Saturday, July 11, 2009

7 ½



புல்லாங்குழலுடன் வந்தவனை
புரிந்துகொள்ள இயலவில்லை
உன்னால்.
கர்வத்தின் வெளியில்
புன்னகை தொலைத்து
பறந்துகொண்டிருக்கிறாய்.
மயிலிறகு வாங்க
உன்னிடம் வந்தேன்
நீயோ
என்னை எரிக்க விறகுகள்
விற்றுத் திரிகிறாய்.
யாருமற்ற வனத்தில்
வெகு இயல்பாய் உதிர்ந்துகொண்டிருக்கின்றன
நாம் வளர்த்த
விருட்சத்தின் இலைகள்.
அரவமற்ற இரவில்
இயல்பு தொலைந்து கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
நான்.

16 comments:

Anonymous said...

nice to read...

but, cudn't understand what does it try to tell...

-very distant person from poems

said...

படித்தேன்.. ரசித்தேன்..

தொடருங்கள்

said...

கவிதை நன்று.

தலைப்பு தான்ன்ன்ன்.

//யாருமற்ற வனத்தில்
வெகு இயல்பாய் உதிர்ந்துகொண்டிருக்கின்றன
நாம் வளர்த்த
விருட்சத்தின் இலைகள்//

அருமையான வரிகள். மிக ரசித்தேன்.
குறீயிடு அழகு

said...

நல்லா இருக்கு நிலா ... ஆனால் ஒரே ஒரு கவலை தான் - கவிதையில் கவிதை என்ற வார்த்தை clicheவாகிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன் :)

said...

கவிதையுள் இழையோடும் சோகம் மனதை அறுக்கிறது நிலா. சொல்லொண்ணா துயர் கவிகிறது இக்கவிதையை வாசிக்கையில்...;(

said...

I really enjoyed your poem.

" மயிலிறகு வாங்க
உன்னிடம் வந்தேன்
நீயோ
என்னை எரிக்க விறகுகள்
விற்றுத் திரிகிறாய். "

I felt that these lines somewhat do not match...?
I don't know .. may be you are right..
" virka and vanga " ...Now I see the match..!!
but...sorry..this is only my humble opinion..
I felt the above lines could be further enhanced
to make the poem more impressive..
I could be wrong also..

said...

அனானி,

உங்களுக்கு என்ன புரிந்ததோ அதுதான் கவிதை :)

said...

பின்னூட்டக்குறிப்பு:

இந்தக் கவிதை ஆண்/பெண் பற்றியது அல்ல. Its about IT.

வாசித்து வாழ்த்திய/விமர்சித்த அன்பர்களுக்கு நன்றி.

-நிலாரசிகன்.

said...

suvaithen..
kasakkirathu..athil sogaththeyn!!

niraya yezhuthunga..

vaazhththukal nila!!

said...

ketka maranthutten..

yenna thalaippu ithu!!??

Kalaivani said...

Very Nice Kavithai.....
Verupin alavai kurikka than thalaipin kuriyida.....
thalaipum padamum kuda nala irukku...
but yen nila raseegan soga kavithai athigam yeluthiringa....
unga kavithai ovvoru varthaiyilumae yetho oru vali athigam theriyuthu.....

said...

/மயிலிறகு வாங்க
உன்னிடம் வந்தேன்
நீயோ
என்னை எரிக்க விறகுகள்
விற்றுத் திரிகிறாய்./


ம் நன்றாகவுள்ளது.....

said...

/but yen nila raseegan soga kavithai athigam yeluthiringa....
unga kavithai ovvoru varthaiyilumae yetho oru vali athigam theriyuthu...../

கலைவாணி,

சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். இதயத்தில் இருப்பதுதான் கவிதையில் முகிழும்.

//ketka maranthutten..

yenna thalaippu ithu!!??//

இரசிகை,

என் பதில் "சனியன்".

வாழ்த்துக்கும்,வருகைக்கும் நன்றி முனைவர் இரா.குணசீலன்.

said...

அரவமற்ற இரவில்
இயல்பு தொலைந்து
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்
நான்....

உண்மையில் பலர் வாழ்வில் நடந்து கொண்டிருப்பதை உங்கள் வரிகளில் காண்கின்றேன்.

வாழ்த்துகள் நிலா.

தொடர்ந்து எழுதுங்கள்.

said...

அரவமற்ற இரவில்
இயல்பு தொலைந்து
கவிதை எழுதுக் கொண்டிருக்கிறேன்
நான்...

அருமையான வரிகள் சார்.

பலர் யாருக்கும் தெரியாமல் இரவில் செய்து கொண்டிருப்பதை கவிதையாக எழுதியுள்ளீர்கள்.

வாழ்துகள் சார்.

L said...

nice!