Tuesday, September 07, 2010

நீங்கள் இறந்து போவீர்கள்



1.
நீங்கள் இறந்து போவீர்கள்
என்று சொல்லித்திரிபவனை
சந்தித்தேன்.
தான் காணும் மனிதர்களிடம்
அவன் உதிர்க்கும் மூன்று வார்த்தைகள்
அவை மட்டுமே.
குரூரத்தின் உச்சம் இவனென்றார்கள்.
ஒரு பன்றியை பார்ப்பதுபோல்
அவனை பார்த்து நகர்ந்தார்கள்
எதைப்பற்றிய பிரக்ஞையுமின்றி
நீங்கள் இறந்து போவீர்கள்
என்று முகம் நோக்கி சொல்பவனை
நீங்களும் காணக்கூடும்
வழியிலோ
அல்லது
கண்ணாடியிலோ.


2.மரணித்தல்

நேற்று மரணித்தார்
நண்பர் ஒருவர்.
நான்கு மரணத்தை
ருசித்து வீழ்கிறது அருவி.
கடல் கொண்ட உயிர்கள்
சில.
இறகு உதிர்த்து சாலையோரம்
உயிரற்று கிடக்கிறது
பறவையொன்று
யார் யாருக்கோ
அறியாத காரணங்களுடன்
மரணம் நிகழ்கிறது.
எதற்கிந்த கவிதை எழுதும்
வேலை என்றொரு
கேள்வி எழுப்பப்பட்டது.
இப்போது
காரணமுடன் மரணிக்கிறேன்
நான்.
-நிலாரசிகன்.

8 comments:

said...

என்ன இது மரணத்தை பற்றிய கவிதைகள்?

அது என்றாவது வரத்தான் செய்யும் அனைவருக்கும். விடுத்து வேறு வேலையை பார்ப்போம்.


இருக்கும் வரை கஸ்டமோ நஸ்டமோ வாழ்க்கையை அனுபவிப்போம்

said...

இரண்டுமே மிக அருமை!!

said...

nice....

said...

:)

said...

மரணம் ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயம் அல்ல நெருங்கியவர் யாரும் இல்லாதபோது.கண்ணாடியில் பார்த்து நான் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள் தான் இவை. ஒவ்வொருவரும் தம் வாழ்வில் ஒரு முறையாவது பிரச்னைகளின் உச்சத்தில் இருக்கும்போது இறந்துவிட ஆசைப்படுகிறார்கள் என்பது என் ஊகம்.அப்படி நினக்காதவர்கள் பாக்கியவான்கள்.

said...

நன்றி நண்பர்களே...

said...

முதல் கவிதை கொஞ்சம் பிரமாண்டமான உணர்வைத் தருகிறது.

said...

Mikavum varutham alikirathu, anal manathai thotu vitathu..