாள்.//

Nice words & lines..

said...

Nalla kavidhaigal... Ulagin Miga perum thuli.. miga arumaiyaana karpanai and migai illadha unmai :) Fantastic...

Eppozhudhu thondriya kavidhai idhu??

said...

azhagunga boos

said...

அருமை! மனதை தொட்டு சென்ற வரிகள் ...அனைத்தும்!

Kalaivani said...

Iru Kavithaigalum miga nandru....
athilum minnal thandavam solla vaarthaigal illai.... miga arumai..

said...

muthal kavithai... pramikka vaikkirathu!!!

2-m kavithaikku...

:)

vaazhththukal nila!!!