Thursday, July 09, 2009
எனக்கான தீர்ப்புகள்
நிறைய எழுதவேண்டியதிருக்கிறது
என்னைப் பற்றி.
எதையும் பற்றாமல்
எதைப்பற்றியும் இல்லாமல்
என்னைப் பற்றிக்கொண்டு எழுதியாகவேண்டும்.
எனக்கு மட்டும் தெரிந்த
வலி
கனவு
வாழ்க்கை
கண்ணீர்
கவிதை
நீ
நான்
நாம்
அவர்கள்
அனைத்திற்குமான தீர்ப்புகள்
எழுதியே தீர வேண்டும்.
உச்சரிக்கும் முன்பே
ஊமையாகிப் போன
பேனாவை வைத்துக்கொண்டு
எதை எழுதுவது?
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
//உச்சரிக்கும் முன்பே
ஊமையாகிப் போன
பேனாவை வைத்துக்கொண்டு//
வலிக்கிறது. வசந்தகாலம் வரும் தோழா
aarambaththil irunthu...
mudivu varai..
yellaame nallaayirunthathu.
vaazhththukal nila:)
//உச்சரிக்கும் முன்பே
ஊமையாகிப் போன
பேனாவை வைத்துக்கொண்டு
எதை எழுதுவது?//
அருமை.
நல்ல (தமிழ்) பற்று ...
தீர்ப்பெழுதும் நேரம் நெருங்கிவிடவில்லை இன்னும். உங்கள் தீர்ப்பிற்குத் தேவையான பல இனிய சம்பவங்களும் இனிதான் அரங்கேறும். பொறுமை, அமைதி இது இரண்டும் அவசியாகுது இங்கே. தீர்ப்புகள் திருத்தப்படாதவைகளாக இருத்தலுக்கு பொறுமை அவசியம்!
கொடிய விஷம்
என்னவென்றான்,
தோல்வி+தனிமை
என்றேன்!
சிறந்த அனுபவம்
எதுவென்றான்,
மேலே சொன்னதைப்
பாரென்றேன்!
படித்துவிட்டு என்ன சொல்லி பாராட்டுவது என்று சிந்தித்தபோது ஏன் என் வார்த்தைகளும் மௌனமாயின? தெரியவில்லை
அருமை!!
WOW!
Arumaiyaaana kavidhai....
Very Nice...
thola neeyum ennai polthana valikalai sumakkiraya?
வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே..
//nanthini said...
thola neeyum ennai polthana valikalai sumakkiraya?//
வலிகள் இல்லாத வாழ்க்கை ஏது தோழி?
migavum arumai... Azh manasula irundhu oru varutham velipadukiradhu , unga varthaial..
azhagu varikku vari
வலியின் வலி உணரா
மொழியில்
உனது தோள்கள்
எனக்கு சுகம் தரும்
நந்தவனம்....!
பூக்களோடு இருக்கிறாய் நீ ....
என் பூந்தோட்டமாய் புலர்கிறாய்....!
பதிலறியா கேள்விகளோடு திறிகிறேன் நான்!
உன் வரவுக்காக....!
வலியின் வலி உணரா
மொழியில்
உனது தோள்கள்
எனக்கு சுகம் தரும்
நந்தவனம்....!
பூக்களோடு இருக்கிறாய் நீ ....
என் பூந்தோட்டமாய் புலர்கிறாய்....!
நீ என் தோழியா காதலியா?
பதிலறியா கேள்விகளோடு திறிகிறேன் நான்!
உன் வரவுக்காக....!
jai...
Post a Comment