1.தனிமைதான் என்னை எழுதச்சொல்கிறது. தனிமைதான் என்னை எழுதவிடாமல் கொல்லவும் செய்கிறது. தனிமைக்குள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சுழல்கிறது என்னுலகம். அவ்வப்போது கதவுதட்டும் கனத்த காற்றில் உடைபட்டு மீண்டும் ஒன்றுகூடுகிறது என் தனிமை.
2. எறும்புகளை கொல்வது எளிது.தரையோடு தேய்த்து நசுக்கலாம்.மருந்து துகளில் அழிக்கலாம்.புத்தகத்தால் அடித்தும் கொல்லலாம். அழிப்பதற்கு பல வழி இருப்பினும் அழிக்கமுடியவில்லை மனதுள் ஊறுகின்ற விஷ எறும்புகளை.
3. தினம் தினம் எங்காவது மரித்துக்கொண்டிருக்கின்றன நட்புகள். அநாதை பிணமாய் நடமாடுகின்றன கைவிடப்பட்ட நட்புகள். தோளில் சுமக்கின்ற சிலுவைகளைவிட நெஞ்சில் சுமக்கும் சிலுவைகளில் கனம் அதிகமானதாகவே இருக்கிறது.
4.பாதங்களுக்காய் தவமிருந்தேன் பாதங்கள் கிடைத்தன.பாதைகளுக்காய் தவமிருந்தேன் பாதை கிடைத்தது. எனக்கான திசைகளை தேர்ந்தெடுக்க முற்படும் பொழுதில் உணர்கின்றேன் கடவுளின் பொம்மை நானென்று.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அவ்வப்போது கதவுதட்டும் கனத்த காற்றில் உடைபட்டு மீண்டும் ஒன்றுகூடுகிறது என் தனிமை.
அழிப்பதற்கு பல வழி இருப்பினும் அழிக்கமுடியவில்லை மனதுள் ஊறுகின்ற விஷ எறும்புகளை
அநாதை பிணமாய் நடமாட்டுகின்றன கைவிடப்பட்ட நட்புகள்.
எனக்கான திசைகளை தேர்ந்தெடுக்க முற்படும் பொழுதில் உணர்கின்றேன் கடவுளின் பொம்மை நானென்று.
arumaiyana varigal
Migavum arumai Nilaraseegan!
என் அன்பான தோழனுக்கும், இனிமையான மனிதனுக்கும், மாபெரும் கவிஞனுக்கும்,
என் நெஞ்சார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் படைப்புகளை போல், என்றென்றும் நீடூடி வாழ என் மனமார்ந்த பிரார்த்தனைகள்...
நிலா..அருமையான பதிவு..உரைகவிதைகள் நாலும் முத்துக்கள்..வாழ்த்துக்கள்
You have left 4 gems for the poetic world.
The last one was splendid which shows the presence of GOD.
Miga miga nalla kavithaigal...Vazhthukkal anbu nanbare......
Arumaiyana varigal... Ungaluku mattum eppadi ippadi yellam... superb
Post a Comment