Saturday, April 25, 2009
அறிவியல் புனைவுக்கவிதைகள் - பாகம் 2
1. நாளை பதில்
சொல்கிறேன் என்று
சொல்லிச்சென்றாள்.
நாளைக்குள் நுழைந்து
காயத்தோடு
மீண்டு வந்தேன்
இன்றைக்குள்.
2.பூமி மீண்டும்
மனிதர்களின் கைகளுக்குள்
வந்தது.
பாதாள அறைகளைவிட்டு
வெளியேறினர்
மக்கள்.
எங்கும் நிசப்தம்
நிலவ துவங்கிய
நாளொன்றின் அந்தியில்
இயந்திரக் குப்பைகளை
பொறுக்கிக் கொண்டிருந்தான்
வயிறு ஒட்டிய
சிறுவன்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நல்ல கவிதைகள்!
கவிதையில் அறிவியல் கற்பனையைச் சேர்ப்பது புதுமை!
-ப்ரியமுடன்
சேரல்
இரண்டாவது கவிதை ரொம்ப நால்லா இருக்கு நிலா!
நல்ல கற்பனையில் இருமையான கவிதைகள்
இயந்திரக் குப்பைகளை
பொறுக்கிக் கொண்டிருந்தான்
வயிறு ஒட்டிய
சிறுவன்.
very nice...
Very Nice.. keep it up :-)
முந்தைய அத்தியாயத்தை விட வலு குறைந்திருந்தாலும் சோடை போகவில்லை. முதல் கவிதை டாப்! தொடர்ந்து எழுதுவதால் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். படம் தான் தொக்கி நிற்கிறது.
Azhagana Karpanai Kavithaigal...... All the best....
நல்ல கவிதைகள்
அதிலும் இரண்டாவது
இயந்திரக் குப்பைகளை
பொறுக்கிக் கொண்டிருந்தான்
வயிறு ஒட்டிய
சிறுவன்.
அருமை
Post a Comment