Friday, April 22, 2011

குடுவை மீன்

 
வெற்றிடங்களால் நிரம்பியிருக்கும்
அறையை தன் சிறு கண்களால்
பார்க்கிறது கண்ணாடிக்குடுவை மீன்.
நிசப்த அறைக்குள் நீண்டதொரு
கடற்கரையை காண்கிறது.
அக்கரையில் ஈரம் படர
அதன் வாலசைவில் பேரலையொன்றை
உருவாக்குகிறது.
அலை வழியே கரையடைந்து
யாருமற்ற கரையில்
நீந்தியும் நடந்தும் விளையாடுகிறது
கடலை படைத்த குடுவைமீன்.
கடலிருக்கும் அறைக்கதவு
தட்டப்படும் வரை.

(இன்று மரணித்தை தழுவிய நான் வளர்த்துவந்த மீன் “வந்தியத்தேவனுக்கு”. புகைப்படத்தில் வந்தியத்தேவன்)
-நிலாரசிகன்.

5 comments:

said...

கடலிருந்த அறைக்கதவு தட்டப்பட்டது யாரால் என்பதை உணர்த்துவதாகப் பின்குறிப்பு:(! வருத்தத்தில் பங்கு கொள்கிறேன்.

said...

kavithai nallaayirukku.....

meen ku name vithiyaasamaayirukku.

said...

:-(

said...

கவிதை மிக அருமை. :)
வந்திய தேவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :(

said...

கவிதை மிக அருமை. :) வந்திய தேவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :(