நண்பர்களுக்கு வணக்கம்,
என்னுடைய இரண்டு கவிதைகள் இவ்வார ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கின்றன.படித்துவிட்டு உங்களது பின்னூட்டங்களை இடுங்கள்.
1.பறவைகளின் மொழி அறிந்தவன்
பூனைகளின் மொழி அறிந்தவனை
சந்தித்தேன்.
நாய்களின் பாஷையும்
கொஞ்சம்தெரியுமென்றான்.
விநோத ஒலியை அவன்
உருவாக்கியதில் நான்கைந்து
பூனைகள் அவன் காலை சுற்றின.
பூனைகளை
தடவிக்கொண்டே கை நீட்டினான்.
பறவைகளின் மொழியில்
புலவன் நானென்றேன்.
விரக்தியான புன்னகையொன்றை தந்தபடி
நகர்ந்து சென்றான்.
2.இனம்
இந்தக் கவிதை
இப்பொழுதுதான் பிறந்திருக்கிறது.
தாலாட்ட யாருமற்ற பின்னிரவில்
பீறிட்டு எழும் அழுகை
ஏதுமின்றி வெகு இயல்பாய்
மலர்ந்திருக்கிறது.
கால்களை உதைத்துக்கொண்டு
கண்களை உருட்டியபடி
விழிக்கிறது.
துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத வரையில்
இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்
-நிலாரசிகன்.
என்னுடைய இரண்டு கவிதைகள் இவ்வார ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கின்றன.படித்துவிட்டு உங்களது பின்னூட்டங்களை இடுங்கள்.
1.பறவைகளின் மொழி அறிந்தவன்
பூனைகளின் மொழி அறிந்தவனை
சந்தித்தேன்.
நாய்களின் பாஷையும்
கொஞ்சம்தெரியுமென்றான்.
விநோத ஒலியை அவன்
உருவாக்கியதில் நான்கைந்து
பூனைகள் அவன் காலை சுற்றின.
பூனைகளை
தடவிக்கொண்டே கை நீட்டினான்.
பறவைகளின் மொழியில்
புலவன் நானென்றேன்.
விரக்தியான புன்னகையொன்றை தந்தபடி
நகர்ந்து சென்றான்.
2.இனம்
இந்தக் கவிதை
இப்பொழுதுதான் பிறந்திருக்கிறது.
தாலாட்ட யாருமற்ற பின்னிரவில்
பீறிட்டு எழும் அழுகை
ஏதுமின்றி வெகு இயல்பாய்
மலர்ந்திருக்கிறது.
கால்களை உதைத்துக்கொண்டு
கண்களை உருட்டியபடி
விழிக்கிறது.
துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத வரையில்
இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்
-நிலாரசிகன்.
32 comments:
வாழ்த்துக்கள்!!!:-)
"துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத வரையில்
இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்"
மிக மிக அருமையான வரிகள் .
சதீஷ் ஜெயபாலன்
முசிறி
இரண்டுமே அருமை நிலா.வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நிலாரசிகன் ;-))
வாழ்த்துக்கள் அண்ணா.
வாழ்த்துக்கள்.
இரண்டுமே நல்லா இருக்கு நிலாரசிகன். முதல் கவிதை அதிகமாகப் பிடித்தது.
ஆ.வி. க்கு வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
வாழ்த்துக்கள்!
முதல் கவிதை கொஞ்சம் புரியலை எனக்கு! (எனக்கு இன்னும் பக்குவமும், ஞானமும் வேணுமோ!)
ரெண்டாவது சூப்பர்!
தூக்கிக் கொஞ்ச வேண்டிய கவிதைக் குழந்தை
Miga Miga Arumai iru kavidhaikalum.. Very Happy to see this in ananthavikatan.
THANGULADAYA KAVIDHAIGALIN MIGA PERIYA RASIGAN NAAN..... IDHUVEY NAAN THANGALUKKU EZHUTHUM MUDHAL PINNUTTAL........ ARPUTHAMAAN VARIHALUKKU SONTHAKAARAREY VAZHTHUKKAL
"துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத வரையில்
இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்"
மிக மிக அருமையான வரிகள் .
கலக்கல் நண்பா, வாழ்த்துக்கள்
Congrats from a fellow Wiproite!
அருமையான கவிதைகள்
வாழ்த்துக்கள் தோழரே
paravikalin moziel pulavan
virkthiyana punnagaiyondrai thanthapai narnthu sendran..
muthal arumai...
துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத வரையில்
இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்
arumai arumai....
Migha Arumai....
chandra
வாழ்த்துக்கள் நிலாரசிகன்.அருமையான கவிதைகள்.
அன்புடன் அருணா
இரண்டு கவிதைகளும் அருமை.
வாழ்த்துக்கள்!
துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத வரையில்
இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்//
EXCELLENT
1.பறவைகளின் மொழி அறிந்தவன்
NICE
வாழ்த்துக்கள்
vazhlthukkal.
nalla kavithai.
vazhlthukkal
nalla kavithaikal
முதல் கவிதை புரியுது.ஆனா புரியல.
2 வது நல்லா புரிஞ்சு,பிடிச்சுமிருக்கு.
தொடர்ந்து கலக்குங்க.
நா உஙளுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தேன் பாத்துருப்பீங்கன்னு நம்பரேன்.. ரொம்ப அழகா இருக்கு உங்க ரெண்டு குழந்தைகளும்..
வாழ்த்திய அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றி :)
வாழ்த்துக்கள் :-)
Arumai nanbare,
Ungal kavidhaigalukku naan adimai.. Unmaiyil neengal nilavirku mattumalla engal thanimaikum thunai nirkireergal ungal kavidhaiyaal..
Nandri
Sundar
ungal kavithai miha nanraha irukkirathu.ungalidam natpu kolla miha asaiyaha irukkirathu
"துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத வரையில்
இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்"
மிக மிக அருமையான வரிகள் .
Second one is very impressive friend.
Amazing lines at the end.
பறவை மொழி கவிதையில் ஏதோ ஒரு உள்ளுணர்வு உள்ளதாய் புலப்படுகிறது... வாழ்த்துக்கள் நண்பா!
"paravaikalin mozhi arinthavan"-intha karvam azhakaanathu:)
2-vathu kavithaikku sabaash!!
nanba super lines ,i want to write a kavithai in vigadan ,tell me the way for that ?........
Post a Comment