Tuesday, June 01, 2010

பறவை வேடமிட்ட புல்லுருவி


1.
கடற்கரை மணலில்
சிப்பிகள் பொறுக்கும் சிறுமியாக
தோற்றமளித்து
பின்,
மழை ரசிக்கும் தேவதையின்
சாயலைக்கொண்டிருந்து
எதிர்பாரா கணத்தில்
நெருப்பை உமிழும் டிராகனாக
உருப்பெற்றது புல்லுருவியொன்று.
முரண்பாடுகளை கவ்விக்கொண்டு
தேசமெங்கும் பறந்து தீர்த்தது.
ஆத்மார்த்தமான நட்புக்குள்
எச்சமிட்டு உன்மத்த நிலையில்
உயரப்பறக்கிறது இப்போது.

2.
எனது சந்தோஷத்தின் சாவியை
திருடித் தொலைத்துவிட்டு
ஒன்றும் நடந்துவிடாத பாவனையில்
முன் தோன்றுகிறாய்.
கற்களாலான துர்தேவதைகளின்
மடியில் துயில்வது
உனக்கு பிடித்தமானதாக இருக்கிறது.
எதிரிகளின் கூடாரமெங்கும்
உன் பெயரை ஒலிக்கச்செய்கிறாய்..
முடிவில்,
ஒன்று மறந்தாய்..
மழை தின்ற வெயிலுடன்
நடக்கிறது உன் யுத்தம்.

- நிலாரசிகன்.

5 comments:

said...

மிகவும் அருமை.வாழ்த்த்துக்கள்

said...

இப்போதுள்ள சூழ்நிலையில் எது படிச்சாலும் i read only between lines ...
இதுவே வருத்தமா இருக்கு

said...

மிக அருமை. ரெண்டாவது கவிதை ரொம்ப பிடிச்சுருக்கு நிலா :)

said...

இரண்டாவது கவிதையை இரசித்தேன்! :))

said...

NilaRaseeganukku,

Nathaiyudan Kazhintha poluthual kavithaiyai pol irukiratha intha kavithaiyum...

//மழை தின்ற வெயிலுடன்
நடக்கிறது உன் யுத்தம்.
//

Migavum Arumai...