Monday, June 07, 2010

நிழலாள்

நிழல்களில் நடக்கும் விளையாட்டை
ஆரம்பித்து வைத்தாள் தர்ஷிணி.
ஒவ்வொரு நிழலாக தாவிக்குதித்து
கடந்து செல்வாள்.
பன்னீர்ப்பூவொன்று குதித்து செல்வதை
போலிருக்கும் அவளது செயல்.
இன்று
நிழலற்ற தெருவில்
தனியே நடக்கிறாள்.
அவள் இல்லாத தெருவில்
நிழல்களே இல்லை
இப்போது.

- நிலாரசிகன்

8 comments:

said...

தலைப்பே கவிதை.

said...

"அவள் இல்லாத தெருவில்
நிழல்களே இல்லை
இப்போது."

- அருமை..

said...

கவிதை அருமை

said...

நன்றி விக்னேஷ்வரி,சிநேகிதி,நிலாவன் :)

said...

Azhagu.....

said...

ச‌மீப‌மாக‌ எழுத‌ப்ப‌டும் க‌விதை போலில்லை. க‌ரு அழ‌கான‌து.

said...

புகைபடமும் கவிதையும் ரம்யம்...

said...

வலி.