என் "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" சிறுகதை நூலிற்கு விஜய் மகேந்திரன் எழுதிய விமர்சனம்:
http://vijaymahendran.blogspot.com/2010/06/blog-post_14.html
-------------------------------------------------------------------------------------------------------
கவிதைகள் மூன்று:
1.உயிர்மிருகம்
மொழி மரணித்த இரவொன்றின்
தாழ்வாரத்தில் சிதறிக்கிடக்கின்றன
சில ஞாபகங்கள்.
இருத்தல் தொலைந்த அவமானத்தில்
உடைகிறது தேநீர்க்கோப்பை.
சிறகறுந்த பறவைகளின் குருதி
மிகுந்த வெப்பத்துடன் அறை நிரப்புகிறது.
காரணங்கள் ஏதுமின்றி வீறிடுகிறது
இந்த உயிர்மிருகம்.
2. துர்தேவதையின் நடனத்தில் தொலைந்தவன்
மழைத்துளியொன்றை ஏந்தி வந்தாள்
கருமை நிற தேவதை.
அத்துளி பேருருவம் பெற்று
ஒரு மாளிகையான தருணம்
சிறுவனாகியிருந்தேன்.
கண்கள் மின்ன என்னை
மாளிகையின் உள்ளிழுத்துக்கொண்டாள்.
புற உலகிற்கான கதவு மூடப்பட்டது.
நீண்டதொரு மயக்கத்திலிருந்து
விடுபட்ட கணம்
என்னுலகம் களவாடப்பட்டிருந்தது.
ஈக்கள் மொய்க்கும் புன்னகையுடன்
நடனமிடுகிறாள் கருமை நிற
வதை.
3. இப்படித்தான் நீங்கள்..
அனுமதியின்றி உள்நுழைந்தீர்கள்.
சத்தியங்களை பொய்யாக்கினீர்கள்.
நண்பர்களிடையே திரை அமைத்தீர்கள்.
வேடமிட்டு அற்புதமாய் நடித்தீர்கள்.
தகித்தபோது வெந்நீர் ஊற்றினீர்கள்.
இல்லாத சோகத்தை அரங்கேற்றினீர்கள்.
தூக்கி எறிந்ததாய் பொய்யுரைத்தீர்கள்.
என் நண்பர்களின் நட்பானீர்கள்.
நிலவில் எச்சில் உமிழ்வதாய்
வானம் பார்த்து உமிழ்ந்தீர்கள்.
இப்படியான நீங்கள்
இப்போது,
கடவுளின் பிள்ளை என்கிறீர்கள்.
இப்படித்தான் நீங்கள்
என் மனவெளியின்
பட்டாம்பூச்சியாயிருந்து
மெல்ல மெல்ல புழுவாக
உருப்பெற்றீர்கள் என்பதை அறிவீர்களாக!
9 comments:
I used to read your poems for more than 5 years, but i never commented. Your recent poem "ippadi than neengal" is amazing...especially பட்டாம்பூச்சியாயிருந்து
மெல்ல மெல்ல புழுவாக
உருப்பெற்றீர்கள் என்பதை அறிவீர்களாக!
Congrats
I used to read your poems for more than 5 years, but i never commented. Your recent poem "ippadi than neengal" is amazing...especially பட்டாம்பூச்சியாயிருந்து
மெல்ல மெல்ல புழுவாக
உருப்பெற்றீர்கள் என்பதை அறிவீர்களாக!
Congrats
துர்தேவதையின் நடனத்தில் தொலைந்தவன் ரொம்ப பிடித்தது.
உயிர்மிருகம் பிடித்தது.
Good kavithai's. I enjoyed reading them.
Pls. visit my blog and provide your valuable comments
-Sriram
http://sriramsrinivasan.net
மூன்றும் அழகு..மூன்றாம் கவிதை மிக மிக அழகு!
http://www.nilaraseeganonline.com/2010/06/blog-post_14.html
தல, மேற்கண்ட சுட்டியை திறப்பதற்குள் தாவு தீருது. என்னன்னு பாருங்க.. எந்த பதிவின் சுட்டியை எப்ப திறந்தாலும் ப்ரவுசர் தொங்கீடுது. :(
//தல, மேற்கண்ட சுட்டியை திறப்பதற்குள் தாவு தீருது. என்னன்னு பாருங்க.. எந்த பதிவின் சுட்டியை எப்ப திறந்தாலும் ப்ரவுசர் தொங்கீடுது. :(//
இந்தப்பிரச்சினைக்கு இப்போது முடிவு கட்டிவிட்டேன் தலைவரே! கொஞ்சம் வேலைப்பளு அதனால்தான் இத்தனை நாட்களாய் சரி செய்யமுடியாமல் போய்விட்டது :)
இப்படித்தான் நீங்கள்..
அருமை..!
Post a Comment