Wednesday, December 02, 2009

வலைப்பதிவு நண்பர்களின் மிக முக்கிய கவனத்திற்கு:

கடந்த இரு நாட்களாக என்னுடைய வலைப்பக்கத்தை Firefox அல்லது Google Chrome உலவியில்(Browser) திறக்க முடியவில்லை. www.nilaraseeganonline.com என்று முகவரியிட்டவுடன் கீழ் கண்டவாறு எச்சரிக்கை வந்தது.


 





உடனே கூகிளை தொடர்பு கொண்டு இதுகுறித்தான புகாரை அளித்தபோதும் நேற்று முழுவதும் கூகிளிடமிருந்து எந்தவொரு தகவலுமில்லை. அதே சமயம்
Stopbadware  தளத்தில் உதவி கோரியிருந்தேன். அவர்கள் உடனே அதாவது இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் என் வலைப்பூவை மீட்டுக்கொடுத்தார்கள்.


எதனால் இந்த நிலை ஏற்பட்டது?

ஒரு மால்வேர்(கிட்டதட்ட வைரஸ்) எனக்கு பின்னூட்டமாக வந்திருந்தது.
கொரிய அல்லது சீன மொழி போலிருந்த அந்த பின்னூட்டம் அநானியாக வந்திருந்ததை கண்டவுடன் அதனை Reject Comment செய்துவிட்டேன்.
இருந்தபோதும் எப்படியோ ஊடுருவி இருக்கிறது.  

எப்படி தடுப்பது?


1.அநானி கமெண்ட் போடும் வசதியை நிறுத்துங்கள்.
2. ரிஜெக்ட் செய்யும்போது கவனமாக செய்யுங்கள்.பல பின்னூட்டங்கள் இருக்கும்போது தவறுதலாக Publish செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.
3. Third party விஜ்ஜெட் அல்லது Html Code உபயோகிக்கும்போது கவனமாக இருங்கள்.
4. மாதம் இருமுறை வலைப்பூவை Backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
5.உங்கள் வலைப்பூ பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய கீழே உள்ள சுட்டிக்கு செல்லுங்கள்: (http://example.com என்பதற்கு பதில் உங்கள் வலைப்பூவை தாருங்கள்)

http://www.google.com/safebrowsing/diagnostic?site=http://example.com 

5. For tips on keeping your website clean and secure, please visit: http://stopbadware.org/home/security


பதிவர் உண்மைத்தமிழன் அவர்களின் வலைப்பூ இதே காரணத்திற்காக கூகிள் நிறுத்தி வைத்திருக்கிறது. எப்பொழுது மீட்டெடுக்க முடியும் என்பது இன்னும் தெரியவில்லை.
 


கவனம் நண்பர்களே! வலைப்பூ ஒன்றும் கல்வெட்டு அல்ல!!!



20 comments:

said...

பின்னூட்டம் மட்டுமல்ல ஓட்டை எங்க இருந்தாலும் வந்திடும். புகழ்பெற்ற blog, cms, forum களைக் குறிவைத்து இத்தாக்குதல் நடக்கிறது. அஞ்சல்.காம் கூட சமீபத்தில் தாக்குதலுக்குள்ளாகியது.

said...

எனக்கும் அதே சீன கமெண்ட் வந்தது.

பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லாமையால் ஒன்றும் செய்ய முடியவில்லை...

இருந்தாலும் வலைப்பூவில் இருந்த தேவையற்ற விட்ஜெட்டுகளை நீக்கிவிட்டேன். மேலும் பிளாகரின் டீபால்ட் டெம்ப்ளேட் இருந்தால் ஈஸியாக இது தாக்கும் என்று சொல்கிறார்கள்..

உண்மைத்தமிழனின் வலைப்பதிவை மீட்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்...

நீங்களும் உதவமுடியுமா ?

said...

ஒரு வாரமா, நம்ம சொந்தப் பதிவையே எடிட் செய்ய முடியலைங்க. எர்ரர்ன்னு வந்துக்கிட்டு இருக்கு.

நீங்க சொன்ன அதே சீன, கொரியமொழி பின்னூட்டங்கள் நம்ம இடுகைகளுக்கு ஏன் வருதுன்னே புரியலை. அதுலே என்ன இருக்குன்னுகூட புரியாத மொழி.

இத்தனைக்கும் நான் எந்த நிரலையும் புதுசாச் சேர்க்கலை.

என்னவோ நடக்குது..... மர்மமாய் இருக்குது......

said...

ரவி,

http://stopbadware.org/home/reportsearch

இந்த முகவரிக்கு சென்று உ.தமிழனின் வலைப்பூ முகவரியை கொடுங்கள்.

நேற்று இப்படித்தான் செய்தேன். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில் என்னால் என் வலைப்பூவை access செய்ய முடிந்தது. அவருடைய தளத்தை கூகிள் நீக்கிவிட்டதாக அறிந்தேன்.முயற்சிப்போம்.மீட்டெடுப்போம்.

said...

துளசி அம்மா,

உடனே take back up of your blog.

Steps to do:

Go to Blogger /dashboard/Settings/ here you will see "export blog" click that and download it to your computer.

DO NOT PUBLISH ANY COMMENT FROM ANONYMOUS.

said...

நன்றி நிலாரசிகன்.

ஆனால்..... எக்ஸ்போர்ட் க்ளிக்குனா ஃபைல் நாட் ஃபௌண்ட். எர்ரர்ன்னு வருது(-:

said...

http://beermohamedtamilgroup.blogspot.com/

- இவரோட பதிவும் காணும்

said...

துளசி அம்மா,

உங்களது வலைத்தளம் இதுவரை எந்த attackம் ஆகவில்லை.

இந்த முகவரியை சுட்டுங்கள். உங்கள் வலைப்பூ பற்றிய விபரம் அறியலாம்.

http://www.google.com/safebrowsing/diagnostic?site=thulasidhalam.blogspot.com

said...

touch wood!

Thanks.

said...

கோவி.கண்ணன்,

அவருக்கும் எனக்கேற்பட்ட பாதிப்பு இருக்கிறது.

இங்கே பாருங்கள்.

http://www.google.com/safebrowsing/diagnostic?site=beermohamedtamilgroup.blogspot.com

தமிழீஷ் மூலமாகவும் பரவுவதாக தெரிகிறதே!!

said...

//தமிழீஷ் மூலமாகவும் பரவுவதாக தெரிகிறதே!!

Wed Dec 02, 05:47:00 PM
//

நான் இணைப்பது இல்லை

said...

எனக்கும் கூட கொஞ்சம் பிரச்னை செய்கிறது வலைப் பக்கம்.தகவலுக்கு நன்றி!

said...

அவசியமான பதிவு தேவையான நேரத்தில். சந்தனமுல்லையின் சித்திரக் கூடமும் இதே பிரச்சனையில்:(! எச்சரிக்கைக்கு நன்றி நிலாரசிகன்.

said...

அக்கறையான பதிவு நிலா.நன்றி!

said...

UPDATE:

தமிழீஷ்ல் பிரச்சினை இல்லை.

மேலதிக தகவலுக்கு:

http://www.google.com/safebrowsing/diagnostic?site=tamilish.com

said...

இந்த விடயம் தொடர்பாக நானும் எனது சில கருத்துக்களைப் பதிவிட்டிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் படிக்கவும்.

திரட்டிகளின் கவனத்திற்கு : ஒழிக்கப்படவேண்டிய கருவிப்பட்டைக் கலாசாரம்

Anonymous said...

நன்றி நிலா ரசிகன். என்னோட பதிவு சந்தேகத்துல இல்லைன்னு சொல்லீருச்சு கூகுள்.

said...

thank you so much for the post..

said...

எச்சரிக்கைக்கு நன்றி நிலா.

blog back up எடுக்க இப்படியும் செய்யலாம்:

http://googlesystem.blogspot.com/2007/02/how-to-backup-blogger-blog.html

said...

//கவனம் நண்பர்களே! வலைப்பூ
ஒன்றும் கல்வெட்டு அல்ல!!!//

aamaamla....!!

k...nila.

thanks nila..