Wednesday, September 23, 2009

கண்மணி குணசேகரனின் - அஞ்சலை - நூல்விமர்சனம்

------------------------------------------
புத்தகம்:அஞ்சலை
பகுப்பு: நாவல்
ஆசிரியர்:கண்மணி குணசேகரன்
வெளியீடு:தமிழினி பதிப்பகம்
இரண்டாம் பதிப்பு வெளியான ஆண்டு:2005
விலை:ரூ 160
--------------------------------------------
முதல் மரியாதை திரைப்படத்தின் முழுக்கதையை 'மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டிதேரு' என்கிற ஒற்றை வரியில் சொல்லியிருப்பார் வைரமுத்து.
அதேபோல் 'அஞ்சலை' எனும் இந்நாவலின் கதையை கண்மணி குணசேகரன் இப்படி சொல்கிறார்.
"வேண்டும் என வந்து, வேண்டாம் எனப் போய், திரும்பவும் வேண்டும் என நீளும் நடை"

ஏழைப்பெண் அஞ்சலையின் திருமண வயதிலிருந்து துவங்குகின்ற நாவல் அவளை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை மிக அற்புதமாய் எடுத்துச்செல்கிறது.
கதையை இங்கே எழுதுவதில் அர்த்தமில்லை,அது வாசகனை முன்முடிவுகளுக்கு ஆழ்த்தி விடும்.
கதை நடக்கும் களம் தான் என்னை அதிகம் கவர்ந்தது.
கார்குடல்,மணக்கொல்லை,தொளார் இந்த மூன்று கிராமத்தில்தான் அஞ்சலையில் வாழ்வு அல்லல்படுகிறது.
நெல்வயல் நிறைந்த கார்குடல்,முந்திரி தோப்புகள் நிறைந்த மணக்கொல்லை,சிறுதொழில் ஊரான தொளார் நம் கண்முன்னே விரிகிறது குணசேகரனின் வரிகளால்.

வாழ்க்கையில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறிய/தெரியாத அபலையாக அஞ்சலையின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பினும் எந்தவொரு சூழ்நிலையிலும் அலுக்காத உழைப்பை கொண்டிருக்கிறாள் அஞ்சலை என்பதை மிக அழகாக சிருஷ்டித்திருக்கிறார்.

அஞ்சலையின் சுகதுக்கங்களை புரிந்துகொண்டு பரிவாக உடனிருக்கும் தோழி வள்ளியும், தங்கச்சிக்காக ஓடோடிவரும் இளைய அக்காள் தங்கமணியும்,ஒருபுறம் மகளின் போக்கு பிடிக்காவிட்டாலும் "சனியன் எங்க இருந்தாலும் நல்லா இருந்தா சரிதான்" எனும் மனோபாவத்தில் தள்ளாடும் தாய் பாக்கியமும்,ஊரே தவறாக சொன்னாலும் அம்மாவை தவறாக எப்போதும் நினைத்திடாத வெண்ணிலாவும் என்றும் மறக்கமுடியாத பாத்திர படைப்பு.

நாவல் முழுவதும் இழையோடும் வெயிலும் வெயில் சார்ந்த பகுதிகளும் வாசகனையும் வெக்கை நிறைந்த பூமிக்கு இழுத்துச்செல்கின்றன. அதிகம் வருணனைகள் இல்லாமல் எழுதப்பட்டுள்ள இந்நாவல் பெரும்பாலும்
உரையாடல்கள் மூலமாகவே நகர்கிறது. சேரி மக்களின் அன்றாட வாழ்வில் வெகு இயல்பாக கலந்திருக்கும் சண்டைகளும்,சிறு சச்சரவுகளும் நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது. சோற்றுப்பானையில் விழுந்த இடியாய் வாழ்க்கை தொலைத்து நிற்கும் அஞ்சலை மீது எப்போதும் கேலிகளும்,குத்தல் பேச்சுகளும் எவ்வித குற்றவுணர்வுமின்றி வீசப்படுகின்றன. அந்த குரூர சந்தோஷத்தில் கழிகிறது அவர்களது காலம்.

மூத்த அக்காள் கல்யாணியின் ஈவு இரக்கமற்ற வசவுகளும்,செயல்களும் எழுத்தில் காணும் வெற்றுச்சொற்களாக படவில்லை. அவை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும்
வன்மத்தையும்,வக்கிரத்தையும் உணர்த்துபவையாக உள்ளன.

நாவலில் என்னை அதிகம் கவர்ந்தது வட்டார வழக்கு. நவீன புனைக்கதைகளில் உருவாக்கப்பட்ட பெண் பாத்திரங்களில் அஞ்சலையே வலுவான படைப்பு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

-நிலாரசிகன்.

11 comments:

Anonymous said...

அஞ்சலை நாவலுடன் ஒப்பிடுகையில் கருவாச்சி காவியம்(?) ஒன்றுமில்லை.

அவருடைய கோரை நாவல் படித்துப் பாருங்கள் நன்றாக இருக்கும்.

said...

வாங்க முயற்சிக்கிறேன் தல
படிக்கத்தூண்டும் விமர்சனம்

said...

வாங்க முயற்சிக்கிறேன் தல
படிக்கத்தூண்டும் விமர்சனம்

said...

muthal mariyaathai........yilirunthu thuvangiyathu mikavum pidiththathu.

said...

நன்றி வேலன்..

கோரை நாவலை தேடிக்கொண்டிருக்கிறேன்.கிடைத்தபாடில்லை.

நன்றி பாலா.

said...

நல்ல பகிர்வு நிலா...

said...

கடந்த பு.கண்காட்சியில் வாங்க விழைந்தபோது, அஞ்சலை பதிப்பு தீர்ந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்

இந்த வருடமாக வாங்கி படிக்கவேண்டும்.

கண்மணியின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

பகிர்வுக்கு நன்றி.

said...

Thanks Nilaa.... I am searching for that book

said...

/கதையை இங்கே எழுதுவதில் அர்த்தமில்லை,அது வாசகனை முன்முடிவுகளுக்கு ஆழ்த்தி விடும்.

மிகச் சரி.

நல்ல பதிவு.அஞ்சலை இப்போது விற்பனையில் இல்லை. அரசு நூலகங்களில் படிக்கக் கிடைக்கிறது.

Kalaivani said...

padikkum aavalai thoodugiratha ungal vimarsamanam....
pagirthamaiku nandri....

said...

இலக்கிய இதழ்களில் அவ்வப்போது வெளியாகும் கண்மணி குணசேகரனின் கதைகளைப் படிக்கிறேன். அற்புதமான எழுத்துக் கலைஞன்!