ஈழ மண்ணில்
பிறந்த ஒரே காரணத்திற்காக
வாழ்வெல்லாம் ரத்தம் கண்டு
அகதிகளாய் அவதிப்படும்
மக்கள்...
யார் மீது தவறென்றே
அறியாமல் வெடிகுண்டுகளுக்கு
என்று பலியாவோம் என
துடிக்கும் ஈராக் மக்கள்...
ரோஜாக்களுக்கு நடுவில்
வசித்தும் தீவிரவாத
முட்களால் தினம்தினம்
அவதிப்படும் காஷ்மீர் மக்கள்...
ஒட்டகத்தின் சிறுநீரை
தண்ணீராகவும் தோல்பைகளை
உணவாகவும் உட்கொண்டு
மரணத்தோடு போராடும்
சோமாலிய மக்கள்...
இவர்களைப்போல் உலகெங்கும்
வாடுகின்ற அப்பாவிகளுக்கு
என்று விடியல் பிறக்கிறதோ
அன்று நானும் கட்டாயம்
சொல்வேன்
"புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று.
Monday, December 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
வறுமை,யுத்தம் ஒருபுறம்
வளர்ச்சி வல்லரசு மறுபுறம்
இருவேறுபட்ட முகங்களாக உலகம்
அமைதியாக உறங்குகிறது.
உலக மக்கள் யாவருக்கும்
பசி, பட்டினி,போர்கள் , சண்டைகள் ஓழிய
உலகில் எங்கும் அமைதி நிலவ
ஒரு விடியலாக இந்த புத்தாண்டு பிறக்கட்டும்.
சென்ற புத்தாண்டின் போதும் உங்களின் இதே வரிகளை படித்துள்ளேன்! உண்மைதான் இன்னும் எதுவும் மாறவில்லை... இந்த ஆண்டிலாவது இவைகள் மாற வழிபிறக்கட்டும்.
எந்த உணர்வுகளோடு
கவிதை எழுதப்பட்டதோ
அதே உணர்வுகளை
கொஞ்சமும் பிசகாமல்
வாசிப்பவரும் உணரச் செய்கிற
கலைஞனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!
சும்மா ஒரு பேச்சுக்காக "Happy New Year" என்று உதட்டளவில் சொல்வதில் ஏதும் அர்த்தமில்லை என்பதே எனது கருத்தும். நல்ல கவிதை.
Actually I was not interested of reading poems before reading your poems. But, now I got very much interested. You admire me.
தங்களின் காதலுக்காக, உணர்வுகளுகாக, மிகிழ்ச்சிக்காக, தற்பெருமைகாக எழதப்படும், எழத்துக்களுக்கிடையே பிறருக்காக, எழுதப்படும் உங்கள் எழத்துக்களும், உங்கள் மனித நேயத்திற்கும் தலை வணங்குகிறேன்...
தினேஷ்
நல்லக் கருத்து. ஆனால் இவை தான் இன்றைய உலகின் அடையாளங்கள். இவைகளில் சிறிதேனும் மாற , நம்மால் முடிந்த வரை மாற்ற முயல்வோம்.
Post a Comment