Saturday, June 20, 2009

தடங்கலுக்கு வருந்துகிறோம்



ஒலியும் ஒளியும்
ஞாயிறு மாலை திரைப்படம்
சக்தி 90
என் இனிய இயந்திரா
ஹிமேன்
ஐ லவ் யூ ரஸ்னா
நிர்மா
சுரபி
சித்ரஹார்
கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில்
கரைந்துபோன
பவித்திர காலத்தில்
ஒரு நிமிடமேனும் மீண்டும்
வாழ்ந்திடல் வேண்டும்.

21 comments:

Kalaivani said...

நல்லா இருக்கு....... தலைப்பும் அதற்கேற்ற படமும் Superb...
//கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில்
கரைந்துபோன
பவித்திர காலத்தில்
ஒரு நிமிடமேனும் மீண்டும்
வாழ்ந்திடல் வேண்டும்.//
Nice....

said...

உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது என்னையும் அழைத்துச்செல்லுங்கள்

எனக்கும் ஆவலாக உள்ளது

வெங்கடேஷ்

said...

உங்கள் கால யந்திரம் ரிப்பேரா நிலா :)

said...

Kalaivani sonnathai vazhi mozhigiraen...Giant Robot, chitramala / Rangoli (Hindi Songs), whats the good word (quiz program) are missing (may be you were too young that time). nice poem nila

said...

நல்ல ரசனையான பகிர்வு. ஞாயிறு படத்துக்கு முன்னால ஸ்பைடர்மேன் போடுவாங்க.அதுக்காகவும் செர்த்து 2 கி.மீ. தூரத்திலுள்ள பாட்டி வீட்டுக்குப் போய் பார்த்துட்டுவருவோம். ஒரு வெளியூர் பயணம் போறமாதிரி இருக்கும். சொந்தங்களையெல்லாம் சந்திக்க முடியும்.தலைப்பும் படமும் ஈர்க்கிறது.

said...

அருமை. அந்த நினைவுகளில் மூழ்குவதே சுகம்.

கவிதை தமிழ்மணத்தில் இணைக்கப் படவில்லை போலிருக்கிறதே. கவனியுங்கள்.

said...

வாழ்த்தியவர்களுக்கு என் நன்றிகள் :)

ராமலட்சுமி,

தமிழ்மணத்தில் என் பதிவுகளை இணைக்க முடியவில்லை. உதவி கேட்டு மடலிட்டேன். செய்தியோடையில் பிழை இருக்கலாம் என்று பதில் வந்தது. எப்படி சரி செய்வதென்று தெரியவில்லை :((

said...

பதில் கண்டு நானும் உங்கள் பதிவினை இணைக்க முயற்சித்துப் பார்த்தேன். புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை என்றே வருகிறது. டெம்ப்ளேட்டிலும் சமீபத்தில் ஏதும் மாற்றம் செய்த மாதிரி தெரியவில்லை. இதுபற்றி நன்கு அறிந்தவர் உதவி பெற்று சரி செய்திடுங்கள் சீக்கிரமே.

said...

உங்க கால இயதிரம் என்ன ஆச்சு அண்ணா? சிவப்பு வண்ண கண்களிருக்குமே, இருங்க எங்கிட்ட இருக்க பழைய இயந்திரம் எதையாவது எடுத்துட்டு வர்றேன்! (எடைக்குப் போட்டு பேரிச்சம்பழம் திண்ண ஞாபகம் இருக்கு!!!)

said...

நன்றாயிருக்கிறது, நண்பா!!

said...

கூகுல் தற்சமயம் தனி டொமைன் feed ரிடைரக்டை நிறுத்திவிட்டார்கள் தாங்கள் தனி டொமைனை பயன்படுத்துவதால் அதன் ஓடை முகவரியான http://www.nilaraseeganonline.com/feeds/posts/default இதையே கொடுக்க வேண்டும் தமிழ்மணத்தில் இணைக்கும் போது நீங்கள் கொடுத்த முகவரி blogger உடையது இது தற்சமயம் வேலை செய்யாது.

தமிழ்மணத்திற்கு ஒரு மடலிடுங்கள் இதுபற்றி மாற்றிவிடுவார்கள்

வெங்கடேஷ்

said...

1000000 நன்றிகள் வெங்கடேஷ்!! தமிழ்மணத்திற்கு மடலிட்டுவிட்டேன். :)

said...

கவிதை நல்லா இருக்கு

Arunkumar MCA said...

சக்திமானை விட்டுடிங்களே பாஸ்..

said...

நல்லா இருக்கு....... தலைப்பும் அதற்கேற்ற படமும் Superb..

said...

Romba nalla irundhadhu,,, appo ellam enga veetil TV kidaiyadhu... Pakkathu veetil parpom. 25 ps. vangitu tv parka viduvanga...
"CHANDRA KANDHA" maradhuteenga....

said...

nalla thalaippu..
migach chariyaana padam..
vazhththukal...nila..

said...

கவிதை நல்லா இருக்கு

Anonymous said...

அமாங்க இந்த சாட்டிலைட் உலகத்துல தடங்கலுக்கு வருந்துகிறோம் வரதே இல்லை இடைவெளியில் பேசி சிரிப்போம் இப்போது விளம்பரத்தை குட விட்டுவைப்பது இல்லை இந்த விளம்பர உலகம்

Anonymous said...

உங்களுக்கு வந்த பின்னுட்டங்கள் அனைத்தும் நிகழ்ச்சி பற்றியதாக உள்ளது ஆனால் இந்த கவிதை தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று ஒளிபரப்பு தடங்களை பற்றியதாக இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை போல் இருக்கிறது

said...

antha Thandagalayum TV pakaradhuna avalloo santhosama irukum.. ippo ellam yen da TV pakaromnu iruku.. orru mani neram oliyum oliyum college hostela patha piragu vantha santhosam.. ippo orru nall fulla pathalum varadhula.. intha Mana Thadangal yenu theriyala.. Kalathin matrama ?!

Anyways.. Nice one