1.பொம்மைகள் குவித்திருக்கும் அறை
பொம்மைகள் குவித்திருக்கும்
அறைக்குள் அனுமதியின்றி நுழைகிறது
மெளனம்.
ஒவ்வொரு பொம்மையிடமும் ஏதோவொன்றை
தேடுகிறது.
அறையின் மூலையில் அமர்ந்து
சிறிதுநேரம் விசும்புகிறது.
பின்,
பெண்ணாகி வெளியேறுகிறது.
மரித்த குழந்தையின் பொம்மைகளை
வேறெப்படி அணுகுவாள் அவள்?
2.கல்பொம்மைகள்
என் தனிமைக்குள் வந்துவிழுந்த
கற்களை பத்திரப்படுத்தியிருக்கிறேன்.
அவை வெவ்வேறு நிறத்திலும் அளவிலும்
இருக்கின்றன.
ஒவ்வொரு கற்களிலும் எறிந்தவரின்
பெயரை வெகு சிரத்தையுடன் எழுதுகிறேன்.
நீ எறிந்த கற்களில் மட்டும்
சிறு சிறு பொம்மைகள் வடித்திருக்கிறேன்.
ப்ரியங்களால் நிறைந்திருக்கும்
பொம்மைகளில்
உன் பிரிவு நாளை குறித்துவிட்டு
தனிமைக்குள் நுழைந்து
கதவடைத்துக்கொள்கிறேன்.
என் தனிமையுடன் உரையாடிக்கொண்டே
இருக்கின்றன கல்பொம்மைகள்.
- நிலாரசிகன்.
10 comments:
முதல் கவிதை துயரம் நிறந்த இரு துளிக் கண்ணீரை உதிர்க்கச்செய்தது நிலா!
//
உன் பிரிவு நாளை குறித்துவிட்டு
தனிமைக்குள் நுழைந்து
கதவடைத்துக்கொள்கிறேன்.
என் தனிமையுடன் உரையாடிக்கொண்டே
இருக்கின்றன கல்பொம்மைகள்
//
முடித்த விதம் அருமை!
நன்றி கயல்
வரிகளை செதுக்கிய விதம் மிக அருமைங்க
நன்றி அரசன்
இரண்டும் அருமை.
முதலாவது மிக நெகிழ்வு.
பொம்மைகள் குவித்திருக்கும்
அறைக்குள் அனுமதியின்றி நுழைகிறது
மெளனம்.
ஒவ்வொரு பொம்மையிடமும் ஏதோவொன்றை
தேடுகிறது.
இந்த கவிதை எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது...
என் பிரிவு நாளை குறித்துவிட்டு
தனிமைக்குள் நுழைந்து
கதவடைத்துக்கொள்கிறேன்.
என் தனிமையுடன் உரையாடிக்கொண்டே
இருக்கின்றன கல்பொம்மைகள்.
- Really amazing this line...
Fantastic
நன்றி ராமல்ஷ்மி அம்மா :)
பெருமெளனம் கொண்டு மனதைப் போர்த்திப் போகின்றன இக்கவிதைகள்...
வலி மிக்கதாய் இருந்தாலும் அளவிட முடியாத வசீகரம் கொண்டதாய் இருக்கிறது மௌனமெனும் சொல், எப்பொழுதும்...
thalaippe pidichchathu nila.....
Post a Comment