Saturday, August 01, 2009
உலகின் மிக மோசமான பெண்கள்
உலகின் மிக மோசமான பெண் - 1
உலகின் மிக மோசமான
பெண்ணை நேற்று சந்தித்தேன்.
அவளது பார்வை,
அவளது தேவை,
ஓர் ஓநாயை ஒத்திருந்தது.
அவளது கறுத்த இதழ்களில்
வழிந்தபடி இருந்தது முந்தைய தினத்தின்
எச்சில்கள்.
குழந்தையொன்றின் விரல்களை
கொறித்துக்கொண்டிருந்தன
அவளது கூரிய பற்கள்.
துடிதுடித்த குழந்தையின்
கதறலை அலைபேசிக்குள்
முகம் மறைத்து கடந்தனர்
சிலர்.
கவிதைக்குள் மறைந்துகொண்டேன்
நான்.
உலகின் மிக மோசமான
பெண்ணை நேற்று சந்தித்தேன்.
அவளது பார்வை...
உலகின் மிக மோசமான பெண் - 2
நவீனத்தின் நீட்சியே நான்கு
காதல் என்றிடுவாள்.
புணர்ச்சியே பின்நவீனத்தின்
கோட்பாடு என்பாள்.
புரியாக்கவிதை எழுதும் ஐவரின்
கலியுக திரெளபதி
நான் என்றும் சொல்வாள்.
புரட்சிப்பெண் அவளின்
கண்களில் வழிகின்ற நஞ்சில்
நான்கு துர்மரணங்கள் நிகழ்ந்திருக்கும்.
அவள் உலகம்
அவள் வாழ்வு
அவள் அவள் அவள்
அவள் உலகில் தான்
அமைதியாக இருக்கிறான் அவன்.
உலகின் மிக மோசமான பெண்/ஆண் - 3
உலகின் மோசமான பெண்ணும்
மிக மோசமான பெண்ணும்
உலகின் மிக அற்புதமான
பெண்ணை சந்தித்தார்கள்.
ஆண்களில்லா உலகம்
உருவாக்குவது பற்றிய
தீர்மானம் நிறைவேறியது.
பிழைத்துக்கொண்டேன் என்றான்
உலகின் மிகச்சிறந்த
ஆண்.
பிழைகண்டேன் என்றான்
உலகின் மிக மோசமான
ஆண்.
சுற்றித்தொலைக்கிறது வெட்கம்தீரா
உலகம்.
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
1.குழந்தையொன்றின் விரல்களை கொறித்துக்கொண்டு என்றால் ஒரு குழந்தையை இரக்கமின்றி வதைப்பவள் என்று எடுத்துக்கொண்டேன், ஒரு வேளை வேறு அர்த்தாமாக இருப்பின் தெரியப்படுத்துங்கள்.
2.பல பேர் புரட்சிப் பெண் என்பதை தவறான நோக்குடன் எடுத்துக்கொள்கிறார்கள். ஆயினும் ஒரு பள்ளத்திலிருந்து வெளிவரும் பந்து குதித்து குதித்துதான் பொறுமையாக வரும். பார்ப்போம், எரிமலையின் வெடிப்புகள் சில பூக்களையும் கருக்குகிறது.
3.மிகச் சிறந்த ஆண்கள் பிழைத்துக்கொண்டது மகிழ்ச்சி! ஆணாதிக்கத்தின் தாக்கம் பெண்கள் மீது எப்படி இருந்திருக்கும் என்பது இந்த குரூரத்தில் புரிகிறது. ஒருவேளை ஒரு காலத்தில் பெண்ணாதிக்கம் ஏற்பட்டால் அப்பொழுதும் அதை எதிர்த்து குரல் கொடுப்பேன்.
மிக நன்று! ரசித்தேன், ரசித்தேன், ரசித்தேன் :)
-ப்ரியமுடன்
சேரல்
மூன்று கவிதைகளுமே என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன.
நேன்றுதான நானும் ஒரு பெண்ணை சந்தித்தேன். பல நாள் நல்ல பெண்ணென்று எண்ணி நேற்றுதான் ஏமாந்தேன் மோசமான பெண்ணென்று.
Nice poem Nanba :)
ஏன் இப்படி????
நன்றி
@ஒளியவன்
@சேரல்
@ஆ.மு
@அ.கா
@ உயிரோடை,
ஏன் இப்படி என்பதை மிகச்சரியாக புரிந்துகொண்டதற்கு நன்றி.
பல இப்படிக்கள் இப்படித்தான் இருக்கின்றனர்.
சில இப்படிக்கள் இதயம் உடைகின்றனர்.
சிலபல இப்படிக்கள் தெரிந்தும் தெரியாமல் நடக்கின்றன.
இப்படியால் வடிக்கப்பட்டிருக்கிறது
வாழ்க்கைச்சித்திரம்.
நிலா, கவிதையாக இது நன்றாக இருக்கிறது. மோசம் மிக மோசம் எல்லாம் ஆண்கள் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சில பெண்கள்கூட என்பதை அறிந்து வருத்தமாக இருக்கிறது. ;(
நல்ல பெண்களை பற்றியும் நாலு பதிவு எழுதுங்கள்.
உலகின் மோசமான் அதிமோசமான ஆண்/பெண் சொல்லப்பட்ட விதம் சூப்பர்
துபாய் ராஜா,
//நல்ல பெண்களை பற்றியும் நாலு பதிவு எழுதுங்கள்/
நல்ல பெண்கள் பற்றி நாற்பது எழுதியாகிவிட்டது. சில குரூர பெண்களை சமீபத்தில் சந்தித்தேன்.அதன் விளைவே இக்கவிதைகள். மற்றபடி ஒட்டுமொத்தமாக பெண்ணினமே மோசம் என்று சொல்லவில்லை.
நல்ல மனிதர்களும் மோசமான மனிதர்களும் எங்குமிருக்கிறார்கள்!
மோசமான பெண்கள் என்று இருக்கவே முடியாது. நல்ல விஷயங்களில் சில கெட்ட குணங்கள் வெளிப்படும் தான் அது கெட்டது என்று தெரிய வருகிறது. வெள்ளை தாளில் வெள்ளை பகுதியை பாருங்கள் ஒற்றை கருப்பு புள்ளியை தவிர்த்து.
//மோசமான பெண்கள் என்று இருக்கவே முடியாது. நல்ல விஷயங்களில் சில கெட்ட குணங்கள் வெளிப்படும் தான் அது கெட்டது என்று தெரிய வருகிறது. வெள்ளை தாளில் வெள்ளை பகுதியை பாருங்கள் ஒற்றை கருப்பு புள்ளியை தவிர்த்து.
Sun Aug 02, 12:54:00 PM//
ஜெசீலா,
ஒற்றை கருப்பு புள்ளி செல்லரித்துவிடுகிறது சில வெள்ளைத்தாள்களை.
வெள்ளைமனங்களை.
மோசமான பெண்கள் இருக்கவே முடியாது என்கிறீர்கள். மிகச்சரி.
என் கவிதையின் தலைப்பு வேறு.
வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி :)
yenakku puriyala nila...intha kavithai.
aanaal onnu...,
yella thavarukalukkullum oru sariyum
yella sarikalukkullum oru thavarum irunthutte thaan irukkum...
athu thavirkka mudiyaathathu nila!
vaazhththukkal:)
மோசமான சில மனிதர்களால் இந்த உலகமும் சில உயிர்களுக்கு மோசமாகிப் போகிறது... வேடிக்கை பார்க்கும் கூட்டம் இருக்கும்வரை வேதனைகளை மட்டும் சுமக்கும் ஜீவன்கள் இருக்கவேண்டியதுதான். மோசமான மணிதர்களுக்குள் எங்கோ உறைந்துகிடக்கும் ஒரு வடு நிச்சயமாய் இருக்கும்.
ஹாய் நிலாரசிகன்.....
நன்றாக இருக்கு உங்க கவிதை மற்றும் அதன் கருத்தும்....
என்ன செய்வது இப்படியும் சிலர் இருக்கதான் செய்கிறார்கள்...
நல்ல மனதுள்ள நால்வரை சந்த்திதால்.....
நல்ல மனம் என்னும் போர்வையில் உள்ள பத்து பேரையும் சந்த்திக்க வேண்டிதான் வருகிறது....
miga arumaiyaana padaippu vaazhthukkal
பெண்கள் அழகிய கவிதையாக வாழ வேண்டும் என்பதே என் எண்ணம். ஆனால் உங்களின் கவிதையைப் படித்தப் பிறகுதான் நான் சந்தித்தப் பெண்களை நினைத்துப் பார்க்கிறேன். இரண்டு வகை பெண்கள் வேண்டாம் இறைவா! இனி மோசமான பெண்களே, உருவாகாமல் பார்த்துக் கொள் என வேண்டிக்கொள்கிறேன்.
Post a Comment