Thursday, May 06, 2010

நிசப்த இயல்புகள்






பற்றி எரிகின்ற பெரும் நெருப்பில்
புன்னகை பற்றிய கவிதைகள்
எழுதப்படுகின்றன.
ஒவ்வொரு இலையாக இசையுதிர்ந்து
கொண்டிருக்கும் பின்னிரவில்
நடனமிட்டு வெள்ளைத்தாளில் மரிக்கின்றன
சொற்கள்.
அதீத நேசத்தின் நீட்சி கவிதைகளாக
உருமாறிக்கொண்டிருக்கிறது.
கறுப்புக்கனவுகளுடன் இவ்வுலகம்
நுழைந்த பறவை சிறகடித்துப்பறக்கிறது
நீலம் வழிகின்ற கறுப்பு வானத்தில்.
இயல்பு மாறாத கவிதைகள்
விழியுயர்த்தி வழியனுப்புகின்றன.
அரவமற்ற அதிகாலையில்
கவிதைக்குள்ளிருந்து வெளியேறிய
இணைகோடுகள் வெவ்வேறு
திசையில் பயணிக்க துவங்குகின்றன.


-நிலாரசிகன்.

10 comments:

said...

கவிதையை ரசித்தேன்.
படம் ஏனோ தெரியல நிலா!

said...

நல்லாருக்கு நிலா.

said...

m....padam theriyala.

yenakkup puriyala!

said...

ok......padam vanthuduchchu!

nila:)

said...

நிசப்த இரவுகளில்
அழகான வரிகள்..!

இன்னும் நல்ல படமாக தேர்வு செய்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது... (என் மனசுக்குப் பட்டது.... சொன்னேன்...)

said...

Nice.

said...

கவிதை அருமை

said...

ரொம்ப யோசிக்கிறீங்க நிலாரசிகன். :)

said...

எப்பவும் போல இல்லாமல் ஏதோ ஒரு உணர்வு!

said...

நிசப்த இயல்புகள் கவிதை:
----------------------------

நன்றி ஷங்கர்,பா.ரா,இரசிகை,லாவண்யா,சே.குமார்,குமரை நிலாவன் மற்றும் அருணா.

Thanks Geetha.