Thursday, September 24, 2009

தொலைகடல்



விரல் பற்றும் தொலைவில்
எப்போதும் இருப்பதில்லை
உன் இருத்தல்.
கடிகார முள்ளில்
சிக்கித் துடிக்கும்
மீனாக
நம் ப்ரியங்கள்.
கனவுகளின் கறுப்புவெள்ளை
பிரதேசங்களெங்கும் பொழிகிறது
உன் குரல்மழை.
தூரத்திலிருந்தும்
அதே குறுநகையுடன்
எப்போதும் எனக்குள்
வசிக்கிறாய்
நீ.

10 comments:

Kalaivani said...

Azhagana Kavithai....
Atherkettra Thalaipu....
Migavum iyalbaga ullathu...
padamum vegu azhagu....

said...

//கனவுகளின் கறுப்புவெள்ளை
பிரதேசங்களெங்கும் பொழிகிறது
உன் குரல்மழை.//

//தூரத்திலிருந்தும்
அதே குறுநகையுடன்
எப்போதும் எனக்குள்
வசிக்கிறாய் (நீ)//

snapshotsயை போல வேகமாக கடந்து போகிறது காட்சி படிமங்கள்.

said...

mmmmmmmmmmmm

said...

நல்லாயிருக்கு வரிகள் அனைத்தும்

said...

"எப்போதும் எனக்குள்
வசிக்கிறாய்
நீ."

அனைத்தையும் சொல்லிவிடும் கடைசி வரிகள் அருமை..

"nice one"

said...

கவிதை மேலே பிரசுரிக்கப்பட்ட பெண்ணுக்கா இல்லை உங்கள் மனதுக்குள் வசிக்கும் பெண்ணுக்கா.... அழகு அத்தனையும் அழகு.....


Ponraja
9884126557

nanthini said...

aha very nice

said...

கவிதை நன்றாக உள்ளது...
வாழ்த்துகள்

said...

// அதே குறுநகையுடன்
எப்போதும் எனக்குள்
வசிக்கிறாய்
நீ //

nice lines

said...

tholai kadal....manam thodum thooraththil!!

vazhamai pol azhagu..

vazhththukal nila!!.