Tuesday, October 27, 2009
நிசப்த பொழுதுகள்
1.
உலர்ந்த உதடுகள்
ஜன்னல் கம்பிகளில் பதிய
மழை வெறிக்கிறேன்.
சத்தமின்றி பெய்கின்ற
அடர் நீர்த்துளிகள்
சிறு சிறு குமிழ்களாகி
மெளனமாய் உடைகின்றன.
சப்தங்கள் மரணித்த
மழை
ஊனப் பறவையாய்
துடிதுடித்து அடங்கும்
தருணம்
எனக்கு மட்டும் கேட்கிறது
நிசப்தத்தின் சிரிப்பொலி.
2.
உச்சத்தின் முனகல்களை
அவள் வெளிப்படுத்த
எத்தனித்தபோது
உருவம் பெற்ற நிசப்தம்
அவளது சப்தங்களை
தின்று
என்னை நோக்கி வெறித்தது.
நிர்வாணத்தில் சுகித்திருந்தவனின்
கரம் பற்றி இழுத்துப்போனது.
இருளடைந்த அறைக்குள்
நுழைந்து
என்னை புணர் என்றது.
மறுப்பேதும் உரைக்காமல்
உடல் உதறி
நிசப்தத்திற்குள் நுழைந்துகொண்டேன்
நான்.
3.
அறைக்குள் மெல்ல
நுழைகிறது நிசப்தம்.
அரூப அலையாய்
என்னை சூழ்ந்துகொள்கிறது.
பின்,
பேரானந்தம் தரும்
கரங்களால்
என்னுயிரை திருகி எறிந்து
வெற்றுடல் மேல்
உமிழ்ந்து
ஒன்றும் அறியாத
பாவனையுடன் வெளியேறியது.
இப்போது,
ஓயாத பெரும் இரைச்சல்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
நிசப்த கணங்களில்.
நன்றி: தடாகம்.காம்
Labels:
கவிதை,
கவிதைகள்,
பிரசுரமானவை
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//எனக்கு மட்டும் கேட்கிறது
நிசப்தத்தின் சிரிப்பொலி.
நிர்வாணத்தில் சுகித்திருந்தவனின்
கரம் பற்றி இழுத்துப்போனது.//
ஆழ் மனதின் நுரை வெளிச்சம்
வாழ்த்துகள்
அன்பின் ராஜன்
3-me purinthaalum...
1st one rembap pidiththathu:)
vazhthukal nila..!!
//ஓயாத பெரும் இரைச்சல்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
நிசப்த கணங்களில்.//
//மறுப்பேதும் உரைக்காமல்
உடல் உதறி
நிசப்தத்திற்குள் நுழைந்துகொண்டேன்
நான்.//
Thanimaiyai nisapthamaai varaintha vitham arumai..
Vaazhthukal Nila.
சப்தங்கள் மரணித்த
மழை
ஊனப் பறவையாய்
துடிதுடித்து அடங்கும்
தருணம்
good one
அடேயப்பா! விமானத்தில் பறக்கும்போது காதுகள் அடைத்துக்கொள்ள ஜிவ்வென்றிருப்பதைப் போல உணர்ந்தேன். காமம், பரவசம், கிறக்கம் எல்லாம் தீண்டும் வரிகள்.//வெற்றுடல் மேல்
உமிழ்ந்து
ஒன்றும் அறியாத
பாவனையுடன் வெளியேறியது//
வரிகள் உச்சம். வாழ்த்துக்கள். உங்களைப் பார்க்க இங்கு வரவேண்டும் என நினைத்து, நினைத்து நாட்கள் கடந்திருக்கின்றன. இந்தப் புள்ளியில் உங்களை முதலில் சந்திக்க வேண்டும் என்றிருந்திருக்கிறது. அருமை நண்பா. இனி, நான் உங்கள் ரசிகன்!
நன்றி ராஜன்,ரசிகை,முத்துசாமி.
முதல் வருகைக்கு நன்றி மாதவராஜ் அய்யா.
உங்கள் எழுத்துக்குத்தான் நான் ரசிகன் :)
நிர்வாணத்தில் சுகித்திருந்தவனின்
கரம் பற்றி இழுத்துப்போனது.
இருளடைந்த அறைக்குள்
நுழைந்து
என்னை புணர் என்றது.
Romba Super ra irukku Nanba.
kavithai fulla nalla irukku nilaraseegan...
endralum mudahal kavithai vegu arputham....
//சப்தங்கள் மரணித்த
மழை
ஊனப் பறவையாய்
துடிதுடித்து அடங்கும்
தருணம்
எனக்கு மட்டும் கேட்கிறது
நிசப்தத்தின் சிரிப்பொலி.//
iyalbal azhagai kavargirathu...
nandri.
யாருமற்ற நிசப்த இரவில் பொழியத் தொடங்குகிறது வெள்ளை மழை இப்ப தான் முடிஞ்ச மாதிரி இருந்தது அதுக்குள்ள அடுத்த நிசப்த அலையா? ரசனை கவிதை நண்பா
இந்த மௌனப்பெருவெளி எனக்கு மிகப் பிடித்திருக்கிறது
Post a Comment