Saturday, September 26, 2009

இசை உதிரும் இரவுகள்



1.
உடலின் அதிர்வுகளில்
நிரம்பி வழிகிறது
உனக்கென நான் எழுதிய
பாடல்.
என்னுள்ளிருந்து வெளியேறும்
வெப்பம் சலசலத்தோடும்
நீரோடையின் சாயலை கொண்டிருக்கிறது.
தீரா இசையின் கண்ணீரில்
நிறைகிறது யாக்கை.
அடர்குளிரடிக்கும்
கனத்த இரவில்
தனித்தனியே அழுது பிரிகின்றன
உதிர்ந்த நம் கனவுகள்.

2.

என்னை சுற்றிய
வெற்றிடமெங்கும்
சிறு சிறு பிம்பங்களாய்
நீ
உருமாறியிருக்கிறாய்.
ஒவ்வொரு பிம்பமும் உனது
வெவ்வேறு முகங்களை
அணிந்திருக்கிறது.
பைத்தியநிலை முற்றிய
ஒரு முகமும்
வெளிறிய புன்னகையோடு
ஒரு முகமும்
மர்மம் சூழ்ந்த
கறுப்புக்காடுகளை நினைவூட்டுகின்றன.
எதற்கென்று அறியாமல்
அழுதுகொண்டே இருக்கும்
ஒரு முகத்தில் மட்டும்
சிதறிக்கிடக்கின்றன
ஒராயிரம் ரோஜாக்கள்.

3.
தனிமையின் இசையில்
பிறக்கின்றன
சிறகுகளற்ற பறவைகள் சில.
அவை எழுப்பும்
ஒலிக்குள்ளிருந்து வெளியேறுகின்றன
வர்ணமிழந்த பட்டாம்பூச்சிகள்.
பழுப்பு நிறத்தில்
கடக்கும் மேகங்கள்
நட்சத்திரங்களை சுமந்துபோகின்றன.
ஒவ்வொரு தாளத்திற்கும்
தலையசைக்கின்றன
இரவுச்செடிகள்.
துயர்மிகுந்த இரவின் பாடலை
உட்கொண்டு அருகருகே
மரணிக்கின்றன
நமது நாளைகள்.

-நிலாரசிகன்.

10 comments:

Anonymous said...

"துயர்மிகுந்த இரவின் பாடலை
உட்கொண்டு அருகருகே
மரணிக்கின்றன நமது நாளைகள்" தனித்தனியே அழுது பிரிகின்ற உதிர்ந்த நம் கனவுகள். அழுதுகொண்டே இருக்கும்
ஒரு முகத்தில் மட்டும்
சிதறிக்கிடக்கின்றன
ஒராயிரம் ரோஜாக்கள்.super lines..........nila

Anonymous said...

i want to see ur pen,because how it enjoy ur words and tamil...i see ur சமீபத்தில் ரசித்தவைகளின் தொகுப்பு: நானும் என் விக்கியும், r u feel it how ur pen feel ur words... i want to see ur post nila& his kavithai pen.....

said...

எப்பவும் போல அருமை நிலாரசிகன்.

said...

நல்லா இருக்கு நிலா

said...

கவித்தன்மை உச்சநிலை அடைந்து நர்த்தனமாடுறது உங்கள் கவிதைகளில்

said...

//Pavithra said...
i want to see ur pen,because how it enjoy ur words and tamil...i see ur சமீபத்தில் ரசித்தவைகளின் தொகுப்பு: நானும் என் விக்கியும், r u feel it how ur pen feel ur words... i want to see ur post nila& his kavithai pen.....//


நான் பேனா கொண்டு கவிதை எழுதுவதில்லை பவித்ரா,மடிக்கணினியில் தட்டச்சு செய்கிறேன். So I would write a post named "Naanum en Madikaniniyum" :)

said...

நன்றி அருணா(பூங்கொத்து எங்கே? :)

நன்றி நந்தா

நன்றி மருத்துவர் அய்யா.

said...

epothum pola nalla iruku..valthukal.

said...

hi....yo......!!!

remba nalla yezhuthiyirukkeenga:)

niraya vazhthukal!!

Kalaivani said...

//அடர்குளிரடிக்கும்
கனத்த இரவில்
தனித்தனியே அழுது பிரிகின்றன
உதிர்ந்த நம் கனவுகள்.//
//என்னை சுற்றிய
வெற்றிடமெங்கும்
சிறு சிறு பிம்பங்களாய்
நீ
உருமாறியிருக்கிறாய்.//ஒரு முகத்தில் மட்டும்
சிதறிக்கிடக்கின்றன
ஒராயிரம் ரோஜாக்கள்.//
//துயர்மிகுந்த இரவின் பாடலை
உட்கொண்டு அருகருகே
மரணிக்கின்றன
நமது நாளைகள்.//

arumaiyana kavithai varigal...
miga arputham...
migavum raseethaen.....