Tuesday, May 18, 2010

ஞானக்கவிதைகள் மூன்று



ஞானக் கவிதைகள் மூன்று



1.

வெண்ணிற பூக்கள் சிதறிக்கிடக்கும்
மண்பாதையில் ஒரு பலூனுடன்
நடக்கிறாள் சிறுமி.

வண்ணத்துப்பூச்சியை விரட்டிக்கொண்டு
ஓடுகிறான் காவி உடை அணிந்த
சிறுவன்.

நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும்
மஞ்சள் நிற ஆற்றில் இரண்டு மீன்கள்
துள்ளி விழுகின்றன.

தன் குஞ்சுப்பறவையை முத்தமிட்டு
சிறகடிக்கிறது தாய்பறவையொன்று.

கருநீல வானை கிழித்துக்கொண்டு
வீழ்கிறது மழைத்துளி.

தெருவோர
ஓவியத்திலும் மிச்சமிருக்கிறது
வாழ்க்கை.


2.

நீந்துதலின் சுகம் பற்றியும்
சுதந்திரம் பற்றியும் பேசிக்கொண்டன
இரு மீன்கள்.

குளம் வற்றிய ஓர் இரவில்
பறத்தலின் சுகம் பற்றி அவை
பேச ஆரம்பித்தன.

உரையாடல் முடியும் முன்பே
நின்றுபோனது அனைத்தும்.

மெளனசுகத்துடன் சிரித்துக்கொண்டது
நிலா.

3.

எறும்பின் மரணம் குறித்த
விவாதம் துவங்கிற்று.

முதலாமவன் எறும்பின் மரணம்
நிச்சயம் என்றான்.

இரண்டாமவன் எறும்பிற்கு மரணமில்லை
என்று வாதிட்டான்.

மூன்றாமவன் எறும்பின் மரணம்
கவனத்துக்குரியதல்ல என்றான்.

ரயிலைப் பற்றிய அக்கறையின்றி
தண்டவாள விவாதத்தில் ஊர்ந்து செல்கிறது
ஓர் எறும்பு.

-நிலாரசிகன்.

27 comments:

said...

கவிதைகள் மூன்றும் அருமை .. வாழ்த்துகள்

said...

மூன்றும் அருமை.

said...

ஈரம் காய்வதற்குள் வந்து விழுகின்ற பின்னூட்டங்கள் கவிதை எழுதுதல் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகின்றன. சிநேகிதி,கண்ணன் உங்களைப் போன்ற அன்பர்களால்தான் இன்னும் மிச்சமிருக்கிறது கவிதை என்னில். நன்றிகள் பல.

said...

கவிதைகள் மூன்றும் அருமை! வாழ்த்துக்கள் கவிஞரே!

said...

மூன்று கவிதைகளும் அருமை!

//ரயிலைப் பற்றிய அக்கறையின்றி
தண்டவாள விவாதத்தில் ஊர்ந்து செல்கிறது
ஓர் எறும்பு.
//

ரசித்தேன்!

said...

க‌விதைக‌ள் ந‌ன்று நிலார‌சிக‌ன். க‌விமொழி ந‌ன்றாக‌ மெருகேறி வ‌ருகிற‌து உங்க‌ளுக்கு.

மூன்றாம் க‌விதையின் எறும்பும் த‌ண்டாவ‌ள‌மும் உங்க‌ளுடைய‌ ப‌ழைய‌ க‌விதையில் வேறு மாதிரி ப‌டித்த‌ நினைவு.

said...

3 - me arumai...

2 vathu yenakku pidiththirukkirathu!

vaazhththukkal nila..!!

said...

மூன்றும் அழகு.

முதல் கவிதை மிக பிடித்தது.

said...

பூங்கொத்து!

said...

மூன்றும் சூப்பர்

said...

//தெருவோர
ஓவியத்திலும் மிச்சமிருக்கிறது
வாழ்க்கை.//

அருமை நிலாரசிகன்...

மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்கிறேன் இந்த வரிகளை..

said...

தலைவா ... பின்னிடீங்க, கவிதைகள் மூன்றும் அருமையோ அருமை ...
உங்க லெவலுக்கு சத்தியமா என்னால யோசிக்க கூட முடியாது தல ...

said...

மூன்றும் பிடித்தமானவையாய் இருக்கின்றன நிலாரசிகன்!

-ப்ரியமுடன்
சேரல்

said...

moondrum arumai :)

said...

வாழ்த்திய நட்புகளுக்கு நன்றிகள் பல...

said...

ரயிலைப் பற்றிய அக்கறையின்றி
தண்டவாள விவாதத்தில் ஊர்ந்து செல்கிறது
ஓர் எறும்பு

intha varigal romba nalla iruku....

said...

ungalin kavidhaigal iyarkaiyin paathirangalai bathiramai kondu selgiradhu..

rasithen, rasikindren endrun rasipen

ullam niraindha nandriyudan ungal rasigan

Sundar

said...

மூன்றுமே அருமை நிலாரசிகன். :)

//தண்டவாள விவாதத்தில்// 'விவாதம்' மிக அழகு.

//தெருவோர
ஓவியத்திலும் மிச்சமிருக்கிறது
வாழ்க்கை//
எவ்வளவு ஆழமான கருத்து இது. அசாதாரணமாக சொல்லியிருக்கிறீர்கள்.
இக்கவிதைக்கு பொருத்தமான தலைப்பு.
வாழ்த்துகள் நிலா..
மேன்மேலும் வளர...!

said...

'எதிர்காற்றில் நடந்துவரும் சுடிதார்ப் பெண்போல்'
வெளிப்படுகிறது :)
வந்தேன்..
வாசித்திருக்கிறேன்!!

said...

எல்லோரும் சரியா சொல்லி இருக்காங்க நிலா. என் பங்கும்..

மூணுமே ரொம்ப பிடிச்சிருக்கு.

said...

நன்று

said...

மரணங்கள் கவனத்திற்குரிய தகுதியினை இழந்துவிட்டது....
நல்ல கவிதை!
வாழ்த்துக்கள் நண்பரே.

said...

அருமை நண்பா

said...

நண்பர்களுக்கு நன்றி :)

said...

ரொம்ப நல்லாருக்கு...

said...

ரொம்ப நல்லாருக்கு...

said...

மூன்றும் அருமை ரசித்தேன்