Sunday, October 11, 2009

முகம் விற்பவளின் இரவு



1. முகம் விற்பவளின் இரவு


பல ஆண்கள்
மூன்று பெண்கள்
ஒளிக்கண்களையுடைய
வெண்ணிற நாய்க்குட்டிகள்
ஆறு அல்லது ஏழு
இரண்டு துர்மரணம்
மற்றும்
நிறைவேறாக் காதலின்
கடைசிக் கண்ணீர்துளி
இவைகள் நிரம்பிய
நீண்டதொரு பயணத்தின்
முடிவில் அவள் தன் முகத்தை
வயதுமறைக்கும்
கண்ணாடியில் ரசித்துக்கொண்டிருக்கிறாள்
பக்கத்து அறையின்
கதவிடுக்கில் வழிந்துக்கொண்டிருக்கிறது
அவள்
ரத்தத்தின் கண்ணீர்.


2. கடலடியில் நகரும் இருள்*


என்னை நீங்கியவர்கள்
ஒன்று சேர்ந்து
தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள்
எனக்கெதிரான அம்புகள்
தயாரிக்கவும்
என் சவக்குழிப் பூக்கள்
வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது
மாதங்கள் சில கழிந்தபின்
சாம்பல்களுக்கு நடுவில்
மயங்கிக்கிடந்தது என் பீனிக்ஸ்.
இனி,
எவ்விதத்தடையுமின்றி
அவர்கள்
சத்தமிட்டு சிரிக்கலாம்.



3. காற்றில் அலையும் இறகு*


எவர் கண்ணிலும் புலப்படாத
பறவை
நான்கு சமுத்திரங்களை
கடந்து வந்திருந்தது
கரிசல் நிறத்திலான அல‌கும்
செவ்வான்நிற உடலும்
கொண்டிருந்த அப்பறவை
வேம்பின் உச்சிக்கிளையில்
களைப்பாறி முடிந்தபின்
மேலேழும்பி பறக்க துவங்கியபொழுது
அதன் உடல் பிரிந்த இறகொன்று
காற்றில் கலந்தது
அக்கணத்தில்
சமுத்திரங்கள் உருமாற்றங்கொண்டு
மழைத்துளிகளாய் மண்ணில்
விழுந்து சிலிர்த்தன.

* இந்த இரு கவிதைகளும் இம்மாத அகநாழிகை இதழில் வெளியானவை.

10 comments:

said...

first supper

second top class

third cool

said...

கவிதைகள் அருமை...தொடர்ந்து அகநாழிகைக்கு உங்கள் படைப்புக்களை அனுப்புங்கள். வாழ்த்துக்கள் நிலா!!

said...

3-me pidiththullathu.

1-kavithai... sexual worker pathinathaa?

said...

நன்றி பாலா,உமா.

இரசிகை,

இல்லை.

said...

appo.....muthirkanni?

said...

இரசிகை,

நடிகையின் தாய்.

said...

வாழ்த்துகள் நிலாரசிகன்

-ப்ரியமுடன்
சேரல்

said...

நன்றி சேரல்.

said...

appaadi...
illainnu pathil sollaamal,pathilai sonnathukku nantri..:)

but,pathil sonnathukkup piraguthaan kavithai puriyala..!

கலைவாணி said...

மூன்று கவிதைகளுமே நல்லா இருக்கு நிலாரசிகன்.... கவிதைகளுக்கான தலைப்பு சூப்பர்....
வாழ்த்துக்கள்....