Friday, July 03, 2009

மழை வளர்த்தல்



கடுங்கோடையில் நானொரு
மழை வளர்த்தேன்.
கனவுகள் பிசைந்தூட்டி
பொம்மைகள்
பல வாங்கி குழந்தையென
வளர்த்து வந்தேன்.
கருமை சூழ்ந்த
ஓர் ஊமைப்பொழுதில்
என்னிலிருந்து நீங்கியது
பிள்ளைமழை.
அறையெங்கும் நிரம்பி
வழிந்தது
அனல்மணம்.

13 comments:

said...

நிலாரசிகன்,

மழையை/காதலி நினைவுகளை குழந்தைக்கு ஒப்பிட்டமை அருமை. நல்லா வந்திருக்கு. கனவை பிசைந்தூட்டி... அழகு.

பிரிவென்பது காட்சிப் பிழையே. வருந்தற்க.

said...

மனத்தைத் தொடும் அழகான கவிதை.

said...

வலியான கவிதை..இருந்தும் அருமையாய் உள்ளது

said...

நாம் நமதெனவென நினைத்து அன்பு காட்டிய ஒருவர் நம்மை விட்டு பிரிந்து செல்கையில் இரண்டு காரணங்களிருக்கலாம்.

ஒன்று நாம் நினைத்ததைப் போல அவர்களில்லாமலிருக்கலாம்

அல்லது, அவர்கள் நினைத்ததைப் போல நாமில்லாததை அவர் உணர்ந்திருக்கலாம்.

said...

வாழ்த்துகள்

said...

பல்வேறு கோணங்களில் கவிதைப் பயணப்படும் உணர்வு..

பிள்ளை மழையென்பதை நினைவுகளாகக் கொள்ளலாம். நேரடியாக மழையின் குளிர்ந்த சாரல் தந்த இதம் என்றும் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..

எப்படியாகினும், பிரிவுத்துயரின் வெம்மையும் அதன் துன்பமும் விரைவில் குளிரட்டும்..

வாழ்த்துகள்.

படம் ரொம்ப அழகு.. எங்க இருந்துங்க பிடிப்பீங்க??!!

said...

kanavugal pisainthootti..
oomaip pozhuthu...
araiyil vazhintha anal manam..

arumai..arumai...

vaazhththukal nila!!

yaarantha mazhai nila?

said...

ooopppsss...இரண்டு தளங்களில் இயங்கும் கவிதை!
இரண்டு தளங்களில் இருந்தும் மீள முடியாத வலி..
மீள விரும்பாத வரிகள்...வாழ்த்துக்கள் நிலா..

said...

நன்றி உயிரோடை,மாதேவி,ரகசிய சிநேகிதி,ராஜன்,பா.ரா.

said...

//ஒன்று நாம் நினைத்ததைப் போல அவர்களில்லாமலிருக்கலாம்

அல்லது, அவர்கள் நினைத்ததைப் போல நாமில்லாததை அவர் உணர்ந்திருக்கலாம்.
//

அற்புதமான வரிகள் ஒளியவன்.நிதர்சனமும் இதுதான்.

said...

//பல்வேறு கோணங்களில் கவிதைப் பயணப்படும் உணர்வு..

பிள்ளை மழையென்பதை நினைவுகளாகக் கொள்ளலாம். நேரடியாக மழையின் குளிர்ந்த சாரல் தந்த இதம் என்றும் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..

எப்படியாகினும், பிரிவுத்துயரின் வெம்மையும் அதன் துன்பமும் விரைவில் குளிரட்டும்..

வாழ்த்துகள்.

படம் ரொம்ப அழகு.. எங்க இருந்துங்க பிடிப்பீங்க??!!
//

பூமகள் கவிதையை மிகச்சரியாய் உள்வாங்கியதற்கு நன்றிகள்.
படங்கள் கொடுத்து உதவுவது கூகிளாண்டவர் :)

உங்களது வலைத்தளத்தின் பூக்கள் பறிக்கும் சிறுமி புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தபடங்களுள் ஒன்று.

said...

//vaazhththukal nila!!

yaarantha mazhai nila?//

மழையை யாரென்று கேட்டால் என்ன சொல்வது இரசிகை? :)

இந்தக்கவிதையின் மழையை ஒரு குறியீடாக பயன்படுத்தி இருக்கிறேன் என்றே நண்பர்கள் நினைத்திருப்பார்கள்.

நிஜம் அதுவல்ல.

said...

nijam athuvallannu solleerukkeenga..

appo ethu?

sonnaalume puriyaatha makku naan..
ithil neenga sollaamal vera vittutteenga??

sollunga..:)

ninaivugalnnuthaan yeduththukkanuma?


appuram... "google aandavarthaannu"(sattunnu sirippu vanthuttu..)
poomakal ku sonnapathil yenakkum thevaip pattathu... yethukkunna athey kelvi yenakkum irunthathu?

vaazhththukkal NILA!