Friday, June 05, 2009
எழுத்தில்லா இசை + சிதறல்கள்
மனதெங்கும் வியாபித்திருக்கிறது இனம்புரியாத ஓர் உணர்வு. அடர்குளிரில் போர்வைக்குள்ளிருந்தபடியே மனதிற்கு பிடித்த இசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். கனத்த மெளனங்களில் உறைந்துவிடும்போதெல்லாம் இசைதான் என்னை மீட்டெடுக்கிறது.பாடல்களைவிட புல்லாங்குழலின் இசையை அதிகம் விரும்புகிறது மனசு.
எழுத்தில்லா இசை என்னவோ செய்கிறது.பின்னிரவில் யாருமற்ற தனிமையில் கசிகின்ற இசையை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதுதான்.
***********************
ஏழாவது மாடியில் இருக்கிறது என் அறை. கண்ணாடி சன்னல்கள் நிறைந்த விசாலமான அறை. சன்னல்வழியே தூரத்து வான் ரசிக்கும் தருணங்கள் அற்புதமானவை. என் அறைக்கு அருகில் உயர்ந்த விருட்சம் ஒன்று நிமிர்ந்து நிற்கிறது. அந்த மரத்தில் தினமும் ஒரு ஜோடி பெயர்தெரியா பறவைகளை காண்கிறேன். விசித்திரமானதொரு ஒலியை எழுப்பியபடி கிளைவிட்டு கிளை பறந்துகொண்டிருக்கும் அதன் சிறகில் ஒரு நாளேனும் பயணிக்க விருப்பம். நேற்று பெய்த அடைமழைக்கு பின் அந்த பறவைகளை பார்க்க முடியவில்லை. சிலநேரங்களில் மழையும் வெறுப்புக்குள்ளாகிவிடுகிறது.பிடித்த பொம்மையை தூர எறியும் குழந்தைபோல.
***********************
இன்று படித்ததில் பிடித்த கவிதை:
The Eagle
He clasps the crag with crooked hands;
Close to the sun in lonely lands,
Ring’d with the azure world, he stands.
The wrinkled sea beneath him crawls;
He watches from his mountain walls,
And like a thunderbolt he falls.
Alfred, Lord Tennyson
***********************
பல வருடங்கள் கழித்து பால்ய நண்பனொருவனை இணைய அரட்டையில் சந்தித்தேன். காலத்தின் மாற்றத்தில்
வெகுவாய் மாறியிருந்தான். நொடிக்கொரு முறை ஷிட்டும்,நான்கெழுத்து ஆங்கில "எப்" கெட்டவார்த்தையும்
சரளமாய் வந்துவிழுந்தன.சிறு வயதில் ஒழுங்காய் வரட்டி தட்ட தெரியவில்லை என்று அவன் அம்மா அடித்த அடிகளை நினைவுகூர்ந்தேன். புல்ஷிட் என்றான். மாட்டுச்சாணம் நிறைந்த பால்யத்தை மறந்துவிடாத அவன்
நல்ல மனம் கண்டு சிரித்துக்கொண்டேன்.
*************************
என் வலைப்பூவை தொடரும் மனங்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டி இருக்கிறது.நூறு பேருக்கும் தனித்தனியாக பதிவிட்டு நன்றி சொல்ல விருப்பம்தான் அப்படி சொன்னால் 100 பூஜ்ஜியமாக மாறிவிடும் வாய்ப்பிருப்பதால் "அனைவருக்கும் நன்றி" என்கிற இருவார்த்தைகளோடு இந்த பதிவையும் முடித்துவிடுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
உங்கள் 100= 1000 ஆகவோ , 10000 ஆகவோ ஆக வாழ்த்துக்கள்.
மிக நன்றாக உள்ளது !! வாழ்த்துக்கள். !!!
மிக நன்றாக உள்ளது !! வாழ்த்துக்கள். !!!
ரசனையான பதிவு
vaazthukkal nilarasigan...
isai patriya varikal.. arumai
"piditha pommaiyai...."-nalla uvamai nila.
Vazhthukkal Nilaraseegan!
Thanimai romba kodumaiyayedum Isai mattum ilati...
Unga Blog Followers Count Pujiyam aghum nu enaku thonala unga Fans count jasti dhan agudhu ;)
Keep Writing ...
//பின்னிரவில் யாருமற்ற தனிமையில் கசிகின்ற இசையை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதுதான்.//
கனக்கிறது நெஞ்சம்.
//சிலநேரங்களில் மழையும் வெறுப்புக்குள்ளாகிவிடுகிறது.பிடித்த பொம்மையை தூர எறியும் குழந்தைபோல.//
அழகு. ஆயினும் சோகமாக இருக்கு. இதுவும் கடந்து போகும்.
100 என்பது உனக்கு குறைவு தோழா. மென்மேலும் வளர வாழ்த்துகள்
நல்ல பதிவு நிலா.
//சிலநேரங்களில் மழையும் வெறுப்புக்குள்ளாகிவிடுகிறது.பிடித்த பொம்மையை தூர எறியும் குழந்தைபோல.// :(
தனிமை வாட்டியதால் மழை கூட உனக்கு வெறுப்பாகிவிட்டதா நிலா?
//
புல்ஷிட் என்றான். மாட்டுச்சாணம் நிறைந்த பால்யத்தை மறந்துவிடாத அவன் நல்ல மனம் கண்டு சிரித்துக்கொண்டேன்.
//
ரசித்தேன் :)
Hi NilaRaseegan.....
//பின்னிரவில் யாருமற்ற தனிமையில் கசிகின்ற இசையை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதுதான்.//
உண்மை தான்..... அருமையான வரிகள்...
உங்கள் blog follower 100 i தோட்டத்தில் மிக்க மகிழ்ச்சி...
இது வரையும் நீங்க எழுதிய கவிதை கதைகளில் உங்களோட கருத்துகளை அழுத்தமாவும் அழமாவும் பதிச்சு இருப்பிங்க.... படிக்கும் போதெல்லாம் எனக்கு writer சுஜாதா அவர்கள் ஞாபகம் தான் வரும். அவரை போல நீங்களும் உயர்ந்த நிலையை அடைய என் பிராத்தனைகளும் வாழ்த்துக்களும்...
கவிதைகளையும் தமிழையும் நேசிபவர்கள் இருக்கும் வரை உங்கள் blog follower எண்ணிக்கை அதிகமாகுமே தவிர குறைய வாய்ப்பில்லை என்பது என் கருத்து...
வாசித்து வாழ்த்திய அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி :)
//சிலநேரங்களில் மழையும் வெறுப்புக்குள்ளாகிவிடுகிறது.பிடித்த பொம்மையை தூர எறியும் குழந்தைபோல.//
ஒண்ணும் எழுதத்தோணலை இந்த வரியை படிச்சப்பிறகு :(
Post a Comment