1.
காற்றின் உட்புறமிருந்து
இசைக்கும் கனவின் பாடலொன்று
அகாலத்தின் நீள அகலத்தை அளந்தபடி
நகர்ந்துகொண்டிருந்த கணத்தில்
கிளை முறிந்த வலியில்
துடித்தழுகிறது கொன்றைமரம்.
திடுக்கிடல் ஏதுமின்றி விழுகின்ற
கிளையை ஏந்திக்கொண்டு கிளர்ந்தது
தெரு.
அந்தரத்தில் மிதக்கின்ற வீட்டின்
கதவுகளைத் திறந்துகொண்டு
உலர்ந்த பூக்களுடன் வெளி வருகிறாள்
சிறுமியொருத்தி.
முணுமுணுக்கும் அவளது உதடுகள்
கனவின் பாடலொன்றை
உதிர்த்துக்கொண்டிருக்கிறது.
2.
இலைகளில் துளசியும்
வேர்களில் விஷமும்
கொண்டிருக்கும்
விசித்திரம்
நீ.
3.
நான் என்பது
ஒரு துளி கடல்
ஒரு கல்லோவியம்
ஒரு வண்ணத்துப்பூச்சி
ஒரு வனம்
ஒரு யுகம்
ஒரு பறவை
ஒரு துயர இரவு
அல்லது
ஒரு மழைநாளின் தேநீர்.
அல்லது
ஒரு உடைந்த கனவு
அல்லது
முரண்களால் ஆன
உயிர்க்கவிதை என்க!
-நிலாரசிகன்.
15 comments:
1) "அகாலத்தின் நீள அகலத்தை அளந்தபடி
நகர்ந்துகொண்டிருந்த கணத்தில்
கிளை முறிந்த வலியில்
துடித்தழுகிறது"
நன்றாக இருக்கிறது!
2) Super!
3) நான் என்பது... சுயம் பத்தி ரொம்ப யோசித்து பார்க்க வைக்குது...
எல்லாருமே இதே மாதிரி முரண்களால் ஆன மனிதர்கள் தான்...
//அந்தரத்தில் மிதக்கின்ற வீட்டின்
கதவுகளைத் திறந்துகொண்டு
உலர்ந்த பூக்களுடன் வெளி வருகிறாள்
சிறுமியொருத்தி.
முணுமுணுக்கும் அவளது உதடுகள்
கனவின் பாடலொன்றை
உதிர்த்துக்கொண்டிருக்கிறது.//
அருமையான வரிகள்... வரிகளில் தோன்றும் சித்திரங்கள் கண் முன்னே விரிகின்றன
மூன்றும் அருமை.
//முரண்களால் ஆன
உயிர்க்கவிதை//
மெய் வரிகள்.
மூன்றும் அருமை.
//முரண்களால் ஆன
உயிர்க்கவிதை//
மெய் வரிகள்.
//இலைகளில் துளசியும்
வேர்களில் விஷமும்
கொண்டிருக்கும்
விசித்திரம்
நீ.//
மூன்றில் இதை அதிகம் ரசித்தேன்.
நன்றி Yourfriendpr
நன்றி..
--> சர்ஹீன்
--> ராமலட்சுமி அம்மா
--> சே.குமார்
Super Nila Sir !!!
மூன்றுமே அருமையாக உள்ளது..
Moondru Kavithaigalum migavum arumai...
Regards,
Chandra
நீ என்பதன் அர்த்தம் எப்போதும் போல் இப்போதும் ஒரு புது பரிமாணத்துடன்... முதலில் விளங்கவில்லை விசத்தின் வீரியம் வேரில் தேங்கினும் இலையில் எப்படி புனிதமாகுமென....
புரிந்ததும் தெளிந்தது
இப்போதும் நீ ஒரு
பொறியியற் கணிதமென்று....
எதேனும் விடையிருக்கும் அதற்குள்
எனக்குத் தான் இதுவரை விளங்கவில்லை
:)
நன்றி மேடி,வெறும்பய,சந்திரா,கயல்..
கவிதைகள் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் இரண்டாம் கவிதை போன்ற கவிதைகளை இனி தவிர்த்து விடுவது நலம்
இலைகளில் துளசியும்
வேர்களில் விஷமும்
கொண்டிருக்கும்
விசித்திரம்
நீ.
ஆஹா அருமை நிலாரசிகரே!!!
naan enbathu kavithai simply superb by
arun
http://arun-a6un.blogspot.com
Post a Comment