Saturday, October 27, 2007

சக்களத்தி மக...




பொன்னாத்தாவுக்கு
கிறுக்கு முத்திப்போச்சு..

தெருவுல யாரக்கண்டாலும்
வெத்தலவாயால வையுது...

பொட்டிக்கட கந்தசாமி
சம்சாரம்தான் பொன்னாத்தா.

ரெண்டுநாளா உள்ளுக்குள்ள
பொகஞ்சது இன்னைக்கு
ஊரெல்லாம் பொகையுது..

ஊரெல்லாம் பஞ்சத்துல
தவிச்சப்போ வெளியூருக்கு
வேலைக்கு போனாரு
கந்தசாமி

போன இடத்துல பொன்னாத்தாவுக்கு
தெரியாம சோடிசேர்ந்து
வாழ்ந்துபுட்டாரு

பதினாறு வருசத்துக்கு
முன்னால நடந்த கத அது!

சக்களத்தி வீட்டு நாயிக்கு
இங்கென்ன வேலன்னு
வையுறா பொன்னாத்தா

குடியிருக்க குடுச இல்ல
அரவயித்துக்கு கஞ்சியும் இல்ல

ஆளுசரத்துக்கு வந்து
நிக்கா சக்களத்தி மக.

கால்ல விழுந்து பாத்தாரு
கையப்புடிச்சி கதறி பாத்தாரு

நல்லபாம்ப மிதிச்சே கொல்லற
பொன்னாத்தாவுக்கு
கோழிவந்தாலும் ஒதுங்கி போற
புள்ளபூச்சி கந்தசாமி எம்மாத்திரம்?

நாளைக்கு காலையில
பஞ்சாயத்து;

கால்சட்ட போடாத சிறுசும்
வரும்
கோவணத்தோட பெருசும்
வரும்
சாகப்போற கிழடுகளும்
வரும்

பஞ்சாயத்த நெனச்சுக்கிட்டே
பஞ்சாரத்து கோழிக்குஞ்சு
மாதிரி அடஞ்சு கெடக்கா
சக்களத்தி மக.

ஆயிரந்தான் இருந்தாலும்
அப்பன கேவலபடுறத
பார்க்க பிடிக்கல அவளுக்கு.

விடியக்கால ரெயில
புடிச்சி வடக்க போயிட்டா.

அவ சாயல்ல ஒருத்திய
பம்பாயில
படுக்கையில பார்த்ததா
தெக்குத்தெரு முனியசாமி
சொல்லிட்டு போறான்.

தப்பான பொறப்புன்னா
தப்பாத்தான் போகனும்னு
சாபம் ஏதும் இருக்கா?

8 comments:

said...

அருமையாக இருக்கு!

said...

//
தப்பான பொறப்புன்னா
தப்பாத்தான் போகனும்னு
சாபம் ஏதும் இருக்கா?
//
நல்ல கேள்வி

நல்ல டச்சிங் கவிதை

said...

கவிதையை படித்தவுடன் மனசு பாரமாகிவிட்டது

said...

ரொம்ப அழகான கிராமியக் கவிதை..
ஆனா எனக்கு கடைசி வரியின் உள் அர்த்தம் சரியா விளங்கவில்லை..
//
தப்பான பொறப்புன்னா
தப்பாத்தான் போகனும்னு
சாபம் ஏதும் இருக்கா?
//

என்ன சொல்ல வர்றீங்க.. தெக்குத்தெரு முனியசாமி சொன்ன கணிப்பு உண்மைதான்ங்கிற அர்த்தத்தில வருத்தப்பட்டு இதை கூறியிருக்கீங்களா.. இல்லை தப்பான பொறப்புன்னா தப்பாத்தான் போகணும்ங்கிற பித்துக்குளி கணிப்புல சுத்துற இந்த சமுதாயத்தை சாடி இந்த கேள்வியை கேட்டுருக்கீங்களா..
கேள்வியின் தோணி தெளிவுபடவில்லையே... தயைக்கூர்ந்து சற்று விளக்கமுடியுமா...

அப்பறம் இன்னொன்னு.. சும்மா நக்கலுக்குத்தான் .. பெரிசுபடுத்த வேண்டாம்...
தெக்குத்தெரு முனியசாமிய அவன் பொஞ்சாதி சும்மாவா விட்டா..

Anonymous said...

kavithai nanraga irunthathu aanal yen manasu ganathu poivittathu..

snegamudan nirandhari.

said...

//தெக்குத்தெரு முனியசாமிய அவன் பொஞ்சாதி சும்மாவா விட்டா..
//
அதானே. முனியசாமிக்கு அவ்வளவு தைரியமா?

பொட்டிக்கடை கந்தசாமி புள்ளபூச்சி. தட்டி கேட்கும் பொன்னாத்தா கொலகாரியா? இது என்ன நியாயம்?
;-)

said...

Superb it is.

said...

sadhiq
urai kindren unn munal kari kendren unn munal enn entha thamil chorkali kanum pothu nen kavithai aluthum azluthalan alla pala kalukul eram utiya padaipalan
una kavithaiku enn anantha kannirum sarpanam .....