1.
உனக்கும் எனக்கும் இடையில்
மூன்று நதி ஓடிக்கொண்டிருக்கிறது.
முதல் நதியில் ஓர் ஓடமும்
இரண்டாம் நதியில ஓர் இலையும்
மிதப்பதை மூன்றாம் நதியில்
அமர்ந்திருக்கும் நீள்தாடி கிழவன்
ரசித்துக்கொண்டிருக்கிறான்.
கற்பனைகளாலான கயிற்றில்
நாம் கட்டப்படுகிறோம்.
நம் பாவத்தின் அறிக்கைகளை
வெளியிடும் நாளில்
கட்டுக்கள் அவிழ்ந்து மீண்டும்
இணைகிறோம்.
நம்மிடையே நிற்காமல்
இப்போதும்
ஓடிக்கொண்டிருக்கிறது அதே நதி.
2.
யார் யாரோவாக அறிமுகமாகிறோம்.
யாதுமாகி உள் அமர்கிறோம்.
எதுவுமற்று சாம்பலென உதிர்கிறோம்.
3.
தாயின் ஸ்பரிசங்களோடு
தொடுகின்ற விரல்களை
பெற்றிருக்கிறாய்.
நீலக்கடலின் ஆழ்ந்த அமைதி
உன் விரல்களெங்கும் விரவிக்கிடக்கிறது.
வலிகளை கண்ணீர்த்துளிகளால்
நீக்குகிறாய்.
மார்போடு அணைத்துக்கொண்டு
நீங்குதலின் அர்த்தங்களை தெருவெங்கும்
சிதறவிட்டபடி கதறும் சருகுகளின்
மேல் நடந்து செல்கிறாய்.
மீண்டும்,
மழைக்கு காத்திருக்கிறாள் சிறுமி.
-நிலாரசிகன்.
உனக்கும் எனக்கும் இடையில்
மூன்று நதி ஓடிக்கொண்டிருக்கிறது.
முதல் நதியில் ஓர் ஓடமும்
இரண்டாம் நதியில ஓர் இலையும்
மிதப்பதை மூன்றாம் நதியில்
அமர்ந்திருக்கும் நீள்தாடி கிழவன்
ரசித்துக்கொண்டிருக்கிறான்.
கற்பனைகளாலான கயிற்றில்
நாம் கட்டப்படுகிறோம்.
நம் பாவத்தின் அறிக்கைகளை
வெளியிடும் நாளில்
கட்டுக்கள் அவிழ்ந்து மீண்டும்
இணைகிறோம்.
நம்மிடையே நிற்காமல்
இப்போதும்
ஓடிக்கொண்டிருக்கிறது அதே நதி.
2.
யார் யாரோவாக அறிமுகமாகிறோம்.
யாதுமாகி உள் அமர்கிறோம்.
எதுவுமற்று சாம்பலென உதிர்கிறோம்.
3.
தாயின் ஸ்பரிசங்களோடு
தொடுகின்ற விரல்களை
பெற்றிருக்கிறாய்.
நீலக்கடலின் ஆழ்ந்த அமைதி
உன் விரல்களெங்கும் விரவிக்கிடக்கிறது.
வலிகளை கண்ணீர்த்துளிகளால்
நீக்குகிறாய்.
மார்போடு அணைத்துக்கொண்டு
நீங்குதலின் அர்த்தங்களை தெருவெங்கும்
சிதறவிட்டபடி கதறும் சருகுகளின்
மேல் நடந்து செல்கிறாய்.
மீண்டும்,
மழைக்கு காத்திருக்கிறாள் சிறுமி.
-நிலாரசிகன்.
7 comments:
//
மார்போடு அணைத்துக்கொண்டு
நீங்குதலின் அர்த்தங்களை தெருவெங்கும்
சிதறவிட்டபடி கதறும் சருகுகளின்
மேல் நடந்து செல்கிறாய்.
மீண்டும்,
மழைக்கு காத்திருக்கிறாள் சிறுமி.
//
மிக மிக அருமை கவிஞரே!
கண்ணில் ஒட்டிக் கொண்டு மனது முழுக்க இனிக்கிறது!
அழகியலோடு கற்பனையும் மிக மிக அழகு!
அருமை
சிறந்த கவிதை!
மிக அருமை
அருமையான வரிகள் ..
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களது வலைப்பக்கம் வந்தேன்.கவிதையெல்லாம் எப்போதும் போல அழகு தான்.ஆனால் நான் இன்னும் அதிகமாகவே உங்களிடமிருந்து எதிர்பார்த்து, ஆவலோடு பக்கத்தை திருந்து பார்த்தேன். ஏமாற்றி விட்டீர்கள்.
ரசிகனுக்குள் என்ன இந்த மாற்றம்/ ஏன் தடுமாற்றம்...? இன்னும் உங்களிடம் நிறைய எதிர்பார்த்து காத்திருக்கும்.
உங்கள் அன்பின் இணைய நண்பன்.
ச.இமலாதித்தன்
2-vathu kavithai remba pidichathu.
//
நீலக்கடலின் ஆழ்ந்த அமைதி
உன் விரல்களெங்கும் விரவிக்கிடக்கிறது.
//
superb...
Post a Comment