1.
உதிர்ந்த முத்தங்களை பொறுக்கும்
நட்சத்திரா தன் கன்னத்தின் சுருக்கங்களை
வருடிக்கொடுக்கிறாள்.
சிதறிக்கிடக்கும் முத்தங்களின் நடுவே
காலம் கண்சிமிட்டிக்கொண்டிருப்பதை
வலியுடன் நோக்குகிறது அவளது கண்கள்.
தீராப்பசியுடன் வானம் பார்த்து
கதறுகின்றன வீழ்ந்த இலைகள்.
மெல்ல வலுக்கிறது
நிறமற்ற மழை.
2.
சிறுவனின் மணல்வீட்டை
அழித்துப்போனது அலை.
அவளது முதல் கோலத்தை
நனைத்துச் சிரித்தது மழை.
வேலியோர முள்ளில்
உடைபடுகிறது பலூன்காரனின்
வெண்ணிற பலூன்.
காரணம் அறியாமல்
அழுதுதீர்க்கிறார்கள்
அவர்கள்.
14 comments:
beautiful...
//காரணம் அறியாமல்
அழுதுதீர்க்கிறார்கள்
அவர்கள்.///
அருமை. வாழ்த்துக்கள்
எனக்கு 2 அப்புறம் 1
நன்றி கலகலப்ரியா,சரவணன்,வினோ
இரண்டாவது மிகவும் யதார்த்தமான கவிதை..
மிகவும் அருமை..
2.அருமை... அருமை.... அருமை...
1.அருமை...
வாழ்த்துக்கள்
மனதை வருடிப் போகும் கவிதைகள்
முதல் கவிதை மிகப் பிடித்தது
"தீராப்பசியுடன் வானம் பார்த்து
கதறுகின்றன வீழ்ந்த இலைகள்."
- Chance e illa nila. Superb lines.
I loved it so much.
- Priya
2-vathu purinthathu.....pidikkavum seithathu.
vaazhthukkal nila.....:)
நன்றி ப்ரியா,இரசிகை.
முதல் கவிதை வெகு அற்புதம்...
அருமையான கவிதை... நிறமற்ற மழை - பேசிக் கொண்டே இருக்கிறது.
முதல் கவிதை கிட்டத்தட்ட எனக்குப் பிடித்திருக்கிறது
Post a Comment