Thursday, January 06, 2011

நிழல்களுடன் பேசுபவன்



1.
விடைபெறல் அவ்வளவு
எளிதாய் நிகழ்வதில்லை.
ஒரு கையசைப்பு போதும்
கடைசி வரை உள்ளிருக்க.

2.
வெளியே கேட்கிறது அவர்களது
காலடி சப்தம்.
ஓடிச்சென்று ஒளிந்துகொள்ளவோ
அல்லது
எதிர்த்து நின்று உற்றுப்பார்க்கவோ
இயலாமல் கால்கள் கட்டிக்கொண்டு
தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறேன்.
அவர்கள் வருகிறார்கள்.





3.
நிழல்களுடன் பேசுபவன் கைகளில்
வண்ணத்துப்பூச்சியொன்றை வரைகிறான்.
ஒவ்வொரு நிழலுடன்
பேசும்பொழுது அது சிறகடித்துக்கொள்கிறது.
உக்கிர வெப்பம் பாதங்களின் வழியே
அவனுள்ளேறும்போது
வலியுடன் கண்ணீர்சிந்துகிறது.
கல்லறை நிழலில்
அவன் உறங்கும் தருணங்களில்
தன் வர்ணங்களை கறுப்பு வெள்ளையாக
மாற்றிக்கொள்கிறது.
யாருமற்ற வெளியொன்றில்
ஒரு தவறை
தன் நிழலுடன் அவன் துவங்குகையில்
நீங்கிச் செல்கிறது நிரந்தரமாய்.


4.
யாரும் அறியா ரகசிய பொழுதுகளில்
அதன் தனித்த உலகில்
கட்டியமைக்கப்பட்ட சொற்களை
சிதறடித்து விளையாடி மகிழ்கிறது.
சொற்கள் சிதறி வீழ்வதை
பேராவலுடன் ரசித்து நடனமிடுகிறது.
சில நாட்களாய் அதன் வருகையை
எதிர் நோக்கி காத்திருக்கிறேன்
சிதறாத சொற்களின் நடுவே அது
மரித்துப்போனதாக எனக்குச் சொல்லப்படுகிறது.
நிச்சலன என்னுலகை தேடி துவங்குகிறது
என் பயணம்.

 

-நிலாரசிகன்.

---------------------------------------------------------------------------
சென்னை புத்தக காட்சியில் என் நூல்கள் கிடைக்குமிடம்.
வெயில் தின்ற மழை - கவிதைகள் - உயிர்மை பதிப்பகம் - அரங்கு எண்: F3
யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - சிறுகதைகள் - திரிசக்தி பதிப்பகம் - அரங்கு எண்: 188
---------------------------------------------------------------------------

9 comments:

said...

/ஒரு கையசைப்பு போதும்
கடைசி வரை உள்ளிருக்க/

-- நச்சுனு ஒரு உண்மை!

2nd one - சாதரணமான ஒரு விஷயத்தை சாதரணமாவே சொல்லிட்டீங்க!

4th one.. அருமை (ரூம் போட்டு யோசிச்ச அளவுக்கு) :)

said...

//நிழல்களுடன் பேசுபவன் கைகளில்
வண்ணத்துப்பூச்சியொன்றை வரைகிறான்.
ஒவ்வொரு நிழலுடன்
பேசும்பொழுது அது சிறகடித்துக்கொள்கிறது//
இந்தக் காட்சியை ரசித்தேன்!

said...

யாரும் அறியா ரகசிய பொழுதுகளில்
அதன் தனித்த உலகில்
கட்டியமைக்கப்பட்ட சொற்களை
சிதறடித்து விளையாடி மகிழ்கிறது.
சொற்கள் சிதறி வீழ்வதை
பேராவலுடன் ரசித்து நடனமிடுகிறது.

மிக அருமையான வரிகள்... :)

said...

விடைபெறல் அவ்வளவு
எளிதாய் நிகழ்வதில்லை.
ஒரு கையசைப்பு போதும்
கடைசி வரை உள்ளிருக்க. :)


யாரும் அறியா ரகசிய பொழுதுகளில்
அதன் தனித்த உலகில்
கட்டியமைக்கப்பட்ட சொற்களை
சிதறடித்து விளையாடி மகிழ்கிறது.

மிக அருமையான வரிகள்...

said...

//விடைபெறல் அவ்வளவு
எளிதாய் நிகழ்வதில்லை.
ஒரு கையசைப்பு போதும்
கடைசி வரை உள்ளிருக்க//

:)

said...

Fantastic!

said...

கவிதைகள் அருமை

said...

நன்றி நண்பர்களே... :)

said...

muthal kavithaiyai vigadanla naan padichen......

meethamum nallaayirukku.

vaazhthukal nila....