Tuesday, October 26, 2010

சித்திரப்பெண்




மயிலிறகுகொண்டு
அழகி ஒருத்தியின்
உருவம் தீட்டினாய்.
பாதங்களில் தொடங்கி
நெற்றிமுடித்து
விசித்திரம் காட்டினாய்.
பின்பு
அவள் உதடுகளில்
புன்னகை சேர்த்து
புள்ளி வைத்தாய்.
அது ஒரு
முடிவின் தொடக்கம்
என்றும் விளக்கமளித்தாய்.
உன் மௌன விசும்பல்
யாருடைய செவிகளையும்
தீண்டிடாத தருணத்தில்
அவள் இடதுதொடையில்
உனது கையொப்பமிட்டு
பரிசளித்தாய்.
அவள் இப்பொழுது
பேரழகியாக
மாறத்தொடங்கியிருக்கிறாள்.
-நிலாரசிகன்.

12 comments:

said...

அழகி ஓவியம் அழகு

said...

அருமையான கவிதை!!

said...

//////உன் மௌன விசும்பல்
யாருடைய செவிகளையும்
தீண்டிடாத தருணத்தில்
அவள் இடதுதொடையில்
உனது கையொப்பமிட்டு
பரிசளித்தாய்.
அவள் இப்பொழுது
பேரழகியாக
மாறத்தொடங்கியிருக்கிறாள்.
////////////

அருமையான வார்த்தை திருவிழா கவிதையில் அசத்தல்




அசத்தல் நண்பரே .அருமையான கவிதை

Anonymous said...

ஓவியம் அழகு

said...

ஓவியம் அழகு... (கவியோவியம்)

இதையும் பாருங்க...


www.aaraamnilam.blogspot.com

said...

எப்படிங்க இப்படி.... சுப்பர் . வாழ்த்துக்கள்.

said...

அழகான கவிதை!

said...

Nalla irukku

said...

kavithai azhahu..
padam innum nalla select seithirukkalaamo??...ithey base-il.

vaazhthukal nila...:)

said...

வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே...

said...

அழகு..

said...

Migavum arumayana Kavithai...