Tuesday, June 16, 2009

ஷாஜகானின் உடைவாள்

1.

நானும் தவளையொன்றும்
வான் பார்த்து அமர்ந்திருந்தோம்.
கருமேகங்கள் சூழ்கையில்
மகிழ்வதும்
மேகங்கள் கலைந்து ஓடுகையில்
சோர்வடைவதுமாக
எங்களது நேரம் கடந்துகொண்டிருந்தது.
இருவருக்கும் இடையில்
கவனிப்பாரற்று
ஓடிக்கொண்டிருந்த நதியில்
விழுந்து தொலைந்தன
மழைத்துளிகள்.


2.
அந்த வனத்தின்
நிழல் பிரதேசத்தில்
எதையோ தேடிக்கொண்டிருந்தான்
அவன்.
தேடித் தேடி சலித்தவன்
தேம்பி அழ ஆரம்பித்தபோது
தோள் தொட்டு
எதைத் தேடுகிறாய் என்றேன்.
இங்கிருந்த
போதி மரத்தை காணவில்லை
என்ன செய்வேன் என்றபடி
கண்ணீர் மல்கினான்.
ஞானம் தேடிய புத்தர்கள்
மரம்தேடும்
பித்தர்களானது இப்படித்தான்.

3.
நிலவில் தவழ்வது சற்றே
கடினமாக இருக்கிறது.
நாளை
நடைபழக நட்சத்திரம்
கண்சிமிட்டியபடி காத்திருக்கிறது.

4.
உடைவாள்
கழுத்தில்
பதிய துவங்கிய கணத்தில்
நிகழ்காலம் திரும்பிவிட்டேன்.
கல்லறை
உலக அதிசயமாக
மாறிப்போனதை எப்போது
அறிவான் ஷாஜகான்?

10 comments:

said...

கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.

said...

தற்பொழுது இருக்கும் சூழலில் தவழ்வது கடினமாயினும், நாளைய சூழலில் நாம் நடப்பதற்காக காத்திருக்கும் நட்சத்திரத்தில் நாம் நடப்பதற்கான யுத்திகளை நிலவில் தவழும்பொழுதே சிந்திக்க துவங்கிவிட வேண்டும். இல்லையேல் அங்கே நடப்பதும் சிரமமாகிவிடும்.

said...

நல்லாயிருக்கு... நட்சத்திர வாரப் பதிவு என்பதால் கூடுதல் சிறப்பு!

said...

"...marangal thedum pitharkal aanathu.."
remba nallaa irunthathu..

athenna "shaajakaanin udai vaal"-nnu thalaippu.thanith thaniyaa yella kavithaikalume purinthathu..but,
yellam yentha vithaththil thalaippodu thodarpu paduththap pattullana??? athuthaan puriyala..nila!

said...

அந்த வனத்தின்
நிழல் பிரதேசத்தில்
எதையோ தேடிக்கொண்டிருந்தான்
அவன்.
தேடித் தேடி சலித்தவன்
தேம்பி அழ ஆரம்பித்தபோது
தோள் தொட்டு
எதைத் தேடுகிறாய் என்றேன்.
இங்கிருந்த
போதி மரத்தை காணவில்லை
என்ன செய்வேன் என்றபடி
கண்ணீர் மல்கினான்.
ஞானம் தேடிய புத்தர்கள்
மரம்தேடும்
பித்தர்களானது இப்படித்தான்

மிகவும் ரசித்தேன்

said...

//thenna "shaajakaanin udai vaal"-nnu thalaippu.thanith thaniyaa yella kavithaikalume purinthathu..but,
yellam yentha vithaththil thalaippodu thodarpu paduththap pattullana??? athuthaan puriyala..nila!//

குழப்பங்களும் சோகங்களும் நிறைந்த ஒரு அந்தியில் பதிவிட்டதனால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம்.

said...

naan kettathukku bathil neega sonna bathilukkul irukkutha?..
athuvum puriyala:)

said...

//naan kettathukku bathil neega sonna bathilukkul irukkutha?..
athuvum puriyala:)/

ஷாஜகானின் உடைவாள் நாலாவது கவிதையின் தலைப்பு. அதையே பதிவின் தலைப்பாக வைத்தேன். வேறெதும் உள்ளர்த்தங்கள் இல்லை :)

said...

ungaloda muthal bathilil irukkum "sogam".. vaarthai enakku sila paadal varikalai ninaivu paduththiyathu..

yen sogam yennoduthaan..
suga raagam soganthaane..

first one vaali-yudaiyathu..
2nd one vairamuththu-vinudaiyathu..

innum onnu athuvum vairamuththu sonnathuthaan.."kavingarkal sogamaanavarkal"

ungaloda 2 bathilkalukkum nantri..
thalaippu vishayam purinthathu:)
vaazhthukal nila..

yourfriendpr said...

கவனிப்பாரற்று
ஓடிக்கொண்டிருந்த நதியில்
விழுந்து தொலைந்தன
மழைத்துளிகள்.

excellent :) especially
விழுந்து தொலைந்தன